| 134 | திருத்தொண்டர்புராணம் மூலமும் உரையும் |
Periya Puranam
மன்னுயீர்
காக்கும் - உலகில் நிலவிய எவ்வகை உயிர்களையும்.
மேலே (14) “மன்னுயிர்கட்கெலாம்...காவலான்“ என்றதும், கீழே (36)
“மன்னுயிர் காக்குங் காலை“ என்பதும் காண்க. காக்கு மனு - முன் காத்த
மனுவைப்போல இப்போது காக்கும்.
பொற்கோயில் வாயில்
பொன்னணிமணி - பொற்கோயில் -
அரண்மனை. இலக்குமியைக் கொண்ட திருமால் போன்று காவற்றொழில்
செய்யும் அரசன் வாழுமிட மாதலின் பொற்கோயில் என்றார். பொன்
-
இலக்குமி; வாயில் - வழி. தீமை புகாமைக்கும்,
நன்மை புகுதற்கும்,
வழியாயிருத்தலின் வாயில் எனப் பெற்றது. பொற்கோயில், பொன்னணிமணி,
என்றதற்கேற்ப இதுவும் பொன் வாயில் என்க.
பொன் அணி மணி - பொன்னினாலே அழகு
செய்யப்பட்ட மணி.
பொன் அணிபோன்ற - என்றலுமாம். இதனை ஆராய்ச்சி மணி என்பர். மணி
அடிக்கப் பெற்றால், அது ஒரு குற்றம் அல்லது அநீதி நிகழ்ந்துவிட்டமையை
அறிவிக்கும்; அக்குற்றம் யாவர் செய்தனர் என்ற ஆராய்ச்சி அதனின்று
தொடங்கும்; அவ்வாறு ஆராய்ச்சியைக் கிளப்புவதால் அதற்கு ஆராய்ச்சி
மணி என்று பெயர். தமது குறையை, மணி யடிப்பதன் மூலம் வேறொருவர்
உதவியின்றி இலகுவில் தாமே அறிவித்துக்கொள்ளும் பொருட்டு அரண்மனை
வாயில் வெளியில் ஒரு மணியைக் கட்டிவைப்பது அந்நாள் அரசர் நீதிமுறை
வழக்கங்களில் ஒன்று. இப்பசு அஃறிணையேயாயினும் உயர்திணைபோலவே
அறிவுபெற்று இச்செயல் செய்தது என அரசர் விதந்து கூறுவார். இது
பசுவுருவுடையதேயாயினும் பசுவல்லாது இறைவனது அருளாகிய
அறக்கடவுளேயாதலின் அருளை வெளிப்படுக்கும் தேவர் செயலைச்செய்தது
- என்பதும் குறிப்பு.
செங்கோல் - ஒருபாற் கோடுதலில்லாது
யாவரிடத்தும் ஒரே
தன்மையாய் நிகழ்வது. உயிர்த்தல் - விம்மல்
- கண்ணீர் வார்தல் என்ற
மெய்ப்பாடுகள் துன்பத்திற் போலவே அன்பினாலும் நிகழும். இப்பசுவினால்
வெளிப்பட்ட இவை துன்பம்போலத்தோற்றினும் முடிவில் அன்பு
வெளிப்பாட்டிற்கேயாயினமை காண்க.
“விம்மா
வெருவா விழியாத் தெழியா வெருட்டுவார்
தம்மாண் பிலராய்த் தரியார் தலையான் முட்டுவார்“
-
திருவாரூர் - குறிஞ்சி - 6 |
என்று இந்தத் திருவாரூரிலே
அன்பினது இலக்கணத்தை அப்பர் சுவாமிகள்
எடுத்துக்காட்டி அருளியிருப்பதும் காண்க. 27
| 113.
|
பழிப்பறை
முழக்கோ? வார்க்கும் பாவத்தி
னொலியோ?
வேந்தன் |
|
| |
வழித்திரு
மைந்த னாவி கொளவரு மறலி யூர்திக்
கழுத்தணி மணியி னார்ப்போ? வென்னத்தன்
கடைமுன்
கேளாத்
தெழித்தெழு மோசை மன்னன் செவிப்புலம் புக்க
போது. |
28 |
(இ-ள்.)
பழிப்பறை...என்ன பழியினது பறைமுழக்கமோ? கட்டுமியல்
புடைய பாவத்தின் சத்தமோ? அரசனது மரபுக்கு ஒரு மைந்தனாகிய
அரசிளங்குமரன் உயிரைக் கைக்கொள்ள வருகின்ற இயமனுடைய
ஊர்தியாகிய எருமைக் கடாவின் கழுத்தில் அணிந்த மணியின் பெருஞ்
சத்தமோ? என்று கருதும்படி; தன்..போது - தனது கடை வாயிலிலே இதற்கு
முன் கேட்கப் பெறாத, ஆர்த்து எழுகின்ற மணி ஓசையானது மன்னனது
செவிப் புலத்திற் புகுந்தபோது;
(வி-ரை.)
கடைமுன்கேளா - ஓசை - முழக்கோ ஒலியோ - ஆர்ப்போ
- என்ன (ஐயுறும்படி) செவிப்புலம்புக்கபோது.
பழிப்பறை முழக்கோ - பழி + பறை -
பழி சாற்றும் பறை
முழக்கமோ பழிப்பு + அறை எனக் கொண்டு பழிப்பாகிய ஒரு பொருள் தான்
இருப்பதை எடுத்துச் சொல்கின்ற சத்தமோ - என்றலுமாம்.
|
|
|
|