| 120 | திருத்தொண்டர்புராணம் மூலமும் உரையும் |
Periya Puranam
யும் தன் ஆணை சூழ்ந்த
யாவரிடத்திலேயும் இல்லாமற் போக்கிய. உலக
வாழ்க்கையிலே விளையும் தீமைகட்குக் காரணமாக நின்ற தீக்குணங்களிலே
முதன்மை பெற்றது கோபம் என்பதே. அதனை நீக்கினாற்றான் உலகத்திலே
எல்லா உயிர்களிடத்தும் செம்மையாகிய வாழ்வு நிகழும். ஆதலின் செற்ற
நீக்கிய செம்மையின் என்றார். நீங்கிய என்னாது நீக்கிய என்றதனாலும்
இக்கருத்தை வலியுறுத்தியபடியாம்.
செம்மை இன்
- செம்மையினாலே. செம்மை காரணமாக. ஏதுப்
பொருளில் வந்தது.
மனுப்பெற்ற நீதி
- என்றது குல முதல்வனான மனு அரசன்
செலுத்திய நீதியினை அல்லது ஆட்சியினை, அந்நீதிகளைத் தொகுத்து
மனுதரும சாத்திரம் என வழங்குவர்; அந்த மிருதியாகிய மனுதரும சாத்திரம்
அக்காலத்துக் கேற்ப வகுக்கப் பெற்றது. ஆதலின் இந்நாளில் பலரும் மயங்கி
யறிவது போல அது கொண்டு செற்றமும் பூசலும் விளைத்தல் பொருந்தாது
என்க. “செற்ற நீக்கிய செம்மை“ என்றும், “மெய்ம்மனு“
என்றும் கூறிய
குறிப்புக்கள் ஆசிரியரது தெய்வ வாக்காதலால், அவை இந்நாளில் விளையும்
மனுவைப் பற்றிய போராட்டங்களை விலக்கவே எழுந்தன போலவும்
தொனிக்கின்றன.
தன் பெயராக்கினான்
- முன் மனுஅரசன் செலுத்திய நீதி
ஆட்சியைப் போலவே இவ்வேந்தனும் செலுத்தியதனால் அப்பெயருடன்
சேர்த்துச் சொல்லப் பெற்றான்.
இக்காலத்துக்கு முன்சொல்லிய அத்தரும சாத்திரம்
ஏலாதென்று
காலத்திற்கேற்பப் பராசரர் சுமிருதி வகுத்தார் என்றும், அதனாலே,
கலௌபராசர' என விதித்தனர் என்றும் கூறுவர். இதனுண்மைகளை
ஆராய்ந்து தெளிக.
மனு - மன் - பகுதி - நினைத்தல் - “மனனம்“
என்பதும் காண்க.
மனு - எல்லாராலும் நினைக்கத் தக்கவன், நினைக்கவேண்டியவற்றையே
நினைப்பவன் என்பன பொருளாம். மன உணர்ச்சியுடைமையாலே மக்கள்
மானிடர் எனப் பெற்றார் என்பர்.
ஆணை - (கடவுள்) இறைவன் ஆணை - பெரியோர் ஆணை .
அரசனாணை - இவை மூன்றும் ஒன்று போலக் காரணம்
வினவாமலே
விசுவசித்துப் பின்பற்றிக் கீழ்ப்படியத் தக்கன. இவ்வாணைகளைக் கீழ்ப்படிந்த
பின்னரே காரணம் தெரியவரும். பெரியோர் ஆறுவது சினம் -
ஓதுவதொழியேல் - ஒளவியம்பேசேல் - என்பனவாதி ஆணைகளை முதலில்
தந்தனர். அவற்றிற்குக் கீழ்ப்படிந்து நடந்தார்க்குத் “தீராக் கோபம் போராய்
முடியும்“ “ஓதாதார்க்கில்லை யுணர்வொடு மொழுக்கம்“ - “ஒளவியம்
பேசுத
லாக்கத் திற்கழிவு“ என்பனவாதி அந்த ஆணைகளுக்குரிய காரணங்களைப்
பின்னரே முறையே விரிந்து உணர்த்தினது காண்க. குழந்தைகளுக்கு
ஆணைகளின் காரணங்காட்வதென்பதும், அது தெரிந்த பின்னரே அவை
அவற்றைப் பின்பற்றுவதென்பதும் இயலா. அவ்வாறு செய்வதாயின் வாழ்க்கை
நடைபெறாது. குழந்தைப் பக்குவமுடையாரே உலகிற் பலராதலின் உலக
ஒழுக்கத்திலும் இவ்வாறே நியதியாம். முதலிலே இவ்வாணைகளைப் பின்பற்றி
ஒழுகிய பின்னர் அதன் பயனை அறிந்து அவ்வொழுக்கத்தின் நிலைபெறுதல்
வேண்டு மென்பது அறிஞர் துணிபு.
சில பிரதிகளில் இப்பாட்டு இதனை அடுத்த ‘பொங்குமாமறை'
எனும்
பாட்டின் பின் காணப் பெறுகின்றது. 15
| 101.
|
பொங்கு
மாமறைப் புற்றிடங் கொண்டவர் |
|
| |
எங்கு
மாகி யிருந்தவர் பூசனைக் |
|
|
|
|
|