தமிழ் மொழி வரலாறு
97
‘சுல்’ என்னும் வேர்
சுல் + து > சுஃறு. சுல்
என்பதன் பொருள் ‘வீசுதல்’ அல்லது ‘அலைதல்’ அல்லது ‘வட்டமாய் நகர்தல்’ என்பதாகும்.
‘சுலவு
~ உலவு என்னும் சொற்களை நோக்குக.
பனைமரம் காற்றில் சலசலப்பது போன்ற ஓசையைக் குறிக்கச் ‘சுல்’ எனும் சொல் பயன்படும்.
‘சுஃறென்னும் தண்டோட்டுப் பெண்ணை’ என்ற தொடர் தொல்காப்பிய நச்சினார்க்கினியர்
உரையில் ஆளப்பட்டுள்ளது. (சுஃறு என்பது இங்குத் தவறாக ‘சுஃçறு’ என இடம் பெற்றுள்ளது. இது
பின்னர் விளக்கப்படும்.) இதன் மாற்று வடிவமான ‘சுற்று’ என்பது இன்றும் வழக்கில் உள்ளது.
‘வட்டத்தில் செல்லுதல்’ என்னும் பொருளில் அது வழங்குகிறது.
முடிவு
மேலே காட்டப்பெற்ற சான்றுகள் பின்வரும் உண்மைகளைத்
தெளிவுபடுத்துகின்றன.
1. தொடரில் உரசொலி வடிவம்
மட்டுமே வரும் என்ற கட்டுப்பாடு
ஆரம்பத்தில்
இருந்ததில்லை.
2. தொல்காப்பியர்
காலத்திற்கு முன்னர் வெடிப்பொலி நலிந்துஉரசொலியாகியது.
ஆய்தத்தின் ஒலி மதிப்பு
ஆய்தத்தை ஒலிப்பிலா உரசொலி எனக் கொள்வது பொருந்துமா?
தமிழ் நெடில் (இரட்டித்த) வெடிப்பொலியினுடைய மாற்றொலியின்
உச்சரிப்பு என்ன? பிற திருந்திய திராவிட மொழிகளில் இதனோடு ஒப்பிடத் தக்கதாக
ஒன்றுமில்லை என்பதையும் நினைவிற் கொள்ள வேண்டும்.
ஆய்தத்தின் இக்கால
உச்சரிப்பு
‘எஃகு’ என்ற ஒரே
சொல்தான் இக்காலத் தமிழில் வழக்கில் உள்ளது. அது (exxu) என
உச்சரிக்கப்படுகிறது. (erru) என்பது இதனது மாற்று உச்சரிப்பாகும். பிற சொற்கள்
இலக்கண மரபில் மட்டுமே வழக்கில் உள்ளன. ‘கஃசு’ என்பது (kaccu) என்றும்(kahsu)
என்றும் உச்சரிக்கப்படுகிறது. கஃபு என்பது (kaழூழூu) என்றோ (kahpu) என்றோ உச்சரிக்கப்படுகிறது. முஃடீது என்பது (muhridu)
என உச்சரிக்கப்படுகிறது.
|