Periya Puranam
எப்பெற்றம்...மணி
எறிந்தது? - அவ் வுண்மைத் திறத்தைக் கண்டறிந்த
வகை.
விளம்பீர் - இல்லை என்று எனக்குத்
தெரியும். உண்டானால் நீவிர்
விளம்புங்கள் - என்றபடி. மனிதர்க்குரிய அறிவுவிளக்கம் இப்பசுவிற்
காணப்பெற்றபடியால் இதன் கன்றைக் கொன்றது சிசுகத்தி எனும்
மனிதக்கொலையே போல்தாம் என்று குறித்தார். அறிவுவிளக்கமே
உயர்திணை அஃறிணை என்ற பகுப்புக்குக் காரணம். இங்கு அறிவு
விளக்கத்தினாலே அஃறிணையாகிய பசுவும் உயர்திணையின் இடத்தைப்
பெற்றதாம். இது போலவே மாற்றிப் பார்க்கும் போது அறிவுவிளக்கம்
இல்லாத உயர்திணையும் அஃறிணையாம். உயிர்ப்பேதம், மரபுப்பேதம் பற்றிச்
சீர்திருத்தம் பேசுவார் இக்கருத்தை ஊன்றி உன்னுவார்களாக. இங்கு அறிவு
விளக்கமாவது தனக்கு நேர்ந்த துன்பத்தை வெவ்வுயிர்த்தல் - கதறுதல்
முதலிய புறச்செய்கைகளினால் அறியச் செய்வதும், மணி எறிதலால் அதற்குப்
பரிகாரம் தேடுதலும் ஆம்.
எறிந்து
- அடித்து. அநீதியைக் காட்ட ஓசைப்பட வேண்டிய மணி,
நிகழ்ந்தும் ஓசை செய்யாமல் இருந்தமையால் தண்டித்து எறியத்தக்கது -
என்ற குறிப்பும் தோன்ற, அசைத்து என்னாது எறிந்து என்றார். முன் 112-ம்
பாட்டிலும் “கோட்டினாற் புடைத்தது“ என்றமையும் காண்க.
செய்யத்தக்கதைச் செய்யாது தூங்குபவரைத் தண்டத்தாற் றட்டி
எழுப்புதல்போல, மணியைப் புடைத்தது - என்ற
குறிப்பும் “தூங்கிய
மணியை“ என்றதனாற் பெற்றாம். தண்டினாலே நாதம் கிளம்பும் என்பது
சாத்திரம்.
“ஆசான்
முன்னே துயில்மா ணவகரைத்
தேசாய தண்டாலே எழுப்பும் செயல்போல்
நேசாய வீசனு நீடா ணவத்தரை
ஏசாத மாயாடன் னாலே யெழுப்புமே.
-
திருமூலர் திருமந். 8-ம் தந் - 3 - அவத்தைபே - கீழாலவத்தை
- 22 |
126.
(வி-ரை.) புரந்தரன்
மால் அயன் முதலோர் போற்றிசைத்துப்
புகழ்ந்திறைஞ்ச எனக் கூட்டுக. போற்றிசைத்தல்
- துதித்தல். புரந்தரன் -
இந்திரன்.
வீற்றிருந்த பெருமான் - தேவர்கள் துதிக்கத்
தேவலோகத்தில்
இருந்த செய்தியைக் குறிக்கும். முன்னே அங்கிருந்தமையால் இருந்த என்று
இறந்த காலத்தாற் கூறினார். இப்போது திருவாரூரில் எழுந்தருளியிருக்கின்றார்
என்று குறிக்கப், பின்னர், உறை திருவாரூர் என நிகழ்காலத்தாற் குறிப்பதும்
காண்க.
உறை திருவாரூர்
- நிலைத்து எழுந்தருளியிருக்கும் இடமாகிய
திருவாரூர்.
உறை என்ற வினையெச்சம் மூன்று காலத்துக்கும் பொருந்தும்.
எனவே,
இதற்குமுன்னும் இப்போதும்போல, முசுகுந்தச் சக்கரவர்த்தியின் பூசை யுகந்து
இனியும் நிலையாக, நிலைத்து, இங்கே எழுந்தருளியிருப்பர் என்பதும்
பெறுகின்றாம்.
திருவாரூர் தோற்றமுடை உயீர் - முத்திபெறும்
நிச்சயமுள்ள
பக்குவமடைந்த ஆன்மாக்கள் தான் திருவாரூரிலே பிறக்கும். ஆரூர்ப் பிறக்க
முத்தி, தில்லைகாணமுத்தி, காசியில் இறக்க முத்தி என்பது வரலாறு.
திருவாரூரிற் பிறத்தலாலே அவ்வான்மா முத்தியடைதல் நிச்சயம். ஆதலின்
அவ்வாறு பிறந்த ஓர் உயிரைக் கொல்லுதல் முத்தனாகும் ஒருவகைக்
கொலை செய்ததாகும். எல்லாக் கொலையும் பெரும்பாவமே என்றாலும்,
ஆரூர்ப் பிறந்த உயிர்க்கொலை, மிகப்பெரும் பாவம் என்பது கருத்து.
“திருவாரூர்ப் பிறந்தார்கள் எல்லார்க்கும் அடியேன்“ என்னும் திருவாக்குக்
காண்க. இக்கருத்தையே பின்னர்த் “தண்டியடிகள் திருவாரூர்ப் பிறக்கும்
பெருமைத் தவமுடையார்“ என்பதும் காண்க. ஆரூர்ப் பிறந்த உயிர்கள்
முத்த ஆன்மாக்களாய் நம்மை ஆளாக் கொண்டு உய்யு நெறியிற் செலுத்தும்
|
|
|
|