திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
முதல் தொகுதி
 
30

ஆழ


    ஆழ்வாருக்கு அந்த ஆராவியற்கையையுடைய அவா முழுவதும் இறைவன்பாற்செல்லுவதாயிற்று. அதனால், அவர், ‘ஆராதகாதற் குருகூர்ச் சடகோபன்’ என்று தம்மைத்தாமே கூறியுள்ளனர்.

    இவ்வாறான அவர் இயல்பை அவருடைய பாசுரங்களிற் காணலாம்.

        ‘கூவிக்கூவி நெஞ்சுருகிக் கண்பனி சோர நின்றால்
        பாவிநீ என்றொன்றும் சொல்லாய் பாவியேன் காண வந்தே’

(4. 7: 3.)

ஞானக்கண்ணாற்கண்ட எம்பெருமானை ஊனக்கண்ணாலும் காண விரும்பினார். காட்சி எய்தவில்லை. கண்ணீர் பெருக நெஞ்சம் உருகிப் பன்முறை அழைத்தார். அப்போதும் அக்காட்சி எய்தவில்லை. ‘நான் இவ்வூனக் கண்ணாற் காணும்படி நீ அன்போடு காட்சியளிக்க விரும்பவில்லையாயினும், அவ்விருப்பமின்மையை என் கண்ணெதிரே தோன்றிக் கூறுக. ‘நீ பாவி. அதனால் உனக்குக் காட்சியளித்தல் இயலாது,’ என்றாவது என் கண்முன் தோன்றிக் கூறுக. அதுவும் எனக்கு அமையும். நீ வெறுப்போடு கூறியதாயினும், விருப்போடு கூறியதாயினும், அவ்வேற்றுமையை யான் கருதவில்லை. உன்னைக் காண்டல், உன் சொற்கேட்டல் அவ்வளவே என் ஆசை,’ என்கிறார்.

        “சிறப்பில் வீடு சுவர்க்கம் நரகம்
        இறப்பில் எய்துக எய்தற்க யானும்
        பிறப்பில் பல்பிற விப்பெரு மானை
        மறப்பொன் றின்றிஎன் றும்மகிழ் வேனே”


இப்பாசுரத்தில், ஆழ்வார் எம்பெருமானை நோக்கி, ‘நீ எனக்கு வீடு பேறு அளிப்பினும் அளிக்க; சுவர்க்கம் அளிப்பினும் அளிக்க நரகமே அளிப்பினும் அளிக்க; என்னை எங்கு வைப்பினும் வைக்க; அது பற்றி எனக்குக் கவலையில்லை; எப்போதும் உன்னை நினைந்து நினைந்து மகிழ்வேன்; இதுவே யான் விரும்புவது,’ என்கிறார். ‘இவ்வாறு அவன் வெறுப்போடு கூறினும், அவன் சொல்லே யான் வேண்டுவது; அவன் என்னை எங்கே வைப்பினும் அவனை நினைந்து மகிழ்வதே யான் வேண்டுவது,’ என்று ஆழ்வார் கூறுவாராயின், அவர் அன்பு இத்தகையது என்று எடுத்துரைத்தல் இயலுமோ?

        “நசைஇயார் நல்கார் எனினும் அவர்மாட்டு
        இசையும் இனிய செவிக்கு”

என்ற திருக்குறட்கருத்தும், “பாவி நீ என்றொன்று சொல்லாய் பாவியேன் காண வந்தே,” என்ற ஆழ்வார் கருத்தும் ஒத்திருத்தல்