Periya Puranam
செய்யச் சக்தியற்றன.
அளவில்லாத ஆற்றலுடைய முன்னவனே செய்ய
வல்லவன் என்றபடி.
முடியாத பொருள் உளதோ;
- உயிர் பிரிந்தாரை மீளவும்
உயிர்பெறச் செய்தலும் துன்பம் தாங்க எண்ணிச் செயல் செய்தாரை
அச்செய்கையாலே அப்போதே அவர் எண்ணாத இன்பந் தாங்கச் செய்தலும்
முடியுமோ? என்று ஐயப்படுவாரை நோக்கி முன்னவனே முன்னின்றால்
முடியாத பொருள் உளதோ? என்று விடை கூறியவாறு. இதுமட்டுமன்று;
வேறு எதுவும் முடியும் என்பது கருத்து. ஆக்கலும் அழித்தலும் அருளலும்
ஒருங்கே செய்யவல்லான். எல்லா உயிர்களையும் தன்னிடம் ஒடுக்கி மீளவும்
அவ்வவற்றின் பக்குவம் நோக்கி உளவாக வைக்கும் இறைவன் எவனோ
அவனே முன்னவன்; ஆதலின் அவன் செய்தனன் - என்பது.
முன்னவனே ஏகாரம் அளவுபட்ட ஆற்றலுடைய பிறரன்றி அளவிலா
ஆற்றலுடைய அவனே - எனத் தேற்றமும் பிரிநிலையும் ஆம்.
முன்னின்றால்
- முன்னிற்றல் வெளிப்படச் செயல் செய்தல். எல்லாப்
பொருளிலும் செயலிலும் அவனே நிற்கின்றான். நின்று இயற்றுவிக்கின்றான்
என்பது நின்ற திருத்தாண்டகம் முதலிய வேதப் பிரமாணங்களால்
அறிகின்றோம். ஆனால் அளவுபட்ட பிறர் செய்தற்கரிதாகிய இவ்வாறான
செயல்களில் அவன் பொதுப்பட மறைந்து நிற்றலன்றி வெளிப்பட முன்னே
நிற்றல்வேண்டும் ஆதலின் முன்னவனே நின்றால் - என்னாது முன் நின்றால்
என்றார்.
உளதோ?
- ஓகாரம் எதிர்மறை. இல்லை என்றபடி. இக்கருத்தையே
பின்னர் எறிபத்த நாயனார் புராணத்துள் யானையும் பாகரும் எழுந்தது
முதலியனவாய், வந்த வந்த இடங்களிலெல்லாம் அமைத்துக் கொள்க.
திருஞானசம்பந்த நாயனாரும், அப்பர் பெருமானும், சுந்தரமூர்த்திகளும்
இறந்தான உயிர்ப்பித்த வரலாறுகளும், ... தான் செய்யும் தன்மைகளை
ஆக்கியிடும் அன்பர்க்கரன் என்றும், எனதுரை தனதுரையாக என்றும்
வரும் அருட்பிரமாணங்களால் இவ்வாறே முன்னவனே முன்னின்று
செய்தவைகளாம். ஓர் உயிருக்கு ஓர் உடம்பு முதலிற் கொடுத்துப், பின்பு
தன்னகத்து ஒடுக்கி, மீளவும் வேறு ஓர் உடம்பு கொடுக்கின்ற இறைவன்
இவ்வுயிரை மீண்டும் அவ்வுடம்புக்குள்ளேயே புகுத்தலும், அவ்வுடம்பு
உருவமழிந்தபோது அதனை முன்போலச் செய்து மீட்டும் அவ்வுயிரை
அதனுள் வைத்தலும் வல்லவனே யாவன் என்க.
இன்றிருந்து நாளை யிறக்கும் தொழிலுடைய,
புன்றலைய
மார்க்களிலே ஒருவனாகிய ஓர் அரசாங்க மனிதனே, முடியாதது
என்றசொல் என் அகராதியில் இல்லை என்று கூறினான் எனச் சரிதம்
கேட்டு மயங்கும் மாக்கள் இதன் உண்மை கண்டு தெளிவார்களாக.
இப்பாட்டிலே அறிந்திலன் வேந்தனும் என்றதை எச்சவும்மையாகக்
கொண்டு மந்திரியும் மகனும் அறிந்திலர்; அரசனும் அறிந்திலன் - என்று
உரைத்தலுமாம். அரசன் கன்று - உயர்திணையை
அஃறிணையாகச்
சொல்லப்பட்டது சிறப்புப்பற்றி; இவ்வாறு செய்தருளிற்றென்னாம் (2834)
என்பது முதலியவை காண்க.
| 133.
|
அடிபணிந்த
திருமகனை யாகமுற வெடுத்தணைத்து |
|
| |
நெடிதுமகிழ்ந்
தருந்துயர நீங்கினா னிலவேந்தன்;
மடிசுரந்து பொழிதீம்பால் வருங்கன்று
மகிழ்ந்துண்டு
படிநனைய வரும்பசுவும் பருவரனீங் கியதன்றே. |
48 |
அருள் நிகழ்ச்சியின்
மேல்விளைவுகளைக் கூறுகின்றது
|
|
|
|