Periya Puranam
| |
நீடு
சாளர நீடரங் கெங்கணும்
ஆடன் மாத ரணிசிலம் பார்ப்பன. |
4 |
(இ-ள்.)
வெளிப்படை. மாடம் முதல் அரங்குவரை குறித்த பலவகை
ஆடிடங்களில் எங்கும் ஆடும் மாதர்கள் அணிந்த சிலம்பும் சத்திப்பன.
(வி-ரை.)
மாடம் - மாளிகை - சூளிகை - மண்டபம் - கூடம் -
சாலைகள் - கோபுரம் - தெற்றிகள் - சாரம் - அரங்கு இவைகள் வெவ்வேறு
ஆடிடங்கள். எண் உம்மைகள் தொக்கன.
அரங்கு எங்கணும்
- அரங்குகளும் ஆகிய ஆடிடங்கள் எங்கும் -
என்று பெய்துரைத்துக் கொள்க. நகருள்ளே ஆடல் நிகழும் பலவகை
இடங்களையும் இப்பாட்டிற் கூறினார். புறநகர்க் கூத்துக்கு வேறாய்ச்,
சிலம்பொலிக்க ஆடும் உள்நகர் நிகழ்ச்சியை இங்குப் பிரித்துக் கூறியவாறு.
ஆதலின் மேற்பாட்டிலே மணி முழவு - என்றதில்
மணி என்பதற்கு மணிச்
சிலம்பு என்று உரை கூறுதல் பொருந்தாதுபோலும்.
மாளிகை
- செய்குன்று. தெற்றி - திண்ணை. சாளரம்
- (பலகணி)
பல கண்களையுடையனவாய் ஆடற்கென்று அமைக்கப்பெற்ற பெரிய
ஆடிடங்கள். நீடு சாளரம் - மிகுந்த காற்று
உட்புகுந்து வீசக்கூடியதாய்
அமைக்கப் பெறுவதனால் இதனைக் காலதர் என்பர். சிலப்பதிகாரத்துக்
காண்க. (கால் - காற்று; அதர் - வழி). நீடு
- மான்கண்போன்று நீண்ட
என்க.
அரங்கு
- தெருப் பக்கத்து ஆடிடம். “கமழ்தார் வீதித், தேரொடு
மரங்கேறிச் சேயிழையார் நடம்பயிலும் ...” என்ற தேவாரமும் காண்க.
“மாடமாளிகை கோபுரங் கூடங்கள் மணியரங் கணிசாலை, பாடு சூழ்மதிற்
பைம்பொன் செய் மண்டபம் பரிசொடு பயில்வாய” (திருக்கோட்டூர் -
நட்டராகம் - 7) என்ற திருஞானசம்பந்தப் பிள்ளையார் தேவாரமும் இங்குக்
குறிக்கத்தக்கது. 4
| 90.
|
அங்கு
ரைக்கென் னளவப் பதியிலார் |
|
| |
தங்கண்
மாளிகை யின்னொன்று சம்புவின்
பங்கி னாடிருச் சேடி பரவையா
மங்கை யாரவ தாரஞ்செய் மாளிகை. |
5 |
(இ-ள்.)
அங்கு ... அளவு - அவ்விடத்தே உரைக்கும் உரைகளுக்கு
என்ன அளவிருக்கின்றது?; அப்பதியிலார் ... மாளிகை - அங்குள்ள
மாளிகைகளிலே பதியிலார் எனும் உருத்திர கணிகையர் மாளிகைகள்
பலவற்றுள் ஒன்று, இறைவனது ஒருபாகத்திலே உள்ள உமை அம்மையாரினது
சேடியாகிய (அனிந்திதை கமலினி என்னும் இரு சேடிமார்களில் ஒருவராகிய)
கமலினியார் வந்து அவதரிக்க நின்றது என்று சொல்வோமானால்.
(வி-ரை.)
அன்றியும் அவ்வீதி தூதுபோய் நடந்த திருவடி நாறும்
எனின் இதன் பெருமை உரையில் அளவுபடுமோ? என வரும்பாட்டையும்
சேர்த்து முடித்தலுமாம்.
அங்கு - அவ்வீதிகளைப்பற்றி - என் உரைக்கு? என்
சொல்வேன்
என்றலுமாம்.
பதியிலார்
- உருத்திர கணிகையர். இஃது ஒரு குலம். பதியிலார்
-
சிவபெருமானையும் அவனே போன்ற அவனடியார்களையுமேயன்றி வேறு
பதியில்லாதவர். “உன்னடியார் தாள் பணிவோ மாங்கவர்க்கே பாங்காவோ,
மன்னவரே யெங்கணவ ராவார்” எனவும், “எங்கொங்கை நின்னன்ப
ரல்லார்தோள் சேரற்க, யெங்கை யுனக்கல்லா தெப்பணியுஞ் செய்யற்க”
எனவும் வரும் திருவாசகங்கள் காண்க. இன்னும் இதன் விரிவைப் பின்னர்த்
தடுத்தாட்கொண்ட புராணம் 131-ம் பாட்டிற் காண்க.
|
|
|
|