பக்கம் எண் :


148 திருத்தொண்டர்புராணம் மூலமும் உரையும்

Periya Puranam
  எவ்வுலகி லெப்பெற்ற மிப்பெற்றித் தாமிடரால்
வெவ்வுயிர்த்துக் கதறிமணி யெறித்துவிழுந் துது?
                               விளம்பீர்“
40

126. “போற்றிசைத்துப் புரந்தரன்மா லயன்முதலோர்
                           புகழ்ந்திறைஞ்ச
 
  வீற்றிருந்த பெருமானார் மேவியுறை திருவாரூர்த்
தோற்றமுடை யுயிர்கொன்றா னாதலினாற்
                           றுணிபொருடா
னாற்றவுமற் றவற்கொல்லு மதுவேயா
                           மெனநினைமின்“
41

127. எனமொழிந்து “மற்றிதனுக் கினியிதுவே
                            செயலிவ்வான்
 
  மனமழியுந் துயரகற்ற மாட்டாதேன் வருந்துமிது
தனதுறுபேரிடர்யானுந் தாங்குவதே கரும“ மென
அனகனரும் பொருடுணிந்தா; னமைச்சருமஞ்
                            சினரகன்றார்.
42

அரசன் அமைச்சரை நோக்கிச் செயீர்த்துரைத்துத் தனது தீர்மானத்தைக்
கூறுதல்

     125. (இ-ள்.) அவ்வுரையில்...உரைக்கின்றீர் - அமைச்சர்களே! நீங்கள்
சொல்லிய அவ்வுரைகளின்படி வரும் விதிகள் ஒருபுறம் நிற்க; தரும வழியின்
சிறந்த உண்மைத் தன்மையை மனத்துட் கொள்ளாது நீங்கள் இவ்வாறு
மொழிகின்றீர்கள் (அவ்வுண்மைத் தன்மைதான் யாது? என்பீரேல்);
எவ்வுலகில் ... விளம்பீர் - எந்த உலகத்தில் எந்தப் பசு இத்தகைய
துன்பத்தாலே பெருமூச்செறிந்து கதறி வந்து அரசவாயிலின் ஆராய்ச்சி
மணியை அசைத்து வீழ்ந்து பதறிற்று? இதனை ஆய்ந்து சொல்லுங்கள்; 40

     126. (இ-ள்.) போற்றிசைத்து ... திருவாரூர் - முன்னே இந்திரன்,
பிரமன், விட்டுணு முதலிய தேவர்கள் வணங்கும்படி எழுந்தருளியிருந்த
வீதிவிடங்கப்பெருமான், விரும்பி எழுந்தருளியிருக்கும் தலமாகிய
திருவாரூரிலே; தோற்றமுடை...நினைமின் - பிறந்த உயிரைக் கொன்றவன்
இம்மைந்தன் ஆதலின் அவனைக் கொல்வதே துணியப்படுபொருள் என்று
நினைமின்;                                                  41

     127. (இ-ள்.) என மொழிந்து - என்று மேலே சொல்லியவாறு சொல்லிப்
பின்னர்; மற்றிதனுக்கு...கருமமென - “இனி இதற்குச் செய்யக் கடவதாகிய
செயலாவது இதுவேயாம்; இந்தப் பசு மனம் அழிகின்ற துன்பத்தை நீக்க
மாட்டாதவனாயினேன். ஆதலின், இது அடைந்த பெருந் துன்பத்தை நானும்
தாங்குவதே செய்பொருளாம்“ என்று சொல்லி; அனகன்...அகன்றார் - அரசன்
செய்தற்கரிய செயலைத் துணிந்து கொண்டான். அதுகண்டு அமைச்சரும்
அஞ்சினராகி ஒதுங்கினர். 42

     125. (வி-ரை.) அவ் உரையீல் வருநெறிகள் - முன்னே “மறை
அந்தணர்கள் விதித்த முறை“ என்றும், “மறை மொழிந்த அறம்“ என்றும்,
மந்திரிகள் குறித்துச் சொல்லிய உரைகளை. அவை நிற்க - அசை ஒருபுறம்
ஒதுங்கி நிற்க. இது இகழ்ச்சி குறித்தது. அவை கிடக்கட்டும் - என்று
ஒதுக்கியவாறு. என்னிடம் செல்லாது உங்களுடனே நிற்கட்டும் - என்பதும்
குறிப்பு.

     செவ்விய உண்மைத் திறம் - வெளித் தோற்றத்தாலல்லாமல்
உள்ளது உள்ளபடி நிற்கின்ற தன்மை. நிற்க என் றொதுக்கியதற்குக் காரணம்
இங்குக் கூறினார்; வெளிக்காட்சி ஒன்று, உண்மை மற்றொன்றாகலின். முன்னர்
“உண்மைப் பான்மை“ (107) “மெய்வண்ணம்“ (124) என்றனவும் இது; தக்கன்
யாகமும், சண்டீசர் சிவபூசையும் போலக் கண்டுகொள்க.