தமிழ் மொழி வரலாறு
92
எனக்கொள்ளாவிட்டால்,
குற்றியலுகரத்திற்குத் தனி ஒலிப்புமுறை இல்லாது வெடிப்பொலிகள் பிறக்கின்ற
அவ்விடங்களிலேயே இவ்வுகரமும் பிறக்கும் என்ற தொல்காப்பியரின் கூற்றைப் புரிந்து
கொள்வது சிரமமேயாகும். இது இதழ்ச் சாயல் பெற்ற ஒலி அன்று, மொழியிறுதி தவிர இயல்பாகப்
பேசுகின்ற பேச்சில் சாதாரணமான உகரமாகவே ஆகிறது. மொழி இடையிற் கூறப் பின்வரும்
இடங்களைத் தவிர பிற இடங்களில் உகரம் வெறும் வெடிப்பொலியாகவே உள்ளது. 1. இரட்டித்த
வெடிப்பொலிக்குப் பின்னரும்,
2. வெடிப்பொலியுடன் தொடங்கும் சொல்லுக்கு முன்னரும் வரும்
பொழுது உகர உயிர் சாதாரணமாக உச்சரிக்கப்படுகிறது.50
இந்த இரண்டாவது சூழலில் வெடிப்பொலி இரட்டிக்கிறது.
சான்று : பாக்கு + கடிது >
பாக்குக் கடிது
முன்னிலையில்
உருபேற்கும் கட்டு வடிவமான ‘நிம்’ என்பது தொல்காப்பியர் காலத்தில் ‘நும்’ என மாறி
விட்டது. குற்றியலுகரம் அம் மூக்கொலியிலிருந்து தனித்த ஒலியன்மையின் இது உண்மையில் நகர
மெய்யோடு பிறக்கும் விடுப்பொலி மகரத்தோடு முடிந்த வடிவமேயாகும். இது உண்மையில்
நகரத்தின் விடுப்பொலியாகையால் நுந்தை என்ற சொல்லில் மொழி முதலில் வருவதாகச்
சுட்டப்படுகிறது. தொல்காப்பியரே இவ்விடுப்பொலி அடிக்கடி இதழ்குவி ஒலியான உகரமாக
மாறுகிறது என ஒப்புக்கொள்கிறார்.51
ii குற்றியலிகரம்
வெடிப்பொலிகளை
உச்சரிக்கையில் ஏற்படும் இகரம் போன்றதொரு விடுப்பொலி ஒன்று உண்டு. அவ்வொலி
குற்றியலிகரம்
50.
தொல்காப்பியம், 408, 409
|
“அல்லது கிளப்பினும்
வேற்றுமைக் கண்ணும்
எல்லா இறுதியும் உகரம்
நிலையும்”.
“வல்லொற்றுத்
தொடர்மொழி வல்லெழுத்து வருவழித்
தொல்லை இயற்கை
நிலையலும் உரித்தே”. |
51.
தொல்காப்பியம், 67, 68
|
“குற்றிய லுகரம்
முறைப்பெயர் மருங்கின்
ஒற்றிய நகரமிசை
நகரமொடு முயலும்”.
“முற்றியலுகரமொடு
பொருள்வேறு படாஅது
அப்பெயர் மருங்கின்
நிலையிய லான”.
|
|
|