பக்கம் எண் :

Yasodara Kavium


- 128 -

பொருந்தல் , தங்கல், நரைமயிர் முதுமையைக் குறிக்கு மென்பதனை,

“மன்னனே யவனியை மகனுக் கீந்துபின்
பன்னருந் தவம்புரி பருவ மீதெனக்
கன்னமூ லத்தினிற் கழற வந்தென
மின்னெனக் கருமைபோய் வெளுத்த தோம்யிர்”

என்னும் கம்பர் (அயோத்) வாக்கானு மறியலாகும். உளைதல் - மனம் நோதல், ‘நரைவரு மென்றெண்ணி நல்லறிவாளர் குழலியிடத்தே‘ துறப்பது, மரபும் இயல்புமாதலின் அத்தகைய தானும் இதுவரை பிறவிப்பற்றிலழுந்திதவப்பேற்றை யடையாக் குறைக்கு வருந்தி, ஆலோசித்தன னென்க. ஆலோசித்த வகையை வரும் கவிகளால் அறியலாகும்.                         (6)

இளமை நிலையாமை

79. வண்டளிர் புரைதிரு மேனி மாதரார
  கண்டக லுறவரு கழிய மூப்பிது
  உண்டெனி லுளைந்திக லுருவ வில்லிதன்
  வண்டுள கணைபயன் மனிதர்க் கென்றனன்.

(இ-ள்.) வண்தளிர் புரை-வளவிய மாந்தளிர் போலும், திருமேனி மாதரார் - அழகிய மேனியையுடையமகளிர், கண்டு - பார்த்தவுடன், அகலுற - அருவருத்து நீங்கும்படியாக, வரு - வருகின்ற, கழிய மூப்பிது - ஆண்டு மிக்க மூப்பாகிய இது, உண்டு எனில் - உளதாயின் அதுவரையிற்றான், உளைந்து - மனம் திரிந்து, இகல், மாறுபாட்டினையுடைய, உருவவில்லி தன் - அழகிய (கரும்புவில்லையுடைய, மன்மதனது, வண்டு உள கணை - வண்டுகள் மொய்க்கும் பூங்கணை, மனிதர்க்குப்பயன் - மக்கட்கு காம வேட்கை யாகிய பயனை விளைவிக்கும், என்றனன் -‘ என்றுதனக்குள்ளே கூறிக்கொண்டான். (எ-று.)