Periya Puranam
பெற்ற
சிறப்புடையன. மூலட்டானருக்கும், வீதிவிடங்கருக்கும்
தனிப்பதிகங்களுண்டு. இது திருவாரூருக்கே உரிய தனி மாண்பாம்.
கற்பனை :-
(1) இப்பகுதியிற் கூறிய மனுச்சோழர் மகனைத்
தேர்க்காலில் ஊர்ந்து நீதிமுறை செய்த சரிதம் இங்குக் கல்வெட்டிற்
காணப்படுவது மன்றி அதைக் காட்டும் கல் தேரும் - பசுவும் - கன்றும் -
மணியும், பிறவுங் கோயிலுக்கு வடகிழக்கில் தனியாய் அமைந்துள்ளன. அவை
இப்போது பார்ப்பாரும் கேட்பாருமற்றுக்கிலமாகிப்பாழடைந்த
நிலையிலிருப்பதே நீதிநினைவானது நம்முள்ளே ஒடுங்கி மறைந்துபோய்
விட்டதென்று காட்டுவதற்குச் சாட்சியாம். வேறு ஒரு நாட்டில் இவ்வித
நிகழ்ச்சி நடைபெற்றிருந்தால் அந்நாட்டவர்கள் அந்த அடையாளங்களைப்
பொன்வேலியிட்டுப் பேற்றுவர்.
பசுவின் கன்றுக்குத் தம்மகனை ஈடாக்கித் தம் உயிர்போலவே
உயர்வு
தாழ்வின்றி மன்னுயிர் அனைத்தையும் மனுச்சோழர் காத்தமை எந்த நாட்டு
எந்த மன்னரும் எந்த நாளும் படியெடுத் தொழுகற்பாலதாம்.
என்மகன்செய்
பாதகத்துக் கிருந்தவங்கள் செயவிசைந்தேன்
அன்னியனோ ருயிர்கொன்றால் அவனைக்கொல் வேனானால் |
என்பது மிக உயர்ந்த குறிக்கோளை
உலகுக்குக் காட்டி மலைமேல்
விளக்குப்போல் நிற்கின்றது. இதனை எல்லா அரசாங்கத்தாரும்
அதிகாரிகளும் மக்களும் கைக்கொண்டொழுகினால் நீதித்தவறு என்பது
எங்கும் எப்போதும் நிகழவே நிகழாது. மனிதர்க்குள்ளும் வருண - நிற -
பேதங்களால் நியாய பேதங் கற்பிக்கும் இந்நாள் மக்கள் இதனை ஊன்றி
நோக்குவார்களாக.
(2) அன்றியும் தம் அவசர நிமித்தமோ உல்லாச நிமித்தமோ
வேகமான
இயந்திர வாகனங்களைத் துரத்தி மக்கள் முதலிய ஆயிரக் கணக்கான
உயிர்களைத் தினமும் ஒரு சிறிது எண்ணமுமின்றிக் கொன்று
ஒருகவலையுமின்றி வாழ்ந்துவரும் இந்நாள் மாக்களும் இதனை அழுந்திச்
சிந்திப்பார்களாக. உண்ணுதற் பொருட்டு எண்ணிலாத பசுக்களையும்
பசுக்கன்றுகளையும் ஏனைப் பிராணிகளையும் கொல்பவரும் கொல்விப்பவரும்
இதனைச் சிந்திப்பார்களாயின் உலகிலே கொடுமையும் பாதகமும் நீங்கும்.
(3) தம் பரிசனங்களால் விளையும் துன்பங்களைப் போக்குதல்
அரசர்களுக்கும் ஏனையோர்களுக்கும் மிகத் தகுதியான கடமையாம். எனவே,
தமது பரிசனங்கள் செய்ததே சரியென்று தாங்குதல் அரசர்க்கும் பிறர்க்கும
நீதியன்று என்பதும் சிந்தித்துக் கடைப்பிடிக்கற்பாலது.
(4) இங்கு மனு அரசன் செலுத்திய நீதியை இந்நாளில்
தற்செயலாய்
நேரிட்ட மரணம் என்றும், சாமானிய ஒரு மிருக உயிர்க்காக இவ்வாறு
செய்தது பித்துப் பிடித்த செயல் என்றும், பலவாறு கூறி, எள்ளி நகையாடி
ஒதுக்குவர் அறியார், அந்தோ! உயர்ந்த ஞானமாகிய இந்தக் குறிக்கோளை
உணர மாட்டாது தமது அறியாமைக்கு மகிழ்ந்து கிடக்கும் இவர்களது
அறியாமையின் வலிமை இரங்கற்பாலதேயாம்.
(5) செங்கோன்மைச் சிறப்பு என்ற தலைப்பின்கீழ்
ஆறுமுக
நாவலரவர்கள் பதிப்பிற் சூசனத்திற் கண்ட பொருள்களையும் தொகுத்துக்
காட்டியுள்ள அரும்பெரும் பிரமாணங்களையும்கண்டு தெளிதல்
இவ்வுலகநிலையிலேயும் பெரும்பயன் தரும்.
கவனிக்க :-
பாராயணஞ் செய்வோர் 18 - 48 பாட்டுக்களில் நிறுத்தி
மேலே தொடங்கலாம்.
திருவாரூர்த்
திருநகரச் சிறப்பு முற்றும்
|
|
|
|