| 18 | திருத்தொண்டர்புராணம் மூலமும் உரையும் |
Periya Puranam
இம்மலையின் ஒரு பாகத்தில்
சிந்துநதிச் சார்பிலே ஒரு பெரிய
மண்மேட்டைத் தோண்டிப் புதைந்து கிடந்த ஒரு பெருநகரங்
கண்டுள்ளார்கள். அதிற் சைவப்பெருமைகளும், சரிதங்களும், பழமையும்
காணப் பலபொருள்கள் கிடைத்தன. அதிலே ஒன்று - மூன்று சிரமும் நான்கு
கைகளும் கொண்டு யோகாசனத்தில் உபதேச மூர்த்தியாய் ஒரு மரத்தடியில்
வீற்றிருக்கும் உருவமாய் இதனைச் சுற்றிப் புலி யானை இருடிகள் முதலியன
காணப்பெற்றது. இது மேற்குறித்த மும்மூர்த்திக்கு உபதேசித்த
ஆசாரியமூர்த்திக் கோலம் போலும். காதுகளைப்
பொத்திக்கொண்டு
கேட்பதுபோல உள்ள உருவங்களும் பக்கத்திருப்பனவாம். சிவலிங்கம்,
நந்திதேவர், அம்பிகை
முதலிய உருவங்களும் உள்ளன. இவற்றின் விரிவை
சர். ஜான் - மார்ஷல் என்பவர் எழுதிய
“சிந்து நதிக் கணவாய்
நாகரிகம்” (Indus Valley Civilisation) என்னும் நூலுட் காண்க.
மேலே
கண்ட மும்மூர்த்தி உபதேசக் கோலத்தைக் கேட்கும்போது.
“காது
பொத்தரைக் கின்னர ருழுவை கடிக்கும் பன்னகம்
பிடிப்பருஞ் சீயம்
கோதின் மாதவர் குழுவுடன் கேட்பக் கோல வானிழற் கீழறம்
பகர” |
என்னும் சுந்தரமூர்த்திகளது திருநின்றியூர்த் தேவாரம்
- (6) நினைவுக்கு
வரும்.
என்றும் மன்னி
- எக்காலத்திலும் நீங்காது நிலைபெற்று
ஊழிக்காலத்திலும் தான் அழியாமல் நிற்பதாலும், எல்லாவற்றையும் அழிக்கும்
நாயனாகிய சிவபெருமானுக்கு இருப்பிடமாய் நிற்பதாலும் என்றும் -
எக்காலத்தும் - என்றார். இதனையே திருநொடித்தான்மலை என்று
சுந்தரமூர்த்திகள் தேவாரத்திற் போற்றுதல் காண்க. நொடித்தல்
- அழித்தல்.
காரைக்காலம்மையார் தலையால் நடந்து சென்ற கயிலை இது. 1
| 12.
|
அண்ணல்
வீற்றிருக் கப்பெற்ற தாதலின்
|
|
| |
நண்ணு
மூன்றுல குந்நான் மறைகளும்
எண்ணில் மாதவஞ் செய்யவந் தெய்திய
புண்ணி யந்திரண் டுள்ளது போல்வது. |
2 |
(இ-ள்.)
அண்ணல்..........ஆதலின் (யாவருக்கும் மேலாம் அளவில்லாத
சீருடையானாகிய) பெருமையுடைய சிவபெருமான் விரும்பி எழுந்தருளி
என்றும் மன்னியிருக்கும் பேறுபெற்ற மலையாதலால்;
நண்ணும்.........புண்ணியம் - சேர்கின்ற
மூன்று உலகங்களும் நான்கு
வேதங்களும் அளவில்லாத பெருந்தவம் செய்ததனால் நேரே கண்ணாற்
காணும்படி வந்து சேர்ந்த புண்ணியங்களானவை யாவையும்; திரண்டு உள்ளது
போல்வது - ஒருங்கு சேர்ந்து உருவெடுத்து நிலைத்ததே போன்றுள்ளதாம்
இத்திருமலை.
(வி-ரை.)
அண்ணல் - பெருமையுடையான். எல்லார்க்கும்
மேலானவனாதலால் இது சிவபெருமானையே குறிக்கும். அவன்
புண்ணியமூர்த்தியாதலால் அவன் எழுந்தருளியிருப்பதான இத்திருமலையும்
புண்ணிய சொரூபமுடையது. “பூதநாயகன் புண்ணியமூர்த்தியே”
(அப்பர்)
முதலிய திருவாக்குக்கள் காண்க.
நண்ணும் மூன்றுலகு -
உயிர்கள் உலகங்களிற் புகுந்தே தங்களது
வினைகளை ஒழிக்க வேண்டியிருத்தலால் நண்ணும் என்றார். மேல் - நடு -
கீழ் - என்ற மூன்று நிலையிலும் உள்ள உலகங்களின் பெரியோர்கள்
புண்ணிய அனுபவம் மேலுலகத்திலும், பாவ அனுபவம் கீழுலகத்திலும்
செய்யப்பட்டுக் கழிந்தபின் உயிர்கள் நடு உலகமாகிய இந்நில உலகிற் பிறந்து
சிவபுண்ணியம் செய்தே அது காரணமாக வீடுபெறுவர் என்பது சகல
சாத்திரங்களின் முடிந்த முடிபு. ஆதலின், மேல் கீழ் உலகங்களின் தவம்
நடுவுலகத்தில் நின்றது; நடுவுலகததின் பயன் சிவபுண்ணியமாயிற்று;
சிவபுண்ணியங்களின் பயனாய்த் திருமலை நின்றது என்பது கருத்து.
நான்மறை தவம் செய்வதாவது மறைக்காடு முதலிய தலங்களில் அருச்சித்து
இறைவனைத் தமக்குள்ளே விளங்கும்படி பெறுதல்.
|
|
|
|