| 176 | திருத்தொண்டர்புராணம் மூலமும் உரையும் |
Periya Puranam
காதல்
உறைப்பின் நின்றார் - காதல் என்பது நாயகன்
நாயகிகளுக்கிடையே உளதாகும் அன்புக்கு உரிய சிறப்புப் பெயர். இதனால்
இங்குக் குறித்தது இறைவனுக்குத் தாங்கள் மீளா ஆட்பட்ட நாயகிளாகவும்
அவர் தமது உயிரின் நித்திய நாயகனாகவும் கொண்டு ஒழுகுபவர் இவ்
வடியவர்கள் என்பதாம். உலகத்தில் ஏனைய நாயகர்நாயகிகள் சிலகாலம்
உடற்கூட்டம் மட்டும் பெற்றிருந்து அந்த உடம்போடு ஒழிவர். (இக்காலத்து
அதுவரையிற்கூட இல்லாத உலகக் காதல் காண்பதாயிற்று!) ஆனால்
இறைவன் நித்தனாய் ஆன்மாவும் நித்தனாய் இருத்தலின் அவன்
என்றைக்கும் நீங்காத நித்திய நாயகனாம். இச்சிறப்புத் தோன்ற - ஒதுகாதல்
- என்றார். அதில் உறைப்புப்பெற நிற்றலாவது மங்கை காணக்கொடார்
மணமாலையை - அப்பர் சுவாமிகள் திருவிடைமருதூர்த் தேவாரம் -
முதலிய திருவாக்குக்களிற் கண்டபடி இடைவிடாது பயின்று
இறைவனிடத்திலே முழுதும் ஈடுபட்டு நிற்றல். அந்தக் காதலிலே பதிந்து
அதனால் விழுங்கப்பட்ட நெறியிலே நிற்றல். ஆன்மாக்கள் பிராகிருதர்கள்
என்றும், வைநகிகர்கள் என்றும், சாமுசித்தர்கள் என்றும் மூவகையினர்.
ஆற்றலு மறிவுங் காதலுமில்லாதவர்கள் பிராகிருதர்கள். வைநதிகர்கள்
-
உலக ஒழுக்கத்திலே விதிவிலக்குகளை அறிந்து அந்நெறியின் ஒழுகிநின்று
இடையூறுவந்த காலத்திலேயும் நன்னெறியிற் பதிந்து நிற்பவர். இவர்கள்
முறைமையின் மந்ததர முதலிய சத்திநிபாதமுடையவர்களாய் நூல்வழியான்
முத்தியடைய விம்புவோர். இவர்கள்புகழ்த்துணை நாயனார் போல்வார்களாம்.
தங்கோனைத் தவத்தாலே தத்துவத்தின் வழிபடுவார் பசி வருத்தியபோதும்
விடாது அந்நெறி ஒழுகிப் பேறு பெற்றது அவர்சரிதம் கூறும்.
சாமுசித்தராவார், எஞ்சிய வினையின்பொருட்டே திருமேனி தாங்கி
மேல்வினை ஒழித்துத் தன் செயயில்லாது ஒழுகி, எல்லாம் சிவன் செயலேயாக
நிகழ்பவர். இவர்கள் சண்டீசர் கண்ணப்பர் - போன்று விதி விலக்குகளைக்
கடந்து செய்யும் செயல்களை உடையவர்கள். இயற்பகையார்
- கோட்புலியார்
சிறுத்தொண்டர் செருத்துணையார் முதலிய நாயன்மார்கள் சரிதங்களும்
காண்க. நெறி நிற்றலாவது - தம் வழியே பத்தியைத்
திருப்பிக்கொள்ளாது
பத்தி வழியிலே தம்மை நிறுத்திக் கொண்டு ஒழுகுதலாம்.
மலர்த்தாள் மறப்பிலார்...உறைப்பின்
நெறிநின்றார் - மறப்பிலராகி
நின்றார்கள் எனக் கூட்டி உரைத்தலுமாம். பூதங்களின் திரிபினால் உலகம்
அழிய நேரினும் தாம் கலங்காது தமது முன்னைப் பணிவிடை வழியே
நிற்றல்., இதனையே,
வானந்
துளங்கிலென்! மண்கம்ப மாகிலென்! மால்வரையும்
தானந் துளங்கித் தலைதடு மாறிலென்! தண்கடலும்
மீனம் படிலென்! விரிசுடர் வீழிலென்! வேலைநஞ்சுண்
டூனமொன் றில்லா ஒருவனுக் காட்பட்ட உத்தமர்க்கே. |
| |
மண்பா
தலம்புக்கு மால்கடல் மூடிமற் றேழுலகும்
விண்பால் திசைகெட் டிருசுடர் வீழினு மஞ்சல் நெஞ்சே
திண்பால் நமக்கொன்று கண்டோந் திருப்பா திரிப்புலியூர்
கண்பாவு நெற்றிக் கடவுட் சுடரான் கழலிணையே. |
| |
கன்னெடுங்
காலம் வெதும்பிக் கருங்கடல் நீர்சுருங்கிப்
பன்னெடுங் காலம் மழைதான் மறுக்கினும் பஞ்சமுண்டென்
றென்னொடுஞ் சூளறும் அஞ்சனெஞ் சேயிமை யாதமுக்கட்
பொன்னெடுங் குன்றமொன் றுண்டுகண் டீரிப் புகலிடத்தே. |
என்பனவாதி அப்பர் சுவாமிகளது தேவாரத் திருவாக்குக்களால் அறிக.
அப்பர்சுவாமிகள் நீற்றறையில் ஊறின்றிக் குளிர்ந்திருந்த
காலத்தும்,
கடலிற் கல்லே தெப்பமாக மிதந்து வந்த காலத்தும், பிற இடத்தும்
இக்கருத்தையே காண்க.
|
|
|
|