தமிழ் மொழி வரலாறு
91
இ > ஆவி; ஓய்
~ ஓ + இ > ஓவி. ‘ஆவியர் பெருமகன்’,46
‘ஓவியர் பெருமகன்’47
முதலிய சொற்களைக் காண்க.
தொல்காப்பியர் காலத்தில் ‘அஇ’ என்பது ‘அய்’ என்றாகிவிட்டது. குற்றுயிர் மெய்யொலியால்
தொடரப்படும்பொழுது இடத்தால் அது நெடிலாவதால், அடியின் தொடக்கத்தில் நெட்டசைக்குப் பதிலாக
அது நிற்கலாம். இவ் ‘ஐ’ (அஇ) மொழி முதலில் வருகையில் 1 1/2 மாத்திரை உடையதென்றும் பிறவிடங்களில்
ஒரு பிற்கால இலக்கணஆசிரியர்கள்
பேசலாயினர்.48
3. 3 சில ஒலி
வழக்குகள்
i குற்றியலுகரம்
மெய் குற்றுயிர் / நெட்டுயிர் (மெய்) (மெய்) (உயிர்) (மெய்) வெடிப்பொலி
உகரம்*
என்னும் வாய்பாட்டு வடிவத்தின் இறுதி உயிர் உகரமாகும். குற்றுயிர் உகரத்திலிருந்து
வேறுபட்டு மேலும் குறுகிய உகரம் எனும் பொருளில் இவ்வுயிர் குற்றியலுகரம் என அழைக்கப்படுகிறது.
குற்றியலுகரம் என்ற சொல் வெடிப்பொலிகளை உச்சரிக்கையில் ஏற்படும் உயிர் போன்றதொரு
விடுப்பொலியைக் குறிக்கும் எனவும் விளக்கப்படுகிறது. குற்றியலுகரம் அது சார்ந்து வரும் வெடிப்பொலியின்
பிறப்பிடத்திலேயே பிறக்கிறது; அதற்கெனத் தனிப்பிறப்பிடம் இல்லை எனத் தொல்காப்பியர்
கூறுகிறார்.49
குற்றியலுகரத்தை ஒரு விடுப்பொலி
46.
சிறுபாணாற்றுப்படை,
86 ஆவது வரி
|
“அருந்திற
லணங்கின் ஆவியர் பெருமகன்”. |
47.
சிறுபாணாற்றுப்படை,
122 ஆவது வரி
|
“உறுபுலித்
துப்பின் ஓவியர் பெருமகன்”. |
48.
நன்னூல், 95
|
“தற்சுட்
டளபொழி ஐம்மூ வழியும்
நையும்
ஒளவும் முதல் அற் றாகும்”. |
*
ஈரசைச்
சொற்களில் முதலுயிர் நெடிலாக இருக்க வேண்டும். -ஆ-ர்.
49.
தொல்காப்பியம்,
101
|
“சார்ந்துவரி
னல்லது தமக்கியல் பிலவெனத்
தேர்ந்துவெளிப்
படுத்த ஏனை மூன்றும்
தத்தம்
சார்பிற் பிறப்பொடு சிவணி
ஒத்த காட்சியிற்
றம்மியல் பியலும்”. |
|
|