Periya Puranam
| 87.
|
வேத
வோசையும் வீணையி னோசையும் |
|
| |
சோதி
வானவர் தோத்திர வோசையும்
மாத ராடன் மணிமுழ வோசையும்
கீத வோசையு மாய்க்கிளர் வுற்றவே. |
2 |
(இ-ள்.)
வெளிப்படை. வேதம் பயிலும் ஓசை - வீணைகளை இசைக்கும்
ஓசை - சோதி மிகுந்த தேவர்கள் துதிக்கும் ஓசை - பெண்கள் ஆடலிலும்
அதற்கு இசைய முழக்கும் முழவுகளிலும் கூடி எழும் ஓசை ஆகிய இவைகள்
கீதங்களின் ஓசையுடன் ஒன்றாகி எங்கும் கிளர்ந்து விரவிச் சந்தித்தன. இந்தப்
பற்பல சத்த விசேடங்களும் அந்நகரிலே பொருந்திப் பெருங் கிளர்ச்சியைத்
தந்தன.
(வி-ரை.)
அந்நகரிலே கிளரும் பல சத்த விசேடங்களை,
இப்பாட்டிலும் வரும் பாட்டிலும் ஓசை - ஒலி என்ற இருபாகுபாடும்
விரவவைத்து ஆசிரியர் விளக்கினார். ஓசை
- பொருளற்ற சத்தம்; ஒலி -
பொருளுடையது; இங்கு வேதம் தோத்திரம் - கீதம் - இவற்றின் சத்தங்கள்
பொருளுடையனவாயினும் பலர்கூடி ஒலித்தலாலும், வீணை
- முழவு
முதலியவற்றின் சத்தங்களுடன் விரவுதலாலும் பொருளறிய வாராது
முழங்குதலால் ஓசை எனப்பட்டன.
வேதவோசை - வீணையின்
ஓசை - “வேதத் தொலி கொண்டு
வீணை கேட்பார்” (திருத்தாண்டகம் - திருவெண்காடு - 2) என்ற
திருவாக்கின்படி வேதமும் வீணையும் வைக்கப்பெற்றன. இது சிருட்டித்
தொடக்கத்தைக் குறிக்கும். திருவாரூர்த் திருநகரம் பிருதிவித்தலமாதலும்
காண்க.
இனி, இவ்வோசைகள் அடியார்கள், இறைவர் திருமுன்பு
முழக்கும்
வேதகானமும் வாசிக்கும் வீணை ஓசையும் என்க. சிருட்டி காலத்தைக்
குறிப்பதாகிய திருப்பள்ளி யெழுச்சியிலே “இன்னிசை வீணையர் யாழின
ரொருபால், இருக்கொடு தோத்திர மியம்பினர் ஒருபால்” என்று
இவ்விரண்டையும் எடுத்துக் கூறிய திருவாசகமும் காண்க.
சோதி வானவர்
- ஒளி உருவமுடையாராதலின் சோதி என்றார்.
திவ்விய உருவமுடைமை பற்றியே இவர்கள் தேவர் எனப்பெறுவர். திவ்
- ஒளி.
மாதர் ஆடல் மணிமுழவோசை
- மாதர்கள் ஆட, அதற்குத்
தக்கபடி முழவு முழக்க உண்டாகும் ஓசை. எனவே, ஆடலோசையும் சேர்ந்து
ஒன்றினொன்று கலந்து சத்தித்தலால் இரண்டையும் ஒருசேர “ஆடன்
முழவோசை” என்று கூட்டி உரைத்தார். உம்மை தொக்கது. மணி (முழவு) -
இன்னிசைதரும் அழகு “வலம்வந்த மடவார்கள் நடமாட முழவதிர ...”
என்பது தேவாரம்.
கீதம்
- இசையுடன் கூடிய தமிழ்ப்பாட்டு. இது பெருமானது புகழ்களை
இசையுடன்கூடி வாயாரப் பாடுவது. “கீதத்தை மிகப்பாடு மடியார்கள் ...”
(திருப்புள்ளிருக்கு வேளுர்) - “அந்தணர் வேள்வியும் அருமறைத் துழனியும்,
செந்தமிழ்க் கீதமும் ...” (கொல்லிப்பண் திருமழபாடி - 3) என்ற
திருஞானசம்பந்தப் பிள்ளையார் தேவாரங்களும் “அளப்பில கீதஞ்
சொன்னார்க்கு அடிகள்தா மருளுமாறே” எனும் அப்பர்சுவாமிகள் தேவாரமும்
காண்க. பெண்கள் அம்மனை - கழல் பந்து முதலிய விளையாட்டுக்களை
ஆடும்போது கீதத்தையும் கூட்டிப் பாடுவர் என்க. “மனைகள் தொறும்
இறைவனது தன்மை பாடிக், கருந்தடங்கண்ணார் கழல்பந் தம்மானைப்
பாட்டயரும்” என்பது தேவாரம்.
கிளர்வுற்றது
- நகரம் கிளர்ச்சியை யடைந்தது. வேதவீணை ஓசைகள்
இறைவனது (சிருட்டித்) தொழிலையும், (அவனருளை நோக்கிய வானவர்)
தோத்திர ஓசை தேவர் செயலையும், ஆடன் முழவு
- கீதம் - மனிதர்
செயலையும் குறிப்பன. “... கை யோசைபோய் அண்டர் வானத்தி னப்புறஞ்
சாருமால்” என்ற (60) பாட்டின் கீழ் உரைத்தவையும் காண்க. வேள்விச்
சாலைகள் நகர்ப்புறத்திலே அமைவன. வானவர் அவ்வேள்விகளிலே வரும்
தேவர்கள். இவற்றைக் கடந்து
|
|
|
|