தமிழ் மொழி வரலாறு
95
அஃகு என்பது ‘அக்கு’ என்பதன்
மாற்று வடிவம் என விளக்கலாம்.
‘அல்கு’ என்பது ஓரினமாதலின்
விளைவாக ‘அக்கு’ என ஆகியிருக்க
வேண்டும்.
இவ் ஓரினமாதலை
விளக்குவதற்கு, இடைப்பட்ட நிலையில் ‘அற்கு’
என்ற வடிவம் இருப்பதாகக்
கொள்ள நேரிடலாம்.
தொல்காப்பியரின்
கட்டுப்பாடு - ஒரு பிற்கால வளர்ச்சி
‘முள் + தீது > முட்டீது
ணு முஃடீது’. இங்கு வெடிப்பொலி இரட்டையானது
உரசொலி இரட்டையுடன் உறழ்ந்து வருகிறது. இது ஒரு பயனிலைத் தொடராகும். அடைத் தொடர்
என்பன போன்ற பிற அமைப்புக்களில் இத்தகைய மாறுபாடுகள் இல்லை. ‘முள் + தீமை’ என்பது
முட்டீமை என்று மட்டும் வருமேயன்றி ‘முஃடீமை’ என வராது. பிற்காலத்துக் கட்டுப்பாடு என்ன
என்பதை இது காட்டுகிறது. வகர மெய் முடிவிற்கு ஒரு விதியையும், ல்/ள் முடிவிற்கு ஒரு விதியையும்
என இரு விதிகளைத் தந்துள்ளார். முன்னரே குறிப்பிட்டது போல இச்சந்தி விதிகள் எல்லாம்
தொல்காப்பியத்தில் காணப்படுகின்றன.
ஒரு குறிப்பு
பொருளைப் பொறுத்த வரையிலான வரையறை அல்லது
கட்டுப்பாடு என்பது பிற்காலத்திய வளர்ச்சி என்று மட்டும் கொள்ளலாம். ளகர, ழகர மெய்
முடிவுகளில் மட்டுமின்றி வகர மெய் முடிவிலும் கூட வெடிப்பொலி இரட்டையும் உரசொலி இரட்டையும்
மாற்று ஒலிகளாக வருகின்றன.
வடிவங்களைப் பற்றிய ஓர்
ஆய்வு
வகர மெய்யில் முடிவதாக நான்கு சொற்களையே
தொல்காப்பியர் தருகிறார். ‘அவ், இவ், உவ்’ ஆகிய சுட்டு வடிவங்களையும், ‘தெவ்’ என்பதையும் அவர் குறிப்பிடுகிறார். ‘எவ்’ குறிப்பிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
ஏனெனில் ‘யா’ என்பது குறிக்கப்படும் பொழுது வரும் மாற்று வடிவமே இவ்வடிவமாகும்.
உரையாசிரியர்கள் தரும் பழைய சொற்களை, தொல்காப்பிய விதிகளைக் கொண்டு ஆராய்ந்தால்
வகர மெய்யில் முடியும் வேறு வேர்களைக் கண்டுபிடிக்கலாம். ‘எஃகு, கஃசு, பஃது, கஃறு, கஃபு,
கஃடு’ போன்ற சொற்கள் காணப்படுகின்றன. இவற்றில் உள்ள இரண்டாவது அசையைச் சொல்லாக்க
ஒட்டு என விட்டுவிட்டால், ஆய்தத்திற்குப் பதில் வகர மெய்யைப் பெறுகிறோம்.
|