பக்கம் எண் :


108 திருத்தொண்டர்புராணம் மூலமும் உரையும்

Periya Puranam
     சம்புவின் பங்கினாள் - சம்பு - சுகத்தை உண்டுபண்ணுபவன்
என்பது பகுதிப்பொருள்; சிவபெருமான். “இன்பஞ் செய்தலிற் சங்கா;
னெம்பிரான், இன்பமாக்கலிற் சம்பு; விடும்பைநோய், என்பதோடடுமியல்பி
னுருத்திரன், என்பரால்” (காஞ்சிப் புரா - பரசுராமீச - 44). சம்புவின் -
சிவபெருமானுடைய சம்பு + இன் - சம்புவினது இனிய பங்குக்குடையவன்
என்றலுமாம். சிவபெருமானது ஒரு பகுதி அம்மையாருடையது ஆயினமையின்
பங்கினாள் என்றார். “மாதிருக்கும் பாதியன்” முதலிய எண்ணிறந்த ஆட்சிகள்
காண்க.

     பங்கினாள் திருச்சேடி - இச்சேடியர்கள் இருவர்; இவருட்
கமலினியாரே பரவையாராய் வந்து இங்கு அவதரித்தவர். இவ்வரலாறு
முன்னர்த் திருமலைச் சிறப்பிற் கூறப்பெற்றது. பரவையார் ஆம் மங்கை -
பரவையாராக ஆகும் மங்கை; கமலினியார்.

     அவதாரஞ் செய் மாளிகை - அவதரித்தற் கிடமாகிய திருமாளிகை.

     மாளிகையின் ஒன்று - மேற்பாட்டிலே சொல்லப் பெற்ற மாளிகை
பலவற்றுள்ளும் பதியிலார் மாளிகை பல; அவற்றுள் ஒன்று மங்கையார்
அவதரிக்கும் இடம் என்க.

     இதுவும் வரும் பாட்டும் இடைநகர் வீதியைச் சொல்வன.  5

91. படர்ந்த பேரொளிப் பன்மணி வீதிதான்  
  இடந்த வேனமு மன்னமுந் தேடுவார்
தொடர்ந்து கொண்டவன் றொண்டர்க்குத்
                              தூதுபோய்
நடந்த செந்தா மரையடி நாறுமால்.
6

     (இ-ள்.) படர்ந்த ... தான் - பேரொளி வீசும் பல மணிகள் தூக்கிக்
கட்டிய, அந்நகரின் அம்மாளிகை இருக்கும், வீதியானது; இடந்த ... தேடுவார்
- தோண்டிச் சென்ற பன்றியினாலும் (பறந்து சென்ற) அன்னத்தினாலும்
தேடப் பெறுபவராகிய இறைவர்; தொடர்ந்து ... நாறுமால் - தாமே வலியத்
தொடர்ந்து சென்று ஆளாகக் கொண்ட வன்றொண்டர்க்காக (அந்த
மாளிகைக்கு)த் தூதாகப் போய் நடந்து வந்த செந்தாமரை போலும் திருவடி
மணம் கமழ்ந்துகொண்டேயிருக்கும்.

     (வி-ரை.) வீதி - தூதுபோய் - நடந்த - அடி - நாறும் - என்க.

     மணிவீதி தான் - மணிகள் கட்டி அலங்கரிக்கப் பெற்ற திருவீதி.
மணிகள் அவ்வீதிகளில் எப்போதும் நிகழும் திருவிழாக்களின்பொருட்டுச்
செய்யப்பெறும் அலங்காரங்கள். “வீதிகள் தோறும் ... சோதிகள் விட்டுச்
சுடர்மாமணிகள் ஒளிதோன்ற” என்று இத்திருவீதியினை அப்பர் சுவாமிகள்
சிறப்பித்துப் பாடியருளினமை காண்க. இச்சிறப்பு இத்திருவீதி ஒன்றிற்கே
உள்ளதென்பது தோன்ற வீதி தான் என்றார். இவ்வீதியிற் படர்ந்த பேரொளிச்
சிறப்பும், பிறவும் பின்னர் ஏயர்கோனாயனார் புராணத்திற் காண்க. பன்மணிப்
பேரொளி படர்ந்த வீதி எனக் கூட்டுக. வீதிபார் என்பது பாடமாயின்,
வீதியானது - பார் இடந்த ஏனம் - எனக் கூட்டுக.

     இடந்த ஏனம் - பன்றியுருவுடன் பூமியைத் தோண்டிக் கொண்டு
அடிதேடிச் சென்ற விட்டுணுமூர்த்தி.

     அன்னம் - (அங்ஙனமே) அன்னவுருவெடுத்து விண்பறந்து முடிதேடிச்
சென்ற பிரமதேவர். பார்இடந்த ஏனம் என்றமையால் விண்பறந்த என
அன்னத்திற்குரிய அடைகள் வருவித்துக்கொள்க.

     தேடுவார் - (ஏனத்தாலும் அன்னத்தாலும்) தேடப் பெறுபவர்.
அழற்றூணாய் நின்ற சிவபெருமானது அடிமுடிகளை இவ்வாறு இவர்கள்
தேடச் சென்றும் காண இயலாது நின்ற வரலாறு காந்தமா புராணத்துள்
விரித்துக் கூறப்பெறும். அப்புராணமேயன்றி (த் தமிழ்) வேதமாகிய அப்பர்
சுவாமிகளது இலிங்க புராணத் திருக் குறுந்தொகைத் திருப்பதிகமும், பிறவும்
விரித்துக் கூறும்.