Periya Puranam
தன்
பரிசனத்தால் - வருவன - அரசனிடம் அதிகாரம் பெற்றேம் -
அரசனது வலிய சார்பு பெற்றேம் . என்ற இறுமாப்பினால் வரும்;
இவராலாவன - நியதி மீறிய எவ்வகையான மிகைச் செயல்களுமாம்.
ஊனமிகு பகைத்திறத்தால்
- எவ்வழியிலும் அரச ஆணையின்
மிகுந்து மீளும் வலிமை பெற்றபோதே பகைவர் இடையூறு விளைப்பர்;
பகைத்திறத்தாலான பயம் - பசுக் கவர்தல் - கொள்ளையிடல் - மாதர்
கற்பழித்தல் முதலியன.
கள்வராலாவன - வழிப்பறி முதலியன.
உயிராலாவன - புலி - யானை
முதலியவற்றால் விளைவன. இங்கு மகனாலான பயம் - பரிசனப்பயம் என்ற
பகுப்பில் அடங்கும்.
பயந் தீர்த்துக் காத்தலே காவலன் கடமை என்பதை
“இத்தனை காலமு
நினது சிலைக்கீழ்த் தங்கி இனிதுண்டு தீங்கின்றி இருந்தோம்“ (கண் - புரா.)
காண்க. இந்நாள் நவீனர் அரசாட்சியிலே நமது நாட்டுக் குற்றத்தீர்வு நீதிச்
சட்டமும், குடிகளின் உயிருடம்புகளையும், உடைமைகளையும்,
காவல்புரிதலையே குறிக்கோளாகக் கொண்டு, உடம்பைப் பொறுத்த
குற்றங்கள் - உடைமையைப் பொறுத்த குற்றங்கள் என்று (Offences
against perosn & offences against property) இரு பெரும் பிரிவுகளாக
வகுத்ததும், அக்குற்றம் செய்தார்க்குத் தண்டம் விதித்ததும், குற்றங்கள்
நிகழாமல் குடிகாவல் விதித்ததும், இங்கு வைத்து ஒப்பு நோக்கிக்
காணத்தக்கன.
ஆனபயம் -
மேற்சொன்னபடி உண்டான பயம். பயம் ஐந்தும்
-
ஐந்து பயமும்.
அறம் காப்போன்
- அரசியல் ஆணை இடையறாது
செல்லவேண்டியதாகிய அறநெறிக்கு இடையூறு வராமல் காவல் புரிபவன்.
அல்லனோ ஆவான்
- எனும் வினா அவனேயாவன் என்ற
உடன்பாட்டுத் தேற்றப் பொருளில் வந்தது. பிறர் ஆகார் என்று பிரிநிலைக்
குறிப்பும் பெற்றாம். இப்பாட்டினால் நிலங்காவலின் தன்மையும் அருமையும்
கூறியவாறு. 36
122. (வி-ரை.)
பாதகம் - பெரும்பாவம். “நரரினிற்
பாலன் செய்த
பாதகம் நன்மை யாய்த்தே“ என்ற திருவாக்கும் காண்க.
பாதகங்கள் ஐந்து என்பர். ஆயினும் இங்கு இது அவற்றுள்ளே
மிக்கதாகிய கொலை - என்ற பொருளில் வந்தது.
இரும் தவம் செய
- பெரும் கழுவாய்களாகத் தரும நூல்களில்
விதித்தமுறைகளைச் செய்ய - அதாவது பெரும் பிராயச்சித்தங்களைச் செய்ய.
தவம்
- பாதகம் போக்கும் தீர்வாகத் தபிக்கச் செய்வதே இங்குத்
தவம் எனப்பட்டது. சாந்தராயணம் முதலிய விரதாதிகளும் பிறவுமாம்.
இம்முறை கிறித்தவர் முதலிய புறச்சமயிகளிடத்தும் வழங்குகின்றது.
இசைந்தேன்
- ஒப்புக்கொண்டேனாகி. அன்னியன் - என்மகன்
அல்லாதபிறன்.
கொன்றால்
- கொல்வேனானால். அன்னியன் ஓர் உயிரைக் கொலை
செய்தால் அதற்குத் தீர்வாக அவனைக் கொலை செய்வேனேயாகில்.
தொன்மனு நூல்தொடை
- என் குலமுதல்வனாகிய மனுவினால்
தொகுக்கப்பட்டுப் பழங்காலம் முதல் வழங்கிவரும் விதி.
மனுவால் - அவர் வழியிலே வந்த அந்தப்
பெயர் கொண்ட என்னால்.
தனது இழிவுகுறிக்க அடைமொழிகொடாது மனு என்றார். துடைப்புண்டது
-
அழிக்கப்பட்டது.
வார்த்தை
- பழிச்சொல். அதாவது “தொன்மனு தொடுத்தார். பின்மனு
துடைத்தார்“ என்ற பழிச்சொல். தொடை
- என்பதனை மனு என்பதற்கு
அடைமொழியாக்கி, மாலையணிந்த மனு - என்று
கூறுவாருமுளர்.
|
|
|
|