| 136 | திருத்தொண்டர்புராணம் மூலமும் உரையும் |
Periya Puranam
என்பது அவர் திருவாக்கு.
முறை யறிவித்தமையால் இங்கு மணியோசையை
ஒலி யென்றமை காண்க. இதுபோலவே இங்கும் காவலனும் ஓசை கேட்டதும்
முறை செய்தான் - கன்றும் எழுந்தது - பசுவின் துயரமும் நீங்கியது -
என்பதும் காண்க. 28
| 114.
|
ஆங்கது
கேட்ட வேந்த னரியணை யிழிந்து
போந்து |
|
| |
பூங்கொடி
வாயி னண்ணக், காவல ரெதிரே
போற்றி
“ஈங்கிதோர் பசுவந் தெய்தி யிறைவ! நின் கொற்ற
வாயிற்
றூங்கிய மணியைக் கோட்டாற் றுளக்கிய“ தென்று
சொன்னார்.
|
29 |
(இ-ள்.)
ஆங்கது...நண்ண - அவ்வோசை கேட்ட அரசன் தன் சிங்கா
சனத்திலிருந்து இழிந்து போய் வாயிலில் வந்தான்; அவ்வளவிலே;
காவலர்...சொன்னார் - வாயிற்காவலாளர்கள் எதிரே வந்து அவனை வணங்கி
“இறைவனே! இங்கு இது ஓர் பசு வந்து நினது வெற்றி பொருந்திய
வாயிலிலே தூங்கும் மணியை எய்தித் தனது கொம்பினால் அசைத்தது“
என்று சொன்னார்கள்.
(வி-ரை.)
ஆங்கு - அது - கேட்டவேந்தன் - செவிபுக்கபோது
அந்த மணி ஓசையை அங்குக் கேட்ட அரசன். இருந்து - போந்து...நண்ண
- இந்நிகழ்ச்சியை நேரிற் கண்டபோதே அரசிளங்குமரன் தேரினின்றும்
இழிந்து வீழ்ந்ததுபோல, அரசன் கேட்டபோதே ஐயுற்று அரியணையினின்றும்
இழிந்து புறம்போந்து வாயில் நண்ணினான். இது இவன் இயல்பு. பெருங்
காவலான் - மேலே என்பது காண்க.
“கோச்சோழர் குலத்தரசு கொடுத்தார் போலும்“,
“வளவர்கோன்
பாவை“, “கலந்தநீர்க் காவிரிசூழ் சோணாட்டுச் சோழர் தங்கள் குலம்...“
என்பனவாதி தேவாரத் தமிழ்மறைகள் இக்குலத்தைச் சிறப்பித்தமையும்
காண்க. ஆங்கது ஒரு சொல்; அதனை.
இழிந்து
- நீதியே செய்தலினான் அரியணையில் உயர்வுடன்
வீற்றிருந்தவன் அந்நிலையினின்றுந் தாழ்ந்து இழிவை அடைந்தனன் என்பதும்
குறிப்பு. இழிதல் - மேலிருந்து கீழே இறங்குதல்.
109-ம் பாட்டு உரையிற்
காண்க.
கொடி வாயில்
- கொடி அரசு அடையாளங்களுள் ஒன்று;
தசாங்கத்தொன்று; கொடியுயர்த்துதல், வெற்றி குறிக்கும். கொற்ற வாயில்
என்றமை காண்க; கொடியைத் தாழ்த்தலும், முடக்குதலும், கொற்றத்தின்
மறுதலையைக் குறிப்பனவாம்.
| “கொடிநுடங்கு
திருவாயிற் புறத்தணைந்தார்“
(திருநா - புரா - 86) |
என்னும் பாட்டின் குறிப்பும் ஒப்பு நோக்குக.
எதிரே
- அறியும் ஆவல்கொண்டு நண்ணிய அரசரைவிட, அவருக்கு
அறிவிக்கும் ஆவல் மிகவுடையவராய் அவர் கேட்கும் முன்னரே எதிரே
சென்று. ஈங்கு - அரசர்களும் வருதற்கு அஞ்சுகின்ற
இவ்விடத்தில். இது -
முன் நிற்கின்ற இது. (முன்னால் நிற்கும் பசுவைச்சுட்டி) இதோ தேவரீர் முன்
நிற்கும் இப்பசு - அண்மைச் சுட்டு.
ஓர் பசு - ஒரு பசு; அஃறிணை என்று இலகுபெறக்
கூறினார்கள்
என்க. ஒன்றாகிய - தனித்த - ஒப்பற்ற - பசு என்ற குறிப்பும் பெறுகின்றோம்.
இதற்கு முன் எந்தப் பசுவும் இவ்வாறு செய்யாமையால் இது
தனித்தன்மையாயிற்று என்பதாம். ஓர் - வினைத்தொகையாக்கி,
ஓர்ந்து தக்கது
செய்யும் பசு - என்றுரைத்தலுமாம்.
வந்து - செலுத்துவாரின்றித் தானே வந்து;
எய்தி - மணியை எய்தி
எனக்கூட்டுக.
தூங்கிய மணி - இதுவரை அடிபடும் காரணம்
நிகழாததால்
தூங்கிக்கொண்டிருந்த மணி என்றலுமாம். தொங்கிய மணி என்க.
இப்பொருட்குத் தொங்க
|
|
|
|