கட்டளைக் கலிப்பா
பயன்றரு கச்சிவாழ்
பண்ண வன்னடிப் பத்தியில் பாவிகாள்!
கூடு விட்டுயிர் தொன்றையுங்
கொண்டு லாமையை உன்னிலீர்;
வீடு கட்டுவீர்; வெள்ளிபொன் ஈட்டுவீர்;
வேண்டு நன்மணி ஆடையும் பூணுவீர்;
ஏடு கட்டிய பால்தயிர் உண்ணுவீர்;
எப்ப டிப்பெறு வீர்பொற்ப தத்தையே. (56) |
பட்டும் - வருத்தப் பட்டும், பயன் தரு - பயனைக்
கொடுக்கின்ற, கச்சி வாழ் - காஞ்சியில் வாழ்கின்ற, பண்ணவன் - அண்ணலென எண்ணுங் கடவுளது, அடி - திருவடியினிடத்து, பத்தி இல் - காதல் இல்லாத, பாவிகாள் - பாவிகளே!, கூடு விட்டு - உடம்பை விட்டு, உயிர் போம் பொழுது - உயிர் நீங்கும் காலத்து, ஒன்றையும் - ஒரு பொருளையும், கொண்டு இலாமையை - உங்களுடன் கொண்டு இல்லாமையை, உன்னிலீர் - நினையீர், வீடு கட்டுவீர் - வீட்டைக் கட்டுவீர், வெள்ளி பொன் ஈட்டுவீர் - வெள்ளியையும் தேடிக் குவிப்பீர், வேண்டு நன் மணி ஆடையும் - வேண்டும் வயிரக் கலன்களையும் ஆடையையும், பூணுவீர் - அணிவீர், ஏடு கட்டிய - ஏடு பொருந்திய, பால் தயிர் உண்ணுவீர் - பாலும் தயிரும் உண்பீர், (இங்ஙனம் வாழ்நாளை வீணாளாகப் போக்குவீராயின்) பதத்தை - அவ் வேகாம்பரநாதரது அழகிய திருவடிப்பேற்றை, எப்படிப் - எப்படி அடைவீர்? பண்ணவன் - கடவுள். (பண்ணவன் - எண்குணன்; சிலப். 10:108).
என்றது, சிறந்த வீட்டை.
வீடு - விருப்புக்களைக் கொடுக்கும் பற்றுக்களினின்று
விடுதலை பெற்று இளைப்பாறும் இறைவன் அருள் நீழல்.
ஒன்று - ஆகுபெயர். நன்மணி என்றவிடத்து எண்ணும்மை விகாரத்தாற்
மணி - ஆகுபெயர்.
''பண்ணவன் னடி’ என்றவிடத்து, னகரம் விரித்தல் விகாரம்.
“கூடுவிட் டிங்கு ஆவிதான் பின்பு” (வாக்குண்டாம்). கூடு - உடல்.
வருத்தப்பட்டும் பயன் தரும் இறைவனடிப்பேற்றை விரும்பாது பயன் தாராத நுகர்ச்சிப் பொருள்களையே விரும்பும் அறியாமை என்னே என்பது கருத்து.
|