| 106 | திருத்தொண்டர்புராணம் மூலமும் உரையும் |
Periya Puranam
சென்றால் புறநகரிலே
கூத்தாடும் அரங்குகளும், பின்னர் வீதிகளும், பின்னர்
ஆடிடங்களும், மாளிகைகளும் காணலாம். ஆசிரியர் இம்முறையே பின்னர்க்
கூறுதல் காண்க. இதுவே அந்நாள் நகர அமைப்பு என்பது நூல்களால்
அறியப்பெறும். தேவ உலகில் இருந்த தியாகேசர் இங்கு இருத்தலால் அவரை
வழிபடவும், அடியார்களை ஆசிரயித்து நலம் பெறவும், தேவர்கள் இங்கு
வந்து கூடுவதும் இயல்பாம். இப்பாட்டிற் கூறியவை நகர்ப்புற நிகழ்ச்சிகள்.
மேல் இரண்டு பாட்டிலும் கூறிப் போந்த பொருள்களை,
“...
கெண்டை கொண்ட லர்ந்த கண்ணினார்கள் கீத வோசைபோய்
அண்ட ரண்ட மூட றுக்கும் அந்த ணாரூர் என்பதே”
-
திருவிராகம் - பண் - நட்டராகம் - திருவாரூர் - 2 |
என்ற திருஞானசம்பந்தப்
பிள்ளையாரது இத்தலத் தேவாரத்தே காண்க. 2
| 88.
|
பல்லி
யங்கள் பரந்த வொலியுடன் |
|
| |
செல்வ
வீதிச் செழுமணித் தேரொலி
மல்லல் யானை யொலியுடன் மாவொலி
எல்லை யின்றி யெழுந்துள வெங்கணும். |
3 |
(இ-ள்.)
வெளிப்படை. பலவகை வாத்திய விசேடங்களின்
சத்தங்களோடு செல்வம் நிறைந்த திருவீதிகளிலே அழகிய தேர்களின்
சத்தமும், செழிய யானைச் சத்தமும், குதிரைச் சத்தமும் கூடி அளவில்லாமல்
அந்நகர் எங்கும் எழுந்துள்ளன.
(வி-ரை.)
ஒலியுடன் - இயங்களின் (வாத்தியங்கள்) ஒலியை,
மற்றத்
தேர்யானை, குதிரைகளின் ஒலியிலிருந்து பிரித்து வேறுபடுத்துக் கூறுவார்
(ஒலி) உடன் என்ற உருபு கொடுத்துக் கூறினார். யானை ஒலியுடன் என்ற
இடத்து உடன் என்பது தேர் - யானை - குதிரை - என்ற சேனை ஒலிகளை
ஒன்று சேர்த்ததாம். இச் சத்தங்கள் அவ்வவற்றின் வகைகளை
உணர்த்துதலால் ஒலி என்றார்.
தேர் - யானை - குதிரை
- அரசு அங்கமாகிய சேனைப் பகுதிகள்.
இந்நகர் சோழர்களின் இராசதானிகளிற் சிறந்ததாய் அவர்களது
வாசத்தானமுமாகும். ஆதலின் இவற்றினது ஒலிமிக்கது.
செழுமணித் தேரொலி
- தேரும் அதன் அடைமொழிகளும் பிறவும்
பின்னே இப்பகுதியிற் கூறப்பெறும் சரித நிகழ்ச்சியை முன்னே காட்டும்
முற்குறிப்பாகும். “மாடவீதி”, “பொங்கிய தானைசூழ”, “...
ஆங்கோர்
மணிநெடுந் தேர்மேலேறி, அளவில்தேர்த் தானைசூழ அரசுலாந்தொரு ...”
என்று பின்னர் வருவன காண்க.
உள - என்றதால்
அவை இந்நகரில் என்றும் நிலைத்துள்ளமை
கூறியதாம்.
பல் இயங்கள்
- முன் பாட்டிலே சொல்லிய ஆடலுக்கிசைய முழக்கும்
முழவுக ளன்றித் தனித்தனி இயக்கும் பலவகை இயங்களை இங்குக் குறித்தார்.
செல்வ வீதி
- இவ்வீதிகள் செல்வங்கள் நிறைந்தன என்பதன்றி
எல்லாச் செல்வங்களையும் தருவனவும் ஆம். என்னை? எல்லாம் தரும்
செல்வத் தியாகேசர் எழுந்தருளி வரும் சிறப்புவாய்ந்தன ஆதலின். மேலே
“பன்மணிவீதி ... செந்தாமரை யடிநாறுமால்” என்று சிறப்பித்தலும் காண்க.
“மாதவங்கள் நல்கும் திருவீதி நான்கும்” என்று குறிப்பதும் இங்குக்
காணத்தக்கதாம். இந்நகரிலே ஒலியும் ஓசையும் விரவி மயங்க நிற்றலால்
இவ்விரண்டு பாட்டினும் அவ்விரண்டு பாகுபாட்டையும் விரவவைத்துக்
கூறினார். இங்குக் கூறியன நகர வீதிகளின் முழக்குகள். 3
| 89.
|
மாட
மாளிகை சூளிகை மண்டபங் |
| |
கூட
சாலைகள் கோபுரந் தெற்றிகள |
|
|
|
|