தமிழ் மொழி வரலாறு
96
‘எவ்’ என்னும் வேர்
‘எஃகு’ என்ற சொல்லில்
உள்ள சொல்லாக்க ஒட்டை நீக்கினால், எஞ்சியுள்ள வேர் ‘எவ்’ என்பதாகும். எவ்
ணு எய்
¥ எ.
‘கவ்’ என்னும் வேர்
‘கஃசு, கஃபு’ முதலிய சொற்கள் ‘கவ்’ என்னும் வேரைக்
கொண்டுள்ளன. (கவ் + சு > கஃசு, கவ் + பு > கஃபு) ‘கஃச’ என்பதன் பொருள் ‘பகுக்க’,
‘இரண்டாகப் பிரிக்க’ என்பதாகும். ‘கஃபு’ என்பதன் பொருள் ‘கிளை’ என்பதாகும். இதன்
மாற்று வடிவம் ‘கப்பு’ என்பதாகும். ‘கஃசு’ என்பதன் மாற்றுவடிவம் ‘கச்சு’ என்பதாகும். ஆனால்
அது இன்று வேறொரு தனிப் பொருளில் வழங்குகிறது. ‘கஃது’ என்பதன் மாற்று வடிவம்
கிடைக்கவில்லை. ஆனால் அதே வேரும், ஒட்டும் பெற்றிருப்பதுடன் சொல்லாக்க அசை
அகரத்தையும் பெற்றுள்ள ‘கவடு’ என்ற பிறிதொரு சொல் உள்ளது.
‘வெவ்’ என்னும் வேர்
வெவ் + க > வெஃகா. ‘வெஃகா’ என்பதில் ‘வெவ்’ என்பது
வேர். இதனுடைய மாற்றுவடிவம் ‘வெம்’ என்பதாகும். வெஃகா என்பது ‘விரும்பத்தகு சோலை’ எனப்
பொருள்படும். காஞ்சீபுரத்தில் அப்பெயரில் ஒரு தலம் உண்டு.
‘பவ்’ என்னும் வேர்
‘பஃது’ என்பதில் ‘பவ்’ என்பது வேராகும். ‘பவ்’ என்பதன் பொருள்
‘பரவுதல்’ என்பதாகும். ‘பவ்வம்’ என்ற சொல் இதற்குச் சான்றாகும். ‘பா’ அல்லது ‘பாவு’
என்ற சொற்களோடு இது தொடர்புடையது. ‘பத்து’ என்ற எண்ணுப் பெயரின் மாற்று வடிவம் ‘பஃது’
என்பதாகும்.
‘பல்’ என்னும் வேர்
‘பஃறி’ என்னும் சொல்லின் வேர் ‘பல்’ என்பதாகும். பல் + தி >
பஃறி. ‘தி’ என்பது சொல்லாக்க அசையாகும்.
‘கல்’ என்னும் வேர்
‘கஃது’ என்பது ‘கல் + து’ என்று இருக்கலாம். ‘கல்’ என்பது ‘கன்’
(= கறுப்பு) என்னும் பழைய வடிவத்தைக் கொண்டதாயிருக்க வேண்டும். ‘கன்னங்கறேல்’ என்ற
தொடரில் ‘கள்’ என்னும் பழைய வடிவம் இன்றும் வழக்கில் உள்ளது.
|