பக்கம் எண் :


திருமலைச்சிறப்பு17

Periya Puranam

தன்மையை இன்னதென்று அறிவதற்கு அரிதாயிருக்கின்ற சிவபெருமான்;
என்றும்....மா மலை - எக்காலத்தும் நீங்காமற் பொருந்தி வாழ்தற்கிடமாகிய
கயிலை என்கின்ற பெரிய திருமலையாகும்.

     திருமலையின் சிறப்புக் கூறுவதுடன் சுந்தரமூர்த்திகள்
கயிலாயத்திலிருந்து நிலவுலகில் அவதரிக்க நேர்ந்த சரிதமும் இதிற்
கூறப்பெற்றது. சுந்தரமூர்த்திகள் நிலவுலகிற்குப் புறப்பட்டதும் மீண்டு
சேர்ந்ததும் இம்மலையேயாதலாலும், இப்புராணத்திற்கு மூலநூலாகிய
திருத்தொண்டத் தொகை கிடைப்பதற்கு மூலகாரணமாகிய நிகழ்ச்சி நிகழ்ந்த
இடம் இஃதாதலாலும் இம்மலைச் சிறப்பைக் கொண்டு புராணம்
தொடங்குகின்றார் ஆசிரியர்.

     (பாயிரத்துடன் தொடர்பாய் இச்சருக்கமுழுதும் பாட்டிலக்கம்தொடர்ந்து
சில ஏட்டுப்பிரதிகளிற் காணப்பெறுகின்றது.)

     (வி-ரை.) கயிலைத் திருமாமலை..........பனிமால்வரைப் பாலது என்று
முடிக்க.

     பொன்னின் வெண்திருநீறு புனைந்தென - இது உவமானம்.
பொன்னின் மேல் வெள்ளிய திருநீறு அணிந்தாற்போல மால் வரையின்
மேலே பனி உறைந்து உள்ளது என்பது.

     பனிமால்வரை - பெரிய இமயமலை. இது பொன்மலை என நூல்களிற்
பேசப்பெறும். இமாசலம் - இமாலயம். (The Himalayas) என்பது. பன்னும்
- பலவாற்றாலும் புகழ்ந்து பேசப்படுவது. நீர் பனிக்கட்டியாக உறைந்து
கிடக்கும் மலையாதலின் பனிமால்வரை என்றார். இது அன்பின் நீர்மை
உறைப்புப்பெற்றுத் தங்கும் இடம் என்பது குறிப்பு; இறைவனுடைய
திருக்கயிலை இதில் இருத்தலின் - என்க. உலகிலே மிகப்பெரிய
மலைத்தொடர்ச்சி. இதன் சிகரமே உலகில் மிக உயர்ச்சி யுடையது. அந்தச்
சிகரம் கயிலை மலையாம். மிக உயர்ந்த மலையின் மிக உயர்ந்த சிகரம்
என்க. இஃது எப்பொழுதும் பனிக்கட்டியால் மூடப்பெற்றிருக்கும். ஆதலின்
வெண்மையாய் வெண்ணீற்றுக் கோலமாய் விளங்கும். குறித்த உயரத்துக்கு
மேற்பட்ட இடங்கள்தான் பனியால்மூடப்படும். அவ்வுயரத்துக்குக் கீழே உள்ள
மலையின் பாகங்கள் பனிமூடாமல் தூரப் பார்வைக்குப் பொன்னிறமாகவே
காட்டும். ஆதலின் ‘பொன்னின் மேல் வெண்ணீறு புனைந்தாற்போல
என்றார். வரைப்பால் - வரையின் ஒரு பகுதி. இது கயிலை மலையின் தூர
தரிசனம் கூறியபடி.

     தன்னை யார்க்கும் அறிவரியான் - “இன்ன தன்மையன் என்று
அறியொண்ணா எம்மானை” என்பது சுந்தரமூர்த்திகளது திருவாரூர்த்
தேவாரம். “யாவராயினும் அன்பரன்றி அறியொணா மலர்ச் சோதியான்”
(திருவாசகம்). “கனகக் குன்றத் தெழிற் பெருஞ் சோதியை”“பொன்னெடுங்
குன்றமொன் றுண்டு கண்டீர்” என்பனவாதி திருவிருத்தங்களால் அப்பர்
சுவாமிகள் துதித்தருளியபடி பொன்மலையும் கயிலைவெண்சிகரமும் இறைவன்
வடிவமாகவே விளங்குவது. ஆதலின் அத்தோற்றத்திற்குள்ளே “அரியான
மன்னி வாழ்கின்றான் என்று குறிப்பிட்டபடியுமாம். “பொன்னொத்த
மேனிமேல் வெண்ணீ றணிந்து” என்னும் தேவாரமும் காண்க. மன்னிவாழ்
கயிலைத் திருமாமலை - இத்திருமலையையே சிவசொரூபமாகக் கண்டு
அதனுள்ளே சிவத்தையும் கண்டு ஆசிரியர் தரிசித்து நம்மையும் தரிசிக்கச்
செய்கின்றபடி காண்க. இதில் விளங்கும் பெருமானைப் போலவே இந்த
மலையும் உயர ஆகாய விமானங்களிற் பறந்து காண்பவர்க்கும்
அறிதற்கரியதாய் விளங்குவது இந்நாட் கண்கண்ட காட்சியாம். கயிலை -
இது பூகைலாயம். (நூல்களிற் பேசப்பெறும் மகா கயிலாய மன்று)
மதங்காகமம் காண்க. இங்கே மன்மத தகனம் - சனகாதி முனிவர்களுக்கு
உபதேசம் - முதலியன நிகழ்ந்தன. இதிற் பஞ்சரிஷிகளது ஆசிரமங்களும்
உள்ளன. பின்னர் “முனிவர் அஞ்சலி மாலையும் முன்னெலாம்” என்று
கூறுவது காண்க. அப்பர் சுவாமிகள் திருக்கயிலை யாத்திரை செய்த இடம்
இதுவே. இறைவன் மும்மூர்த்திகட்கு முதல்வராய் உபதேசம் செய்தனர்
என்பது வரலாறு. சமீபகாலத்தில்