Periya Puranam
விடயமாகும்; அவ்வுயிரறிவு
கலக்க வாக்கு முதலியவற்றின் றொழிலும்
மெய்ப்பாடுகளும் நிகழும். இந்நிகழ்ச்சிகளை விரைவுபற்றி, ‘கண்டு.......வந்தது
இங்கு அபாயம் என்று சொல் தடுமாறி' என்றார்.
வந்தது இங்கு அபாயம்
- அபாயம் வந்தது என்னாது, வந்தது
அபாயம் என்றமையே சொல் தடுமாற்றத்தைக் குறிப்பதாம். உள்ளப்
பதைபதைப்புக் காரணத்தால், பின்னே வரவேண்டிய வினை முன்னும்,
விவரணம் பின்னும் வந்தன. கீழ் வீழ்ந்து கை ஒடிந்தவன் - ஒடிந்தது கை
என்று அரற்றுதல் போல.
பெற்றமும் கன்றும் - பெற்றம் - பசு.
முன்னே புகுந்து இறந்தது
கன்றேயாகவும் இதன் பெருந் துன்பத்துக்கும் பழிக்கும் பசுவின் பெருமையே
நிலைக்களமாதலின் பெற்றத்தை முன்னே வைத்தார்.
உணர்வெனும் பெருமை மாளச் செற்ற - உணர்வாகிய
பெருமை.
உணர்வாவது சிவக்கலையும் பலகலையும் திருந்த ஓதி முற்றியதால்
வினைமுயற்சியின் விளைந்த பிறவியும் பயனுடையதேயாம் என்று தெரிய
உணர்தல். அதன் பெருமை - சிவத்தை அடைய நிகழ்ந்த இப்பிறப்பின்
பெருமையை எண்ணி மகிழ்ந்திருத்தல்.
மாளச்செற்ற -
இவ்வுணர்ச்சியை முழுதும் அழித்து வினை
காரணமாய் வந்த இப்பிறவி மேலும் பெரும்பாவத்துக்கே காரணமாயிற்று
என்ற சிறுமையையூட்டும் உணர்வாக மாறின; சிவனை அடைவதற்குப்
பயன்படாது, இப்பிறவி, சிவபிரானுக்கு உகந்த பெருமையுடைய பசுவின்
துன்பத்திற்குக் காரணமாயது எனும் சிறுமை உணர்வாக வந்ததையே குறிக்கப்
பெருமை மாள என்றார்.
செற்ற -
பசு அடையும் துன்பத்தாலும், கன்று இறந்துபட்ட
செயலினாலும், இவ்வாறு செறுதலினால் செற்ற என்று பன்மையிற் கூறினார்.
இறந்த கன்றுக்குச் செயலில்லையாயினும் அதன் இறப்பினால் நேர்ந்த செறுதல்
என்னும் விளைவை அதன் மேல் ஏற்றிக் கூறினார். மாளச்செற்ற என்றதனால்
பின் சரித நிகழ்ச்சிக் குறிப்பும் பெறப்பட்டதாம். இவ்வாறன்றி, உணர்வெனும்
பெருமை மாள - என்பதற்குப் பசுவுக்கும் தனக்கும் உணர்வு (அறிவு)ஒன்றில்
மட்டும் உள்ள பேதமானது இங்கு உணர்வு எனும் பெருமை அறிவாகிய
பேதம் - உணர்ச்சியின்றிச் செய்த இக்காரியத்தினால் நீங்க என்று முரைப்பர்.
இழிந்து - கீழே இறங்கி
- இழிவை யடைந்தவனாய் என்று
உரைத்தலுமாம். பொலிந்து போந்தானாகிய (105) வென்றி அரசிளங்குமரன்
இச்செயலினால் இழிந்து வீழ்ந்தான் என - இச்செயலின் இழிபை எடுத்துக்
கூறியவாறுமாம்.
வீழ்ந்தான்
- நிற்க மாட்டாதவனாய் வீழ்ந்தனன். பசு வீழ்ந்தது
போலவே இதுவும் துன்பமிகுதியால் நிகழ்ந்தது. 24
| 110.
|
அலறுபே
ராவை நோக்கி யாருயிர் பதைத்துச்
சோரும்; |
|
| |
நிலமிசைக்
கன்றை நோக்கி நெடிதுயிர்த் திரங்கி
நிற்கும்;
“மலர்தலை யுலகங் காக்கும் மனுவெனு மெங்கோ
மானுக்
குலகிலிப் பழிவந் தெய்தப் பிறந்தவா வொருவ“
னென்பான். |
25 |
(இ-ள்.)
அலறு...சோரும் - (மேற் சொல்லியவாறு) அலறுகின்ற சிறந்த
பசுவை ஒருபுறம் பார்த்து (அதன் உயிர் பதைக்கின்றவாறே அரச குமாரனும்)
தனது ஆருயிர் பதைபதைத்துச் சோர்வடைவான்; நிலம்...நிற்கும் -
(மற்றொருபுறம் தன் தேர்க்காலிலிறந்துபட்டு) நிலமிசை வீழ்ந்து கிடக்கும்
கன்றைப் பார்த்து விசனத்தால் பெருமூச்சு விட்டு இரங்கி நிற்பன்;
மலர்தலை...என்பான் -
|
|
|
|