பக்கம் எண் :

Tamil Ilakiya Varalaru
பக்கம் எண்: - 292 -

வந்தவை. ‘துப்பறியும் சாம்பு’ படிப்பவர் பலர்க்கும் சுவை விருந்து அளித்தது. ‘மிஸ்டர் வேதாந்தம்’ என்பதே அவருடைய படைப்புகளில் முதன்மையானது. பத்திரிகையுலகில் ஆசிரியர் பெற்ற அனுபவங்களை ஒரு பாத்திரத்தின் வாயிலாகத் தருகிறார். நகைச்சுவையை நிரம்பத் தருபவர் அவர். நடுத்தரக் குடும்பத்தார் வீடு கட்டும் முயற்சியைச் சித்தரிப்பது ‘ராஜத்தின் மனோரதம்’. அவருடைய கதை மாந்தரில் பெரும்பான்மையானவர்கள் நடுத்தர வகுப்பாரே. அவர்களின் கனவுகளையும் குறைகளையும் நன்றாக எடுத்துக்காட்டுவன அவருடைய நாவல்கள்.

வ. ரா. புதுமையிலும் சீர்திருத்தத்திலும் ஆர்வம் நிரம்பியவர்; பழைய கண்மூடித் தன்மைகளை எள்ளி நகையாடுபவர். அவருடைய ‘கோதைத் தீவு’ என்னும் நாவல் குறிப்பிடத்தக்கது. மு. வரதராசன், கு. ராஜவேலு ஆகியோர் எழுதும் நாவல்களின் நடை பலருடைய உள்ளங்களைக் கவர்ந்தது. நாட்டில் நடக்கும் நிகழ்ச்சிகளை வைத்துக்கொண்டே கதை பின்னி, படிப்பவர் உள்ளத்தில் புதிய உணர்ச்சிகளை ஊட்டும் நாவல்கள் அவர்களுடையவை. ‘கள்ளோ காவியமோ’, ‘அகல்விளக்கு’, ‘கரித்துண்டு’, ‘கயமை’ முதலியன மு. வரதராசனின் நாவல்களில் குறிக்கத்தக்கவை. ‘அழகு ஆடுகிறது’, ‘காதல் தூங்குகிறது’, ‘காந்த முள்’, ‘இளவேனில்’, ‘மகிழம் பூ’ முதலியன கு. ராஜவேலுவின் கற்பனைப் படைப்புகள்.

சிதம்பர சுப்பிரமணியம் எழுதிய ‘இதயநாதம்’ என்ற நாவலில் இசைக் கலைஞர் ஒருவன் நல்ல பாத்திரமாகப் புதுவகையாகப் படைக்கப்படுகிறார். அவர் தம் உரிமையையும் மதிப்பையும் பலவகை இடையூறுகளிலிருந்து காத்துக்கொள்வதற்காகப் படும்பாடு அழகாக விளக்கப்படுகிறது.

க. நா. சுப்பிரமணியம் எழுதியுள்ள நாவல்களுக்குள்ளே ‘ஒரு நாள்’ என்பது குறிப்பிடத்தக்கது. உலகம் சுற்றி அனுபவம் நிரம்பிய ஒருவன் தன் கிராமத்துக்குப் போய் அதுவரையில் பெற்றிராத விழிப்பைப் பெறுகிறான். அங்கே உலகம் அறியாமல் தன் மாமி நடத்தும் வாழ்க்கையை பொருளுடைய வாழ்க்கையாக அவனுக்குத் தோன்றுகிறது. ‘பொய்த் தேவு’ என்பதும் நல்ல படைப்பு ஆகும்.

எம். வி. வெங்கடராமன் பல கற்பனைப் படைப்புகளைத் தந்துள்ளார். தேனீ என்ற ஒரு மாத இதழும் சிலகாலம் நடத்தி, தம் படைப்புகளை வெளியிட்டார். அவருடைய ‘நித்ய கன்னி’ ஒரு நீண்ட கதை. மகாபாரதத்துள் வரும் யயாதியின் மகள் திருமணம் செய்துகொண்டு குழந்தை பெற்ற பிறகு மறுபடியும் கன்னித்தன்மை பெறுமாறு வரம் பெற்றவள். அதனால் ஒருவரை விட்டு மற்றொருவரைத் திருமணம்  செய்துகொள்ளும் வாய்ப்பு அவளுக்கு