|
அண்ணாவி ஏ கறுப்பா
அடியேன் சிறு குழந்தை
பூசை முடித்தேனிப்போ
போய்ச் சேரும் புண்ணியனே
மன்று முடித்தேனிப்போ
மன்னவரே போய்ச் சேரும்
உள்ளூருத் தேவதைகள்
உங்கள் எல்லை போய்ச் சேரும்
பக்கத்துத் தேவதைகள்
பதி தனக்குப் போய்ச் சேரும்
அண்ணாவி என் குருவே,
அடியேன் மனதிலெண்ணி
பூசை முடித்து விட்டேன்
புண்ணியரே உமதடிமை |
குறிப்பு:
தெய்வம் கூறுவது என்பது தெய்வ ஆவேசம் வந்தவன் குறி கூறுகிறான்.
குறிப்பிட்ட வீட்டிற்குக் குறி கேட்கிறான். பெண் அந்தி மயக்கத்தில் பயந்து விட்டாள்.
அவளை பேயாண்டி முனியன் என்ற பிசாசு பற்றிக் கொண்டது, உடல்வலியெடுத்தது. வெள்ளிக்கிழமை, நள்ளிரவு வேளையில் பலி கொடுத்தால் முனியன் போய்விடும்.
இது கருப்பன்
ஆவேசம் வந்த மனிதன் கூறுவது.
இதன் பின் தெய்வம்
மலையேறிவிடும்.
சேகரித்தவர்
:
S.S.
போத்தையா |
தங்கம்மாள்புரம்,
நெல்லை மாவட்டம், |
|