| 146 | திருத்தொண்டர்புராணம் மூலமும் உரையும் |
Periya Puranam
மன்னுலகில்
பெற - தான் மலுத்தொடையைத் துடைப்பினும் உலகம்
பின்னும் நிலைத்து நிற்பதாதலின் மன்னுலகு என்றார். அவ்வார்த்தையும்
உலகில் நிலைத்துநிற்கும். பெற என்றது நீதிதுடைப்பினும் வார்த்தைநிலைக்கும்
என்றபடி.
மந்திரிகள் வழக்கு
- இவ்வாறு கூறுதல் என்பது வருவிக்கப்பட்டது;
வழக்கு - வழக்கம்.
இப்பாட்டு முதலிரண்டு அடிகளிலும் - வார்த்தை பெறுதற்குக்
காரணங்கூறியவாறு; உமது மொழிகேட்டு அவ்வாறு செய்வேனானால் - என்க.
மகனும் அன்னியனும் செய்யும் பாதகங்கள் ஒரே தன்மை
உடையன
ஆயினும் அவற்றிற்குத் தீர்வு மட்டும், செய்தவனைப் பொறுத்து, வெவ்வேறு
தன்மையுடையனவானால் அது மனுநூலுக்கு மாறுபாடு என்பதாம். இதனால்
மனுநூலிலே, குற்றம் செய்தவன் யாவனேயாயினும் செய்த குற்றத்துக்கேற்ற
தண்டனை எல்லார்க்கும் ஒருபடித்தாகவே விதித்துள்ளது என்பது விளங்கும்.
எனவே, இந்நாளிலே கூறப்படும் இந்நூலின் இயல்பும், இதன்மேல் ஏற்றும்
பழியும் நமது மனுவேந்தன் குறிக்கோளாகக் கொண்டு பின்பற்றி ஒழுகிய
தொன்மனுநூலுக்குப் பொருந்தாமை அறிக. 37
| 123.
|
என்றரச
னிகழ்ந்துரைப்ப வெதிர்நின்ற
மதியமைச்சர் |
|
| |
“நின்றநெறி
யுலகின்க ணிதுபோன்முன்
னிகழ்ந்ததாற்;
பொன்றுவித்தன் மரபன்று; மறைமொழிந்த
வறம்புரிதல்
தொன்றுதொடு நெறியன்றோ தொன்னிலங்கா
வல!“
வென்றார்.
|
38 |
மறுத்துரைத்த அரசனுக்கு
அமைச்சர் சொல்லியது
(இ-ள்.)
என்று அரசன்...அமைச்சர் - இவ்வாறு அரசன்
அமைச்சர்களை நோக்கி அவர் கூற்றுக்களை இகழ்ந்து மறுத்துச் சொல்ல,
அதுகேட்டு எதிரே நின்ற மதிகூறும் மந்திரிகள்; “நின்றநெறி...காவல“ என்றார்
- “பழமையாய் உலகம் காவல் பூண்ட அரசே! யாங்கள் சொல்லிய வழியிலே
நின்ற நீதிநெறி இவ்வுலகியல் வழக்கிலே இதுபோல் முன் நடந்திருக்கிறது;
ஆதலின் இதற்காக அரச குமாரனைக் கொல்வித்தல் மரபன்று; வேதத்தில்
விதித்தபடி அறம் செய்வித்தல் - அதாவது கழுவாய் வகுத்தல் -
முற்காலந்தொட்டு வழங்கிவரும் நெறியல்லவா?“ என்று வணங்கிக் கூறினர்.
(வி-ரை.)
இகழ்ந்து உரைப்ப - மேற்பாட்டிற் கூறியபடி
இகழ்ச்சியுரை
செய்ய.
மதியமைச்சர்
- மதிகூறுங் கடைமைப்பாடுடைய அமைச்சர்கள்.
மதியுடையவர்கள் என்றலுமாம். தாங்கள் சொல்லியது இகழக் கூடியது அன்று
எனவும், முன்னிகழ்ச்சியும், விதியும், வழக்கமும், ஆகிய ஆதரவுகள்
கொண்டே கூறப்பெற்றது எனவும், அமைச்சர் குறித்தனர் என்க. அறியாது
சொன்னோம் அல்லோம் என்றபடி.
காவல -
121-வது பாட்டில் மந்திரிகளை நோக்கிக் காவலன் ஆவான்
இவன் - என்ற இலக்கணத்தை அரசன் குறித்தானாதலின் - மந்திரிகளும்
அப்பெயராலே அவனை விளித்தது அவ்விலக்கணத்தை அறிந்தே விதிநெறி
சொல்கின்றோம் என்பதற்கு.
அறம் புரிதல் - மொழிந்த அறத்தின்
வழி நிறுத்துதல்.
தொன்று தொடுநெறி -
பழங்காலம் முதல் வழங்கிக்கொண்டு வந்த
நெறி.
பின்வரும் பாட்டின் தொழுது என்பதனால், வணங்கி என
- இங்கு
வருவித்துரைக்கப்பட்டது. 38
|
|
|
|