பக்கம் எண் :

408

Tamil Virtual University

2

நாலு தண்டாம் பலவனாக்கு
நடுவ ஒரு பாய் மரமாம்
பாயிழுத்துக் கோசு ஊணி
பருமலுடன் சலுத்தணைந்து
சல் சல்லடம் சடுக்காப்பையா
நீயும் போடா கொய்யாக் கள்ளா
கொய்யாப் பழத்தின் ருசியும்
கொண்டு வந்தாலே தெரியும்
பாரக் கலவா பாப்பர மூஞ்சான்
சேரப்படுக்கும் செல்ல விலை மீன்
பாரக் குழலோ மேக வெளியாய்
ரஞ்சித நடையாள் கெஞ்சுது பாராய்
பண்ணி கிடந்து உறுமுது பாரு
பண்ணியடா ஒரு காட்டுப் பண்ணி
இன்னொரு பண்ணி வீட்டுப்பண்ணி

குறிப்பு: இப்பாட்டில் படகைக் கடலில் இறக்கிச் செலுத்தும் வரையுள்ள வேலைகள் வரிசையாகக் கூறப்படுகின்றன. மீன்களது பெயர்களும் ஒன்றிரண்டு கூறப்படுகிறது. அராபிய முஸ்லீம்களோடு செய்து சண்டையால் ஏற்பட்ட வெறுப்பு அவர்களைக் கேலி செய்யும் முறையில் ‘பண்ணி’ என்ற வார்த்தையில் வெளிப்படுகிறது. ‘பன்றி’ என்பது மக்களுக்குப் பிடிக்காது.