|
க
காங்கு வருகின்ற பெரியோர்களைப்பற்றி
எழுதிய குறிப்பு ஒன்று அதன் ஈற்றில் சேர்க்கப்பட்டிருக்கின்றது. மேற்கோள் சுலோகங்களைத் தொகுத்து
ஈற்றில் பிற்சேர்க்கையாகச் சேர்த்திருக்கிறேன். ஆழ்வார் வரலாறும், வியாக்கியானங்கள்
வந்த வரலாறும் முதலில் தரப்பட்டிருக்கின்றன. இம்முறையில், இவ்வுரை, திருவாய் மொழி
முதற்பத்திற்கு ‘ஈட்டின் தமிழாக்கம்’ என்ற பெயரோடு வெளி வருகின்றது. தொடர்ந்து
வெளிவருவதற்கு இரண்டாம் பத்தின் உரையும் முடிவுற்றிருக்கின்றது.
இரு மொழிப் புலமையும் ஸ்ரீ வைஷ்ணவ சம்பிரதாய கிரந்தங்களில் நிறைந்த
ஞானமுமுடையவரும், ஆசாரசீலரும், அரிய பல தமிழ் நூல்களுக்கு உரையெழுதி வெளியிட்டவருமாகிய ஸ்ரீமத்.
உ.வே., வை. மு. கோபாலகிருஷ்ணமாசாரிய ஸ்வாமிகள் இவ்வுரையின் கையெழுத்துப் பிரதியை முழுவதும்
படித்து, ஆங்காங்கு வேண்டிய இன்றியமையாத திருத்தங்களைச் செய்து உதவினார்கள். அடியேனுடைய
நலனையே நாடுபவரான பல்கலைக்குரிசீல் ஸ்ரீமான், வித்துவான், வே. வேங்கட ராஜூலு ரெட்டியார் அவர்கள்,
இவ்வுரை அச்சாகும்போது அன்புடன் ஒரு முறை நோக்கி உதவினார்கள். இப் பெரியார்களை எழுமை எழுபிறப்பும்
உள்ளுதலன்றி, இவர்கட்கு அடியேன் செய்யுங்கைம்மாறு யாதுளது? ‘தலையல்லால் கைம்மாறு இலனே’ என்பது
சூடிக்கொடுத்த சுடர்க்கொடியின் திருவாக்கு. அதனையே அடியேனும் கூற நினைக்கின்றேன்.
இவ்வுரை நூலை எழுதுங்காலத்து இடையிடையே உண்டான ஐயங்களைப் போக்கி உதவி
செய்த பிரபந்த வித்துவான், ஸ்ரீமத்.
R.
வேங்கட ராமாநுஜ ஸ்வாமிகட்கும், அவ்வப்பொழுது வேண்டிய உதவி புரிந்த அறிஞர் சிலர்க்கும்
அடியேன் நன்றி செலுத்தும் கடப்பாடுடையேன்.
இந்நூலைச் சருவகலாசாலையார் அச்சிடுவதற்குக் காரணராயிருந்த சொல்லின்
செல்வர் தமிழ்ப்பேராசிரியர் உயர்திரு.
R. P.
சேதுப்பிள்ளை,
B.A.,B.L.,
அவர்கட்கும், சருவகலாசாலைப் பதிப்பாக வெளியிட்டு உதவிய கரும்பு தின்னக் கூலி கொடுக்குங் குலத்தோன்றல்களாகிய
சருவகலாசாலை அதிகாரிகட்கும் அடியேன் என்றென்றும் நன்றி செலுத்தும் கடப்பாடுடையேன்.
|