| 144 | திருத்தொண்டர்புராணம் மூலமும் உரையும் |
Periya Puranam
சழக்கு
- குற்றம். இங்குக் குற்றம் பொருந்திய வார்த்தை. அறியாமை
- என்றுமாம். இச்சழக்கினின் றேற்றுவார் 542 காண்க. சழக்கு
- குற்றம்
மலிந்த உலக பாசம். பசுவின் துன்பநோக்கி அரசன் அளாவிலாத்துயரடைந்து
சோர்ந்தபோது சிந்தை தளர்ந்தருள வேண்டுவதில்லை எனும் குறிப்புத்தோன்ற
தளர்வது - தீர்வன்று என்றாராதலின் இதனைச் சழக்கு என அரசன்
கொண்டனன்.
தருமம் - அறக் கடவுள். சலித்தல்
- அசைதல். அறம் எக்காலத்தும்
எவ்விடத்தும் ஒரே படித்தாய் நிலைபேறு பெற்றுச் செல்வது போய்,
நிலைத்தலின்றி அசைந்து வருதல். இசைந்தால்
- இசையமாட்டேன் என்பது
குறிப்பு. 35
121. (வி-ரை.)
இப்பாட்டு அரசன் காவலன் எனும் தகுதிபெறும்
தன்மையை விளக்குவது. இதுவே எல்லா நாட்டிலும் எல்லா அரசர்க்கும்
எல்லாக் காலத்தும் குறிக்கோளாய் இருக்கத் தக்கது.
அரசர் கடமைகள் முற்றும் இதில் அடங்குவனவாம். அரசாங்கம்
முடியரசோ - குடியரசோ - பொதுவரசோ - இன்னும் புதிதாய்க்
கிளம்பக்கூடிய எவ்வரசோ ஆயினும் அவையாவும் இதனையே
குறிக்கோளாகக் கொள்ளக்கடவன என்பது அறிஞர் துணிபு.
அறங் காப்பான் அல்லனோ மாநிலங் காவலனாவான் என்று
கூட்டி
முடிக்க. காப்பவனே காவலன் ஆகின்றான்; ஏனையோர் அரசராயினும்
காவலர் ஆகார் என்பது கருத்து.
உயிர் காக்கும் காலை அதற்கு (அக்காவலுக்கு) இடையூறாய்த்
தன்னால் - தன் பரிசனத்தால் பகைத் திறத்தால் - கள்வரால் - உயிரால் -
ஆன ஐந்து பயமும் தீர்த்துத்தான் காப்பான் அல்லனோ காவலனாவான்?
என்று கூட்டி முடிக்க.
அதனுக்கு
- அத்நாவலுக்கு; நிலத்துக்கு என்று கூறுவாருமுளர்.
இடையூறு
- இடையிலே உற்றுச் செல்வதைத் தடுப்பது - என்பது
பொருள். காவலாகிய அரச ஆணைக்கும், காக்கப்படும் உயிர்களுக்கும்,
இடையிலே உற்று அக்காவலாணை தொடர்ந்து செல்லாமல் தடுப்பது.
தன்னால் -
மற்ற நான்கு வகைகளாலும் வரும் இடையூற்றை அரசன்
தான் தீர்ப்பன். தன்னால் வரும் இடையூற்றை தீர்ப்பார் பிறரின்மையின்
முதலிலே வராமற் காக்கப்படுவது தன்னால் நேரக்கூடிய இடையூறேயாகும் -
என்ற முதன்மைபற்றித் தன்னால் என்று முதலில் வைத்துக்கூறினார்.
தன்னால் வருவன - இறைப்பொருளை மிகுதிகொள்ளுதல் - அதனை
வலிந்து கொள்ளுதல், கொடுக்க வகையிலாரிடம் கொள்ளுதல், அல்லவை
நீக்கா தொழுகுதல், காட்சிக்கரியனாதல், கடுஞ் சொல்லனாதல், இடிக்கும்
துணையாயினார் சொற்களைக் கேட்கப் பொறுக்கும் பண்பிலனாதல்,
அறநிலையப் பொருளை வவ்வுதல் முதலியன.
இன்று
கொளற்பால நாளைக் கொளப்பொறான்
நின்று குறையிரப்ப நேர்படான் - சென்றொருவன்
ஆவன கூறி னெயிறலைப்பா னாறலைக்கும்
வேடலன் வேந்து மலன் |
ஒற்றிற்
றெரியா சிறைப்புறத் தோர்துமெனப்
பொற்றோன் துணையாத் தெரிதந்தும் - குற்றம்
அறிவரிதென் றஞ்சுவதே செங்கோன்மை; சென்று
முறையிடினுங் கேளாமை யன்று |
முதலிய நீதிநெறி விளக்கக்
செய்யுட்களைக் காண்க.
|
|
|
|