Periya Puranam
| |
கங்கண்
வேண்டு நிபந்தமா ராய்ந்துளான்
துங்க வாசமஞ் சொன்ன முறைமையால். |
16 |
(இ-ள்.)
பொங்கும் - நிபந்தம் - (இவ்வரசன்) மேன் மேலும்
வளர்கின்ற மறை வடிவினதாகிய புற்றினை இடமாகக் கொண்டவரும்,
எங்கேயும் ஆகி வீற்றிருப்பவரும் ஆகிய வன்மீக நாதருடைய பூசனைக்கு
வேண்டிய படித்தரங்களை ஆராய்ந்துளான்...முறைமையால் - சிவாகமங்களில்
விதித்தவாறு ஆராய்ந்து நியமித்தனன்.
(வி-ரை.)
முறைமையால் - பூசனைக்கு - நிபந்தம் - ஆராய்ந்துளான்
எனக் கூட்டி வினைமுடிபு காண்க.
பொங்கும் மாமறைப்
புற்று - இறைவனுக்கு இருப்பிடமாகித்
தனக்குள் அவனைக் காட்டிக் கொண்டிருத்தலால், புற்று மறைவடிவை
யுடையது; ஆதலின் மறைப்புற்று என்றார். “மறையே நமது பாதுகையாம் ...“
என்பனவாதி திருவாக்குக்களின்படி மறை இறைவனுக்கு இடமாகும். வேதம்
பல சமயங்கட்கும் பொதுவாய் அவரவர் பொருளும் விரித்தற்கிடமாயிருத்தலிற்
பொங்கும் என்றார்.
எங்கும் ஆகி இருந்தவர்
- புற்றை இடம் கொண்டாராயினும் எங்கும்
ஆகி இருந்தவர் எனவும், எங்கும் நிறைந்து இருந்தாராயினும் அன்பர்கள்மீது
வைத்த கருணையினால் அவர்கள் தம்மை வழிபடும் பொருட்டு வெளிப்படக்
காணப்புற்றிலே இடங்கொண்டு இருப்பவர் எனவும் இருவழியும் பொருள்
உணர்ந்து கொள்ளத்தக்கது. இதனால் இறைவனது சர்வ வியாபகத்தன்மை
என்ற இலக்கணம் குறிக்கப்பெற்றது.
இருந்தவர் - “சிவ“ சத்தத்திற்கு இருத்தல்
- கிடத்தல் என்று பொருள்
கொண்டு, எங்கும் இருப்பவர் - எல்லாவற்றிலும் பதிந்து கிடப்பவர் -
ஆதலின் சிவபெருமானுக்குப் பெயராயிற்று என்பர். இதனையே எங்கும் -
ஆகி - இருந்தவர் என்றார்.
நீதி மன்னன் - என்று அவனது நீதியைக்
“கொற்ற ஆழி“ எனும்
மேற்பாட்டிலே சொல்லி, நீதி மன்னர் கடைப்பிடித்துக் காக்கவேண்டிய சிறந்த
ஒழுக்கம் சிவாலய பூசை காத்தலாகிய இதுவே என்பார் அதனை அடுத்து
இப்பாட்டிற் கூறினார். சில பிரதிகளிற் காண்கிறபடி இப்பாட்டு அதன்மேல்
உள்ளதாயின், விண்ணவர் வேள்விகளை இயற்றியும், புற்றிடங் கொண்டார்
பூசனைக்கு நிபந்தம் ஆராய்ந்து வைத்தும், உள்ள அரசன், அதன்
துணைகொண்டு, உலகநீதி செலுத்தினான் - என்று
முறைப்படுத்துக.
புற்றிடங் கொண்டவர்
- எங்குமாகி யிருந்தவர் - என்பதைத்
தனது தலைநகராகிய திருவாரூரிலே புற்றிடங்கொண்டவரும், தனது கொற்ற
ஆழி சூழும் குவலயத்தில் எங்கும் எங்கும் கோயில் கொண்டவருமாகிய
சிவபெருமான், பூசனைக்கு நிபந்தம் ஆராய்ந்து வைத்தனர் என்று
உரைப்பதுமாம்.
அங்கண் வேண்டும்
- அங்கங்கே வேண்டப்பெறும். நிபந்தம் -
கட்டளைப் படித்தரம்.
ஆராய்ந்துளான் - ஆராய்ந்து அதன்படி
நியோகித்து வைத்தான்;
ஆராய்ந்து அவ்வாராய்ச்சியிற் கண்ட துணிபின்படி நின்றவன். உளான்
-
அதன்படி நின்றவன்; “கற்க...கற்றபின், நிற்க வதற்குத் தக“ என்பது
ஆணையாகலின்.
முன்னர் வேள்விகள் எவ்வாறு தனக்கென ஒரு எண்ணமிலாது
இயற்றினானோ, அதுபோலவே பூசனைக்கு நிபந்தமும் வைத்தான் என்க.
என்னை? இவை திருக்கோயில்களிலே செய்யும் பரார்த்த பூசை. இவற்றால்
வரும் புண்ணியம் அரசர்க்கு முண்டாயினும் இவை பிறர்பொருட்டுச்
செய்வனவாம். அவற்றிற்கு
|
|
|
|