| 
 
  
  
 சத்தியம் 
  ஓரு பாடலில் காதலி தன் காதலனது அன்பையும் உறுதியையும், 
 மீனாட்சி கோவில் தூணிலடித்து சத்தியம் செய்து காட்டச் சொல்லுகிறாள். இங்குக் காதலன் துணி போட்டுச் சத்தியம் செய்து தருகிறேன் என்று சொல்லுகிறான். இவன் சத்தியத்தை 
 மீறுவானானால் துணிக்குக் கூட விதியில்லாத தரித்திரனாகி விடுவான் என்பது நம்பிக்கை. 
 
 
 
 
 | 
 
 பெண்
: | 
 
 
 சாஞ்ச நடையழகா
! 
 
சைக்கிள் ஓட்டும் சாமி! 
 ஒய்யாரச் சேக்குகளாம் 
 ஒலையுதில்ல சைக்கிளிலே 
 வட்டமிடும் பொட்டுகளாம் 
 வாசமிடும் சோப்புகளாம் 
 சாமி கிராப்பு களாம் 
 சாயந்திரம் நான் மடிப்பேன் 
 அரக்கு லேஞ்சிக்காரா 
 பறக்க விட்டாய் சண்டாளா!
  | 
  
 
 | 
 
 ஆண்
: | 
 
 
 மறக்கல என்னு சொல்லி 
 வலக்கையும் தந்திடுவேன் 
 வலக்கையும் தந்திடுவேன் 
 வருண சத்தியம் செஞ்சிருவேன் 
 மீனாட்சி கோயிலுல 
 வேட்டி போட்டுத் தாண்டித் தாரேன் | 
  
  
 
  
 
 
வட்டார வழக்கு
:
காஞ்ச-காய்ந்த
;
சேக்கு-கிராப்பு
;
 
ஒலை-உலை.
  
 
 
 
 
 | 
  
 
 சேகரித்தவர்:  
 
S.M. 
 கார்க்கி  | 
 
  
 
 இடம்: 
 சிவகிரி, 
 திருநெல்வேலி மாவட்டம்.  | 
  
  
 
  
 
        |