பக்கம் எண் :


திருக்கூட்டச் சிறப்பு143

Periya Puranam
  ஊனமிகு பகைத்திறத்தாற் கள்வரா லுயிர்தம்மால்
ஆனபய மைந்துந்தீர்த் தறங்காப்பா னல்லனோ?“
36

122. “என்மகன்செய் பாதகத்துக் கிருந்தவங்கள்
                            செயவிசைந்தே
 
  அன்னியனோ ருயிர்கொன்றா லவனைக்கொல்
                            வேனானாற்
றொன்மனுநூற் றொடைமனுவாற் றுடைப்புண்ட
                          தெனும்வார்த்தை
மன்னுலகிற் பெறமொழிந்தீர்! மந்திரிகள்! வழக்“
                            கென்றான்.
37

     இம்மூன்று பாட்டும் ‘அறம் இது' என்ற அமைச்சருக்கு அரசன் கூறியன.

     120. (இ-ள்.) வழக்கென்று...மருந்தாமோ? - மறையந்தணர்கள் விதித்த
வழி மைந்தனை நிறுத்தலே இதற்குத் தீர்வாகிய வழக்கு என்று நீங்கள்
சொன்னீர்களானால், வலிந்துகொல்லப்பட்டமையால் இளங்கன்றை இழந்து
அலறுகின்ற பசுவின் துன்பத்துக்கு அது மருந்தாகுமோ?;
இழக்கின்றேன்...சலியாதோ? - பசு தன்கன்றை இழந்தமைக்குத் தீர்வு
ஆகும்படி நான் என் மகனை இழந்து விடுகின்றேன் என்று கருதி நீங்கள்
எல்லோரும் சேர்ந்து சொல்லிய இந்தத் தீமைக்கு நான் உடன்பட்டால் தரும
தேவதைதான் சலிப்படையாதோ?  35

     121. (இ-ள்.) வெளிப்படை. (அந்த அரசியற்றருமம் தான் யாதெனில்)
நிலத்தின் வாழும் பல உயிர்களையும் காவல் செய்யும்போது, அதற்கு
இடையூறாகத் தன்னாலும், தன் பரிசனங்களாலும், பகைவர்களாலும்,
கள்வராலும், ஏனை உயிர்களாலும் வரும் ஐந்து பயங்களையும் தீர்த்துத்
தருமத்தைப் பிறழாமற் பாதுகாக்கின்றவன் அல்லனா மாநிலங்காவலன் என்ற
பெயருக்கு உரிமையுடையவன்?  36

     122. (இ-ள்.) என்மகன்...ஆனால் - என்மகன் செய்த பாதகச்
செய்கைக்குப் பரிகாரமாக அறநூல்வழி நிற்பித்தலாகிய தவம் செய்ய
இசைந்துகொண்டு, அவ்வாறே அன்னியன் ஒரு உயிரைக்கொன்றால்
அதற்குப்பரிகாரமாக அவனைக் கொலைசெய்வதே தீர்வு என்று
கொன்றுவிடுவேனேயானால்; தொல்...என்றான் - உலகத்திலே பழைய
காலத்திலிருந்து வந்த மனுநூல் நீதி, பின்னால் (அதே மரபில் அதே
பேர்கொண்ட) ஒரு தொடை மனுவரசனாலே அழிக்கப்பட்டது என்று
பழிச்சொல் வரும். அவ்வாறு உலகில் வரும் பழியை நான் அமையும்படி
மொழிந்தீர்கள்; இவ்வாறு மொழிதல் மந்திரிகள் வழக்கம் - என்று அரசன்
சொன்னான்.  37

     120. (வி-ரை.) வலிப்பட்டு - வலிமை - கொடுமை - செய்யப்பட்டு
அதனால் இழந்து என்று கூட்டுக. வலிப்பட்டு மருந்தாமோ என்று கூட்டி
அது குற்றந்தீர்க்கும் சததி பெற்றுப் பசுவின் நோய்க்கு மருந்தாகுமா?
என்றுரைத்தலுமாம். வலிப்பட்டு - வருந்தி - எனப் பொருள்கொண்டு -
வலியப்பட்டு அலறும் என்று கூட்டியும் உரைப்பர். நோய் மருந்து - நோய்
தீர்க்கும் மருந்து. நான்காம் வேற்றுமைத் தொகை; பகைமைப் பொருளில்
வந்தது. “மற்றிதற்குத் தீர்வு“ என்று அமைச்சர் சொல்லியது நோக்கி அரசன்
கூறுவதாம்.

     மைந்தனை யிழக்கின்றேன் என்று
- நான் இப்பசு நோய்க்குத்
தீர்வாக அதன் துயரத்தையே தாங்கும்பொருட்டு என் மைந்தனை அவ்வாறே
இழக்கத் துணிகின்றேன் என்று உட்கொண்டு அதை விலக்கக் கருதி
என்றபடி. அரசன் உள்ளம் செல்வழியை அவனடைந்த துயரத்தின்
மெய்ப்பாடுகளிலிருந்து மதியூகிகளாகிய அமைச்சர் உணர்ந்தனர். அவர்களது
உள்ளக் கருத்தை அவர்களது சொல்லிலிருந்து அரசனும் உணர்ந்தான் என்க.
இழக்கின்றேன் இன்று - என்பதும் பாடம்.