|
1
ஏலோ இலோ ஈலோடு வாங்கு
வாங்குடா தோழா
வாழைத்தார் தருவேன்
தேங்காயும் மிளகும் தெரிவிட்ட பாக்கும்
மஞ்சள் இஞ்சி மணமுள்ள செண்பகம்
செண்பக வடிவேல் திருமுடிக் கழகு
வருகுது பெருநாள் தேரோட்டம் பார்க்க
தேரான தேரு செல்லப் பெண்டாட்டி
மாலை மசக்கி மையிடுங் கண்ணாள்
கண்ணுக்குச் செத்த மையிட வேணும்
பொய்யும் பிறக்குமோ பொய்க் கொடியாளே
நானிட்ட வாளை நல்ல சமத்தன்
கோழைப் பயலே கோமுட்டி வயிறா
உனக்கா எனக்கா பல்லாக்கு தனக்கா
வில்லே சரணம் வேந்தன் பாராய்
குறிப்பு: செண்பக
வடிவேல்-வேலனைக் குறிக்கும். வில்லே சரணம், வேந்தன் பாராய்-இது இந்திரனையும், அவனது
வில்லையும் குறிக்கும். இப்பாடல் பரதவர் கிறிஸ்தவ சமயத்தைத் தழுவுமுன் பாடப்பட்டிருத்தல்
வேண்டும். இப்பொழுதும் பாடப்படுகிறது.
|