தமிழ் மொழி வரலாறு
98
டகர, தகர வெடிப்பொலிகளைத்
தவிர்த்து ஏனைய வெடிப்பொலிகள் வரும் முதலாவது பிரிவிற்கும் இவ்விரண்டு வெடிப்பொலிகள்
மட்டுமே இடம் பெறும் இரண்டாவது பிரிவிற்கும் ஒரு வேறுபாடு உண்டு. பிந்தியதில் கால்டுவெல்
விளக்குவதுபோலப் பின்னண்ண ஒலி உண்டு;56
அதாவது தகர, டகர வெடிப்பொலிகளுக்கு முன்னர்க் கடையண்ண உரசொலி உள்ளது. பிறவிடங்களிலும்
இத்தகைய ஒலி வருவதற்கான காரணம் இதுவாகத்தான் இருக்க வேண்டும்.
மென்மையாதல் அல்லது நலிபு
முதற்பிரிவில்
வெடிப்பொலிகள் உரசொலிகளாக மென்மையுறுகின்றன. தொல்காப்பியர் ‘நலிபு’ என்பதை
‘வலுவிழத்தல், மென்மையாதல்’ எனக் குறிப்பிடுகிறார்.57
‘ஆய்தல்’ என்பதன் வேர் ‘ஆய்’ என்பதாகும். (ஆய் + து + அம்) இதனுடைய மாற்றுவடிவம்
‘சாய்’ என்பதாகும். (மொழி முதலில் சகர மெய் வந்துள்ளது.) தொல்காப்பியரின் கருத்துப்படி
‘ஆய்’ என்பது ‘வலுவிழத்தல், சுருங்குதல், மென்மையாதல்’ என்னும் பொருட்களை உடையது.
ஆய்தம் நெடில் உரசொலியா?
குறில் உரசொலியா?
ஆய்தம் உரசொலியைக்
குறிக்குமாயின், அதற்கு அடுத்த வெடிப்பொலியை அங்ஙனமாகவே உச்சரிக்கப்படுவதாக விட்டு
விட்டு, அதைக் குறில் உரசொலியாக எழுதலாமா என்பதே அடுத்த வினா. ஆனால், முன்னர்
விவரிக்கப்பட்ட சொற்களில் இது இங்ஙனம் உச்சரிக்கப்படுவதில்லை. அவை நெடில்
உரசொலியுடன் உச்சரிக்கப்படுகின்றன.
சான்று
ஆய்தம் ஓர் ஒலியைப்
போலவோ அல்லது வரிவடிவ எழுத்தைப் போலவோ திகழாது எனத் தொல்காப்பியத்தில் ஒரு
56.
R. Caldwell :
A Comparative Grammar of
the Dravidian Languages,
p 130.
57.
தொல்காப்பியம், 1479
|
“நலிபு வண்ணம் ஆய்தம் பயிலும்”. |
|
|