Periya Puranam
தேடுவார்
- தேடப்படுவார் என்பதில் படு விகுதி தொக்கு நின்றது.
“இல்வாழ்வான் என்பான்” என்பதுபோல. இவ்வாறு வருதலை வடநூலார்
நயக்கு என்பர். இக்கருத்தையே பின்னும் அனுவதித்து (ஏயர்கோ - புரா -
324) பாட்டில் கூறுதலும் காண்க.
தொடர்ந்து கொண்ட
- பெருந் தேவர்களாற் றேடப்பெறும்
அப்பெருமை வாய்ந்தவராயிருந்தும் தாமே வலியத் தொடர்ந்து
ஆளாக்கொண்டவராயும், அப்போது மறுத்து வலிமைபேசி வன்றொண்டர்
என்ற பேர்பெற்றவராயும் உள்ள. பிறர் தம்மைத் தேடிச் செல்லத் தாம்
இவரைத் தேடித் தொடர்ந்து கொண்டார் என்றது, குறிப்பு. அடியவர் சிறப்பும்
உரைத்ததாம். வன்றொண்டர்க்கு - வன்றொண்டர்க்காக.
தூதுபோய் நடந்த
- இவ்வரலாறு பின்னர் ஏயர்கோன் கலிக்காம
நாயனார் புராணத்து 323 - 374 - வரை திருப்பாட்டுக்களிற் காண்க.
அவ்வீதி பரவையார் அவதரித்த மாளிகையுடையதேயன்றி,
அந்த
மாளிகைக்கு அவரிடம் தொண்டர்க்காகத் தூதுபோய்நடந்த மணங்கமழும்
பெருமையுமுடையதென அதனை அடுத்துக்கூறி, அங்கு உரைக்கென் என
முடித்தபடி.
போயின என்னாது போய் நடந்த என இருமுறை கூறியது ஓரிரவிலே
இருமுறை நடந்து தூதுசென்ற சரிதத்தைக் குறித்ததாம். இப்பாட்டிற் கூறிய
சிறப்பினை இம் முறையே,
“...
அடியிட்ட செந்தமிழி னருமையிட் டாரூரி லரிவையோர் பரவை
வாயில்
அம்மட்டு மடியிட்டு நடைநடந் தருளடிகள் அடியீது முடியீதென
வடியிட்ட மறைபேசு பச்சிளங் கிள்ளையே ...” |
என்று தாயுமானார் விதந்து
பாராட்டியமையும் காண்க.
செந்தாமரை யடிநாறும்
- செந்தாமரைபோன்ற திருவடியின்
திருமணம் வீசும். தாமரை என்றதற்கேற்க நாறும் என்றார். திருவடியைத்
தாமரை என்பது வழக்கு. ஒருமுறைக் கிருமுறை தூது நடந்ததனால் அடி
சிவந்ததென்பதும் குறிப்பு.
தேடுவார் தேடித் தொடர்ந்துகொண்டதுமன்றித் தேடித்
தூதும் போனார்
என்ற சுவையும் காண்க. “அணியுடைய நெடுவீதி நடப்பர்போலும்
அணியாரூர்த் திருமூலட் டானனாரே” எனத் திருமூலட்டானத்திலே
எழுந்தருளியிருப்பதை விட்டுத் திருவீதியிலே வந்து திருவிழாக் கொள்வர்
என்ற கருத்துப்பெற, அப்பர் பெருமான் சுவைபெறக் கூறியருளியமையும்
இங்குக் காண்க. நாறுதல் - அருள்விளங்குதல்.
வீதிபார்
- என்பதும் பாடம். 6
| 92.
|
செங்கண்
மாதர் தெருவிற் றெளித்தசெங் |
|
| |
குங்கு
மத்தின் குழம்பை யவர்குழற்
பொங்கு கோதையிற் பூந்துகள் வீழ்ந்துடன்
அங்கண் மேவி யளறு புலர்த்துமால். |
7 |
(இ-ள்.)
செங்கண்...குழம்பை - சிவந்த கண்களையுடைய பெண்கள்
தெருவிலே தெளித்த குங்குமக் குழம்பை; அவர் குழல் ... வீழ்ந்து - அவர்
கூந்தலிலே அணிந்த புதுப் பூமாலைகளிலிருந்து பூந்தாதுகள் உதிர்ந்து
விழுந்து; உடன் ... புலர்த்தும் - குழம்பினுடனே அங்குப் பொருந்தி
அச்சேற்றை உலரச்செய்யும். ஆல் - அசை.
(வி-ரை.)
பெண்களுக்குச் செங்கண் அழகினைக் காட்டும். கண்
தாமரை போலும் என்று உவமிப்பர். செங்கண் செவ்வரி படர்ந்ததால்
உளதாம்.
|
|
|
|