பக்கம் எண் :

என
 

தமிழ் மொழி வரலாறு

93

என்றழைக்கப்படுகிறது. முன்னர் குறிப்பிடப்பட்ட உகரம் போன்ற விடுப்பொலியுடன் இது ‘இடச்சார்பான ஊசலாட்ட ஒலியாக’ ( Positional Variant) வருகிறது. உகரம் போன்ற விடுப்பொலி தொடர்ந்து யகர மெய்யில் தொடங்கும் சொல் வந்தால் இகரம் போன்ற விடுப்பொலியாக மாறுகிறது.52 சான்று : பாக்கு + யாது > பாக்கியாது.

அகச்சந்தி ( Internal Sandhi) எனக் கூறத்தக்கதில் இவ்விகரம் உருபு முடிவில் வருவதாக நம்பக் காரணமுண்டு. ஒரு சொல்லுக்குள் மகர மெய்க்குப் பின்னர் ‘யா’ வருமாயின், மகர மெய் இகரம் போன்றதொரு விடுப்பொலியைப் பெறுகிறது.

சான்று : கேண்ம் + யா > கேண்மியா.53

iii ஆய்தம் (இவ்வொலியை தமிழ்ப் பேரகராதி k எனக் குறிக்கும்.)

மூன்றாவது ஒலி ஆய்தமாகும். ஆய்தத்தின் தனித் தன்மையைப் புரிந்து கொள்வதற்கு முன்னுரையாகச் சில செய்திகளை இங்குக் குறிப்பிட வேண்டும்.

மெய்ம் மயக்கங்கள் :

இரட்டித்த வெடிப்பொலிகளைப் பற்றிய ஒரு செய்தியை முதலில் குறிப்பிட வேண்டும். வ், ல், ள் ஆகியவற்றில் முடியும் ஓரசைச் சொற்கள் வெடிப்பொலியை முதலாக உடைய சொற்களால் தொடரப்படும் பொழுது இரட்டித்த வெடிப்பொலிகளைத் தோற்றுவிக்கின்றன. இங்கு அவற்றின் பொருளைப் பொறுத்த வரையில் சில கட்டுப்பாடுகள் உள்ளன. ‘பல பொருள் ஒரு சொல்லை’ ( Synonym) மொழி தவிர்க்கும் போக்கும் கிடைக்கக்கூடிய இருவடிவங்களை வேறுபடுத்தும் முயற்சியும் உள்ளன. இத்தகைய ‘பொருள் கட்டுப்பாடுகள்’ பிற்காலத்திய வளர்ச்சிகளாயிருக்கக்கூடும் சில சந்திமாற்றங்களை இங்குக் குறித்துக் காட்டலாம்.


52. தொல்காப்பியம், 34

 

“குற்றிய லிகரம் நிற்றல் வேண்டும்
யாவென் சினைமிசை உரையசைக் கிளவிக்கு
ஆவயின் வரூஉம் மகரம் ஊர்ந்தே”.

53. தொல்காப்பியம், 35

 

“புணரியல் நிலையிடைக் குறுகலும் உரித்தே
உணரக் கூறின் முன்னர்த் தோன்றும்”.