| தில்லைவாழந்தணர்சருக்கம் | 191 |
Periya Puranam
இவ்வாறன்றிச்,
சடையனாரும் இசைஞானியாரும் எனக்கொண்டு,
‘அவர்கள், தங்கள் தவமிகுதியினால் இவரை மகனாக அடைந்தவர், யாவரும்
போற்றும் நாமம் சாத்தி“ என்று உரைப்பாரும், பெற்று என்று பாடம்
கொண்டு தவத்தினான் மிக்கார் அங்குக் கூடியிருந்த பெரியோர் நாமகரணம்
செய்து என்றுரைப்பாரும், சடையனார் தமது மகனாகப்பெற்று என்று
உரைப்பாரும் ஆகப் பலரும் பலவாறு உரை கண்டனர். சாற்றி - சாத்தி -
சாத்தி - மின்ன - உருட்டு நாளில் என்று வினை எச்சங்கள் ஒரே
எழுவாயின் வினைகொண்டு முடியுமாறு பொருள் கொள்ளுதலே சிறப்பென்பர்.
நம்பி ஆரூரர் - ஆரூரர்
- பிள்ளைக்குப் பெற்றோர் இட்ட பெயர்.
திருவாரூர்ப் பெருமானுக்கு அடிக்குடியாக உள்ள குடியிலே வந்தமையால்
இப்பேர் இக்குடியிலே வரும் பிள்ளைகளுக்கு இட்டனர் என்க. “ஆரூரன்
பேர் முடிவைத்த.....“ “திருவாரூர்ச் சிவன் பேர் சென்னியில் வைத்த“
என்பனவாதி நம்பிகளது தேவாரங்கள் காண்க. இவர் பாட்டனார்க்கும்
(பேரனார்) இப்பெயர் இருந்தமை பின்னர் இச்சரிதத்திற் காணலாம். வரிசை
205 பாட்டும் பிறவும் காண்க. நம்பி - சிவப்பிராமணர்களின்
மரபுக்குரிய
பெயர். நம்பியாண்டார் நம்பி - முதலிய பேர்களையும்,
“நம்பி முதல்
திருவலகுவரை“ முதலிய வழக்குகளையும் காண்க.
நாமமும் சாற்றி
- சைவர்க்குரிய 16 சடங்குகளில் ஒன்று. நாமகரணம்
என்பர்.
ஐம்படை
- காத்தற் கடவுளாகிய திருமாலுக்குரிய சங்கு - சக்கரம் -
வாள் - தண்டு - வில் என்ற ஐந்து ஆயுதங்களின் உருவங்களிற் பொன்
முதலியவற்றால் அணிகள்செய்து சிறுவர்களுக்குக் காவலாக மார்பில்
அணிவது. இது பண்டைக் காலமுதல் தமிழர்களின் மரபு. பிள்ளைத் தமிழ்ப்
பிரபந்தத்திலே திருமால் காக்க என முதலிற் கூறும் மரபும் காண்க.
“ஐம்படையின், பூட்டார் மார்பிற் சிறிய மறைப் புதல்வன்“ (நமிநந்தி
- புரா -
33). “ஐம்படை மார்பிற் காணேன்......“(திருவிளை - மாமனாக - பட).
சதங்கை - இடையிலும் காலிலும் அணிவது. ஐம்படையும்
சதங்கையும் என
உம்மைத் தொகை. “ஐம்படைச் சதங்கை“ என்ற பதிப்புகள் சரியனறு
போலும். சாத்தி - சாத்தக் கொண்டு.
தேருருட்டுதல்
- சிறு தேர் உருட்டி விளையாடுதல். இது பிள்ளைப்
பருவங்களில் ஆண்பிள்ளைகட்குரிய விளையாட்டு. இது ஆண்பாற் பிள்ளைத்
தமிழ்ப் பருவங்களில் ஒன்றாதல் காண்க. மூன்றாண்டுவரை இப்பருவங்களுக்
குரிய வயது என்பர். இதற்கு எழுவாய் அவதரித்தாராகிய அவர் - என
மேற்பாட்டிலிருந்து வருவித்துக் கொள்க. (அவர்) - அருளினாலே - நாமமும்
சாற்றக் கொண்டு - சாத்தி - சாத்தி - மின்னத் - தேருருட்டு நாளில்.
நாமமும் சாத்தி -
என்பதும் பாடம். 4
151. (வி-ரை.)
நரசிங்க முனையர் - அக்காலத்தே திருமுனைப்பாடி
நாட்டை ஆண்ட அரசர். வரிசை - 147-ம் பாட்டின் கீழ் உரை காண்க.
இவர்கள் ஒரு சிற்றரச மரபினைச் சேர்ந்தவர். பின்னர் நரசிங்கமுனையரைய
நாயனார் புராணத்திலே “திருமுனைப்பாடி, நாடாளுங் காவலனார் நரசிங்க
முனையரையர்“ (1), “இம்முனையர் பெருந்தகையார்“ (2) என்பதுங் காண்க.
காதல் கூர
- ஆசை மிகுந்ததனாலே . இவர் சுந்தரராதலால் இவரது
பேரழகினாலே ஆசைகொண்டார். பயந்தவர் -
பெற்றோர் (சடையனார்).
விரவிய நண்பினாலே
- முன்னரே அவரிடம் தமக்கு விரவியிருந்த
நண்புரிமையினாலே என்க. அவ்வாறல்லாத வழி அரசர் குடிகளிடம் மகனைக்
கேட்டலும், பெற்றோர் மனமொத்துத் தருதலும் இல்லையாம்; அது வலிந்து
கோடலின்பாற்பட்டுப் பகையரசின் செயலாய் முடியும்; ஆதலால் நண்பினாலே
வேண்டினர் பெற்று என்றார்.
வேண்டினர் பெற்று - வேண்டிப்பெற்று.
வினைமுற்று
எச்சப்பொருளில் வந்தது. முற்றெச்சமென்பர். அரசிளங்குமாற்கேற்ப
-
தன்குமாரனை வளர்த்தல்போல.
|
|
|
|