| 130 | திருத்தொண்டர்புராணம் மூலமும் உரையும் |
Periya Puranam
உம்பரின்
அடைதல் - இறந்து படுதல். அமங்கலம்பட, இறந்தது
-
என்னாது மங்கல வழக்கினாற் கூறினார்.சிவலோகப் பிராப்தி யடைந்தார்
என்று எழுதும் மங்கல வழக்கு இன்றும் காண்கிறோம். இங்குக் கன்றாக
வந்தது “இயமனே“ என்பர். கன்று தனது உம்பருலகமாகிய இயமலோகம்
சேர்ந்தது என்ற சுவைக் குறிப்பும் காண்க.
“ஈசன்
பசுவாகி யேமனொரு கன்றாகி
வீசு புகழாரூர் வீதிவந்தா ரம்மானை;
வீசு புகழாரூர் வீதிவந்தா ராமாயின்
காசளவு பாலும் கறக்குமோ வம்மானை;
கன்றையுதை காலி கறக்குமோ வம்மானை“ |
என்று பின்னாட் புலவர்
உருசிபெறப் பாடியிருத்தலும் காண்க.
உருகு தாய் - கன்றை நினைந்தே உருகும்
தலையீற்றுப்பசு.
“... கன்றை நினைந்தெழு தாயென வந்த கணக்கது வாகாதே ...“ -
திருவாசகம். “கன்றகல் புனிற்றாப் போல்வர்“ என்று கண்ணப்ப நாயனார்
புராணத்திலே விளக்குவதுபோல், சிறிதுநேரம் பிரிந்திருத்தல்கூடத்
தாங்கமாட்டது துன்பப்படும் தலையீற்றுப் பசு, தன் கன்றினை இழக்க நேரிட்ட
காலத்துச், சொல்ல இயலாதபடி மிகவும் துன்பம் அடையும் - என்பது
காட்டுவார் உருகு தாய் என்று அடைமொழி புணர்த்திக் கூறினார்.
கண்டு - ஈன்றணிமைத்தாகிய கன்றைத்
தனது கண்மறையவும்
பொறுத்து அறியாததாகிய தாய்ப்பசு, என்றுங்காணாத இந்நிலையைக்
கண்டால் அடையும் துன்பத்திற்கு அளவில்லை என்பது குறிக்கக் கண்டு
என்றார். உருகுவது மனத்தின் தொழில்; அலமருதல் - ஓடுதல்
-
வெம்புதல் - மெய்ந்நடுங்கி வீழ்தல் - இத்தனை செய்கைகளும்
மனத்துன்பத்தினால் உளவாகி, அதனைப் புறத்தே விளக்கின. அலமருதல்
முதல் வீழ்தல் ஈறாக ஒன்றின்மேல் ஒன்றாய் மேன்மேல் துன்பம் அடர அடர
விளைந்து சகியாது இறுதியில் வீழ்தலுடன் முடிந்தது - என்ற
வைப்புமுறைப்பாட்டை நோக்குக. மனதின் உள்ளன்பு காரணமாக நிகழும்
நிகழ்ச்சி, அதன் எடுத்துக்காட்டாகப் புறத்தே மெய்ப்பாடுகளை
விளைத்தேவிடும். இவைகளே உள் அன்பினைக் காட்டும் அடையாளங்களாம்.
“அன்பிற்கு முண்டோ அடைக்குந் தாழ்“ என்பது திருக்குறள். அங்கு
-
அவ்விடத்தே.
செல்லத்தான்பட்டு - செல்லப்பட்டங்கு
- என்பனவும் பாடங்கள்.
23
| 109. |
மற்றது
கண்டு மைந்தன் “வந்ததிங் கபாய“
மென்று
|
|
| |
சொற்றடு
மாறி நெஞ்சிற் றுயருழந் தறிவ ழிந்து
“பெற்றமுங் கன்று மின்றெ னுணர்வெனும்
பெருமை
மாளச்
செற்றவென் செய்கே“ னென்று தேரினின் றிழிந்து
வீழ்ந்தான். |
24 |
(இ-ள்.)
மற்றது....அறிவழிந்து - மேலே கூறியபடி நிகழ்ந்த அதனை
அரசகுமாரன் கண்டு இங்கு அபாயம் வந்துவிட்டது என்று உரைகுளறி
மனத்துன்பமடைந்து அறிவையிழந்து; பெற்றமும்...என்று - “இன்று பசுவும்
கன்றும் எனது உணர்வாகிய பெருமையை அடியோடு அழியும்படி
செய்துவிட்டனவே! இதற்கு நான் என்செய வல்லேன்“ என்று
சொல்லிக்கொண்டே; தேரில்...வீழ்ந்தான் - தேரிலிருந்தும் இறங்கி வீழ்ந்தனன்.
(வி-ரை.)
மற்ற அது - மற்று - வினைமாற்றின் கண் வந்தது;
நெஞ்சில் துயருழந்து
- கட்பொறி ஒருபுலனை அறிகின்றவழி
நெஞ்சம் அப்புலனை ஒற்றித்து நின்று அறியும். அவ்வறிவு முறையானே
உயிரறிவுக்கு
|
|
|
|