பக்கம் எண் :


190 திருத்தொண்டர்புராணம் மூலமும் உரையும்

Periya Puranam
ஞானபோதம் 10, 11, 12-ம் சூத்திரங்களின் கருத்தாவன. உலகத்தாரைத்
தீமைபோக்கி உய்விப்பதற்கே நம்பிகள் அவதரித்தார் என்பதை முன்னர்க்
கூறினார்.

     உலகம் - உயிர்கள். உய்தல் - நம்பிகள் நடந்துகாட்டிய சிவ
வழிபாட்டில் நிற்பதாலும், சொல்லிக்காட்டிய திருத்தொண்டத்தொகை
அருண்மொழி பயில்வதாலுமாம்.

     அவதாரம் செய்தல் - பிறரை உய்விக்க வருதல். ஆதலின் உலகம்
உய்ய அவதரித்தார் என்றார். மேற்பாட்டினுரையிற் காண்க. பிற இடத்தும்
இவ்வாறே கொள்க.  3

150. தம்பிரா னருளி னாலே தவத்தினான் மிக்கார்
                                 போற்று
 
  நம்பியா ரூர ரென்றே நாமமுஞ் சாற்றி மிக்க
ஐம்படை சதங்கை சாத்தி யணிமணிச் சுட்டி
                                 சாத்திச்
செம்பொனா ணரையின் மின்னத் தெருவிற்றே
                          ருருட்டு நானில்.
4

151. நரசிங்க முனைய ரென்னு நாடுவா ழரசர் கண்டு  
  பரவருங் காதல் கூரப் பயந்தவர் தம்பாற் சென்று
விரவிய நண்பி னாலே வேண்டினர் பெற்றுத்
                                  தங்கள்
அரசிளங் குமரற் கேற்ப வன்பினான் மகன்மை
                              கொண்டார்.
5

     150. (இ-ள்.) தம்பிரான்.......சாற்றி - (அவதரித்தாராகிய அவர்) தாம்
அடிமை செய்யும் தமது பெருமானது அருளினாலே, மாதவர்களும்
போற்றத்தக்க நம்பியாரூரர் என்ற திருநாமம் சூட்டப்பெற்றவராய்;
மிக்க.......மின்ன - (காவல் தொழிலில்) மிகுந்த ஐம்படையும் சதங்கையும்
அணியப்பெற்றும், அழகிய மணிகளிழைத்த சுட்டி அணியப்பெற்றும்,
செம்பொன் நாண் திருவரையில் விளங்கும்படியாக; தெருவில்..........நாளில் -
தெருவிலே சிறுதேர் உருட்டி விளையாடுகின்ற நாள்களில் (ஒருநாள்), 4

     151. (இ-ள்.) நரசிங்க.......கூர - அந்நாட்டை வாழ்வுபெற அரசுபுரியும்
நரசிங்க முனையர் என்னும் அரசர் கண்டு இவரிடத்தே சொல்ல அரிய
ஆசை மிகுந்ததனாலே; பயந்தவர் ....... கொண்டார் - பெற்றோர்களிடம்
போய் நண்புரிமையினாலே இக்குழவியினை வேண்டிப்
பெற்றுக்கொண்டுபோய்த் தங்கள் மரபில் அரசகுமாரனைப் போல அன்பு
மிகுதியினால் தமக்கு மகனாந் தன்மையிலே ஏற்றுக்கொண்டனர்.     5

     150. (வி-ரை.) தம்பிரான் - தமக்கு உரிய பெருமான். அருளினாலே
நாமமும் சாற்றி - என்று கூட்டுக. சாதகர்மம் முதலிய சடங்குகளில் பூர்வ
புண்ணியத்தின் வசமாகக் கிடைத்த இப்பிறவி என்று தொடங்கிக் காணும்
வழக்கு உண்மையால், இங்கு இவர் அவதரித்து நாமமிடப்பெற்றது முன்
புண்ணியப்பயனாகிய தம்பிரானருளினாலே என்றார். அருளினாலே -
அருளைப் பெற்றமையினாலே (நம்பியானவர்) - என்பது இராமநாதச்
செட்டியார் உரைக்குறிப்பு. சாற்றி - சாற்றக்கொண்டு - சாற்றப்பெற்று -
என்னும் பொருளில் வந்தது.

     சாற்றி - சாத்தி - சாத்தி - செயப்பாட்டுவினைகள் செய்வினையாகக்
கூறப்பட்டன.

     தவத்தின் மிக்கார் போற்றும் - போற்றும் நாமம் என்க. உபமன்னிய
முனிவர் முதலிய மாமுனிவர்களும் எடுத்துத்துதிக்கின்ற திருப்பேர் ஆதலின்
மிக்கார் போற்றும் என்றார். தவத்தினின் மிக்கார் - மாதவர்கள் -
பெருமுனிவர்கள். இது க. சதாசிவஞ் செட்டியார் கண்ட உரை. முனிவர்கள்
வெள்ளையானையுடன் வந்து நம்பிகளைத் திருக்கயிலைக்கு அழைத்துச்
சென்றமையும், உபமன்னிய முனிவர் “நம்பியாரூரன் நாந்தொழுந்
தன்மையான்“ என்று எடுத்து வணங்கித் துதித்ததும் இங்குவைத்துக்காண்க.
பெருமிழலைகுறும்பநாயனார் - கழறிற்றறிவார் நாயனார் - சோமாசிமாற
நாயனார் முதலிய பெருமக்கள் போற்றியதும் காண்க.