| 150 | திருத்தொண்டர்புராணம் மூலமும் உரையும் |
Periya Puranam
ஆற்றலுடைய ஆசாரியத்தன்மை
பூண்டிருத்தலால் அவற்றைக் கொல்லுதல்
ஆசாரியக் கொலையுமாம். இவ்வாறாகவும் திருவாரூரிலே யிருந்தும்
உண்ணுதற்பொருட்டுப் பசுக்களையும் ஏனைப் பிராணிகளையும் கொல்வாரும்,
கொன்றதைத்தின்பாரும் இக்கருத்துக்களை நோக்குவார்களாக.
ஆற்றவும் துணி பொருள்
- இதுவே செய்யத்தக்கது. இதனின்
வேறில்லை என்று உடன்பாடு, எதிர்மறை எனும் இருதலையும் துணியப்படும்
பொருள்.
மற்று அவற்கொல்லுமதுவே
- மற்ற அவன் - மற்றவன். மற்ற
அவனைக் கொல்வதாகிய அதுவே. மற்ற அவனை -
என்றது ஆரூரின்
உயிர் கொன்றானை மற்றவன் என்று ஒதுக்கும் தகுதி நோக்கி, மற்று
அவனை என்று உரைத்தலும் ஆம்.
நினைமின் - பன்மை ஏவல் வினைமுற்று.
மந்திரிகள் அனைவரையும்
நோக்கி; முன்பாட்டிலே இப்பசு அறிவும் பக்குவமும் முதிர்ந்தது என்று
சொல்லி, இப்பாட்டிலே, அஃது எவ்வாறாயினும் திருவாரூர்ப் பிறக்கும்
தவமுடையது என்று முடித்துக்காட்டி, ஆதலினால், என, அதுகாரணங்
கொண்டு துணிபொருளாய்த் தான் தீர்மானித்ததை, முடிந்தபொருளாக அரசன்
உரைக்கின்றானாதலின், ஏவல் வினையாற் கூறினார்.
பழுதுரைத்தீர் - விளம்பீர் - நினைமின்
என மந்திரிகளிடம் முடிபு
கூறிவிட்டு, அதன்படி அரசன் தான் செய்யத் துணிந்த பொருளை
இப்பாட்டாற் குறிக்கின்றார். மேலே சொல்லின்துணிபும், இதிற் செயலின்
துணிபும் பெற்றாம்.
127. (வி-ரை.)
என மொழிந்து - மேலே மூன்று பாட்டாலும் கூறியபடி.
இதனுக்கு
- நிகழ்ந்துவிட்ட இந்த அநீதிக்குப் பரிகாரமாக. இதுவே
செயல் - முன்பாட்டிலே எதிர்காலத்திற் றுணியத்தக்க பொருளாய்
அமைச்சரிடம் சேய்மைச் சுட்டிலே குறித்த அதுவே என்னும்பொருள், இங்கு
நிகழ்காலத்துத் துணிகின்ற பொருளாய் அரசன் மனத்து நிகழ்ந்துவிட்டமையால்
அண்மைச் சுட்டிலே இதுவே என்றாயிற்று.
செயல்
- செய்தக்க பொருள். இதனை அல்விகுதி பெற்ற வியங்கோள்
வினைமுற்றாகக் கொண்டு தன்னையே நோக்கி இதுவே செய்க எனப்
பொருளுரைத்தலும் ஒன்று.
தாங்குவதே கருமம்
- இதனால் அதன் இயல்பும் காரணமும்
கூறியவாறு. தாங்குவதே கருமம் - அதலின், இதனுக்கு
இதுவே செயல்
எனத் துணிதல்.
மனமகியுந்துயர்
- மனம் அழிதற்குக் காரணமாகிய துயர்.
இது தனது - இதனுடைய.
உறுபேரிடர் - பொருந்தாதாயினும் வந்து
உற்றதாகிய பெரிய இடர். உறுஇடர் என்றும், பேர் இடர் என்றுந் தனித்தனி
கூட்டுக.
தாங்குவதே - இடர் பெரிதாயினும் தாங்குவதே
என்றபடி.
யானும் - பசு தாங்குவதோடு நானும்; இறந்தது
தழுவிய எச்ச உம்மை.
துயர் அகற்ற மாட்டாத நான், அத்துயரை யானுந் தாங்கிப்
பங்கிட்டுக்கொண்டு அதன் துன்பத்தைக் குறைப்பேன் என்று துணிந்தார்.
தானுந் தாங்குதலினால் துன்பம் குறைவது எவ்வாறு எனின்? தாம்
அனுபவிக்கும் மகிழ்ச்சி பிறர் தம்மோடு அனுபவித்துக் கூறு கொள்ளும்போது
இன்பம் மிகுதலும், துயரானது அவ்வாறன்றிப் பிறர் தம்மோடு அனுபவித்துக்
கூறுகொள்ளும்போது துன்பங்குறைதலும் இயல்பாம். இஃது அவ்வின்ப
துன்பங்களுக்குள்ள இயல்பு. ஆதலின் இப்பசுவின் உறுபேரிடரை அகற்ற
இயலாதவழி அத்துயரை நானும் தாங்கி நின்று அதனோடு அனுபவித்துக்
கூறுகொண்டு குறைப்பேன் - என்பது அரசன் கருமமெனக் கொண்ட குறிப்பு.
அனகன்
- பாவமில்லாதவன். ந + அகன் = அநகன்; “அனகனே
குமர விநாயக சனக“ திருவிசைப்பா.
|
|
|
|