பக்கம் எண் :

1

தமிழ் மொழி வரலாறு

94

1. (மெய்) உயிர் வ் + வெடிப்பொலி - > (மெய்)

உயிர்வெடிப்பொலி வெடிப்பொலி :

அவ் + கூடிய > அக்கடிய
 

2. அ (மெய்) உயிர் ல் + த் - > (மெய்) உயிர் ற்ற்

கல் + தீது > கற்றீது

ஆ (மெய்) உயிர் ள் + த் > (மெய்) உயிர் ட்ட்

முள் + தீது > முட்டீது

(அல்லது)

(அ) + (ஆ) என்பனவற்றை இணைத்து (மெய்) உயிர் ல் / ள் + த் > (மெய்) உயிர் ற்ற் / ட்ட் என விளக்கலாம்.

முதல் வகையைப் பொறுத்தமட்டில் ஆறு வெடிப்பொலி இரட்டைகளும் இடம் பெறுகின்றன. இரண்டாவது வகையைப் பொறுத்தமட்டில் நாவளை அல்லது நுனியண்ண வெடிப்பொலி இரட்டைகளே இடம் பெறுகின்றன. மொழி முதல் வரும் குறுகிய திறப்பசைகளுக்குப் பின்னரே இந்த வெடிப்பொலி இரட்டைகள் வருகின்றன. பல இடங்களில் ஒரு மாற்று வடிவம் வருகின்றது. அதை நெடில் உரசொலி என நான் கருதுகிறேன். இம்மாற்றொலி ‘ஃ’ எனக் குறிக்கப்படுகிறது. அதைத் தொடர்ந்து குறில் வெடிப்பொலி வருகிறது.

நெடில் மெய்களை இரு தனி மெய்களாகக் கருதல்

மேலே கூறப்பட்ட இரட்டித்த வெடிப்பொலிகள் மட்டுமே, இரு வேறுபட்ட மெய்யொலிகள் ‘ஓரினமாதலின்’ (Assimilation) விளைவு என்பது தொல்காப்பியர் கருத்தாகும். ஆனால் தொடக்கத்தில் எல்லா இரட்டித்த மெய்யொலிகளுமே இத்தகைய சந்திகளின் விளைவே என நம்பக் காரணமுள்ளது.54

“யாப்பியல் அளவு கெடாதிருக்க முதலில் தனித்து இருந்த மெய்யொலி இரட்டிக்கும் போக்கு பிற்காலத்தில் ஏற்பட்டது. ‘என’ என்பதற்கு மாறாக ‘என்னை’ என்ற வடிவம் பெருவழக்குப் பெற்றதைச் சான்றாகக் காட்டலாம்.”

தொல்காப்பியரே ‘அஃகு’ என்ற சொல்லைப் பயன்படுத்துகிறார்.55 இதன் பொருளும் ‘அல்கு’ என்பதன் பொருளும் ஒன்றே.


54. Bh. Krishnamurthy:

Telugu Verbal Bases, California.

55. தொல்காப்பியம், 1129

  “குறித்தெதிர் மொழிதல் அஃகித் தோன்றும்”.