Periya Puranam
நாயனார் புராணம்
- 2) முதலிய திருவாக்குக்கள் காண்க. இவ்வரசர் ஆகமம்
சொன்ன முறைமையால் நிபந்தம் ஆராய்ந்தமை மேலே சொல்லப் பெறுதலும்
காண்க.
எண்ணிலாதன - எண்இலாதன
- அளவில்லாத என்க. எண்
நிலாதன - ஒரு எண்ணுக்குள்ளே நிற்காதவை எனவுமாம். எண்
- எண்ணம்;
அது தனக்கென்று ஒரு பயனை உட்கோளாகக் கொண்டு எண்ணிச் செய்வது.
இதனைக் காமேட்டி (புத்திர காமேட்டி போல்வன) என்பர். இவ்வேந்தன்
செய்த வேள்விகள் அவ்வாறு ஒரு எண்ணம் பற்றிச் செய்யப்பெற்றன அல்ல
என்பார் எண் இலாதன என்றாருமாம். 14
| 100.
|
கொற்ற
வாழி குவலயஞ் சூழ்ந்திடச் |
|
| |
சுற்று
மன்னர் திறைகடை சூழ்ந்திடச்
செற்ற நீக்கிய செம்மையின் மெய்ம்மனுப்
பெற்ற நீதியுந் தன்பெய ராக்கினான். |
15 |
(இ-ள்.)
கொற்ற...சூழ்ந்திட - வெற்றி பொருந்திய தனது
ஆணைச்சக்கரம் உலகத்தைச் சூழ்ந்து நிற்கவும்; சுற்று...சூழ்ந்திட - அந்த
ஆணையினாலே சுற்றப்பெற்ற அரசர் திறைப்பொருள் தனது கடைவாயிலில்
சூழ்ந்துகொண்டு இருக்கவும்; செற்றம்...ஆக்கினான் - கோபத்தை நீக்கிச்
செம்மையினாலே உண்மையே உருவமாகிய ஆதிமனுச் சக்ரவர்த்தி பெற்ற
மனுநீதி என்பதைத் தனது பெயராலே அமைந்ததாக ஆக்கிக்கொண்டான்.
(வி-ரை.)
செம்மையின் - சூழ்ந்திட - சூழ்ந்திட - ஆக்கினான் என்று
வினை முடிவு செய்க.
கொற்ற ஆழி - ஆழி
- சக்கரம். அரச ஆணையை ஒரு
சக்கரமாகக் கூறுதல் மரபு. செலுத்தியவாறெல்லாம் ஓடிச் சுற்றிச் செல்வதனால்
சக்கரம் போன்றது என்க.
ஆழியின் கொற்றமாவது இவனது ஆணையானது எங்குச் செலுத்தினும்
வெற்றியே பொருந்தி நிகழ்தல். வேறொன்றினாலும் வாதிக்கப்படாத ஆணை.
இதனை ஆக்ஞா என்பர் வடநூலார். இறைவனது ஆணைபோல இவ்வரசனது
ஆணையும் ஆம் என்பர். அதனாலே அரசரை இறை என்று அழைப்பது
மரபாயிற்று.
குவலயம்
- கு + வலயம். கு - பூமி. குவலயம் - சுற்று.
பூமியின்
இவ்வரசனுடைய ஆணை வரம்பாகிய எல்லை.
சுற்று மன்னர் - தனது ஆணையினாற் சுற்றப்பட்டாரும்,
அன்றி
அதற்குட்படாமலே நட்புவேண்டித் தன்னைச் சுற்றிக்கொண்டாரும் ஆகிய
அரசர்கள். “ஆழி குவலயம் சூழ்ந்திட“ என்றாராதலின் அதனாற் சூழப்பெற்ற
என்பார் சுற்றும் என்றார். சுற்றும் - சுற்றப்படும் - எனச் செயப்பாட்டு
வினைப் பொருளில் வந்தது. இவர்களேயன்றிச் “செல்லாத பல்வேறு தீபத்துச்
செங்கோன்மை வல்லாரும்...நட்படைய நடக்கின்றார்“ என்ற திருவிளையாடற்
புராணம் - வாதவூரடிகளுக்கு உபதேசித்த படலத் திருப்பாட்டிற் காணுமாறு,
ஆணையினாற் சுற்றப்படாத பலரும், தாமாகவே இவரது நட்பினாற் பயன்
பெறும்பொருட்டு இவர் வாயிலிற் சூழ்கின்றார்கள் என்பதும் குறிக்கச் சுற்றும்
மன்னர் என்றார்.
மன்னர் திறைகடை சூழ்ந்திட
- மன்னரும் அவர் கொணரும்
திறையும் கடைவாயிலிலே சூழ.
செற்றம் நீக்கிய செம்மையின் - இவ்வாறு
ஆழி சூழ்வதும்
திறைசூழ்வதும் தமது போர் வலிமையாலன்றி அன்பினால் அமைந்த ஆணை
வலிமையினாலே உளவாயின என்பது குறிக்கச் “செற்றம் நீக்கிய
செம்மையின்“ என்றார். செற்றம் - கோபமும் அதன் வழித்தாய் வரும்
தீக்குணங்களும். நீக்கிய - தன்னிடத்திலே
|
|
|
|