| 192 | திருத்தொண்டர்புராணம் மூலமும் உரையும் |
Periya Puranam
அன்பினால்
மகன்மை - அன்புகாரணமாக மகனாந் தன்மை
அபிமானபுத்திரன் என்பர். வரும்பாட்டிற் காதற் பிள்ளை என்பதும் காண்க.
எனவே, நம்பிஆரூரர் பெற்றோர்க்கு மகனாகவும், அரசனுக்கு மகனாந்
தன்மையுடையராகவும் வளர்ந்தனர். இதனைப் பின்னர் வரும் பாட்டிலும்,
19-வது பாட்டிலும் காண்க.
நாடுவாழ் அரசர்
- நாடு தன்கீழ், இனிது வாழும்படி அரசுபுரிவர்.
இந்நரசிங்கமுனையரையே இப்புராணத்துக் கூறும் நாயன்மார்களின் ஒருவர்
என்றும் கூறுவர். இது ஆராயத்தக்கது. இச்சரிதப் பகுதி,
“நாதனுக்கூர்
நமக்கூர் நரசிங்க முனையரையன்
ஆதரித் தீசனுக் காட்செயு ழர்அணி நாவலூர்....“
-
திருவெண்ணெய்நல்லூரும் திருநாவலூரும் - 11 |
என்ற நம்பிகள் தேவாரத்தாலும்
அறியப்பெறுவதாம். இப்பாட்டினால்
அந்தணர் குலத்தவரை அரசர் மனைகளிற் பிள்ளையாய் வளர்ப்பது அந்நாள்
வழக்கங்களில் ஒன்று என்று தெரிகிறது. இந்நாளிலும் கொச்சி முதலிய சில
சுதேசங்களின் அரசர்கள் பிராமணருடன் சமமான உணவுரிமை முதலியன
பெற்று நிகழ்வது இவ்வழக்கத்தின் எச்சம் போலும்.
வேண்டினர் பெற்று - மகன்மை கொண்டார் - வேண்டுதல்
-
தரப்பெறுதல் கொள்ளுதல் இவை தருமசாத்திரப்படி மகனாகப் பெறுதற்குரிய
அங்கங்கள். 5
| 152.
|
பெருமைசா
லரசர் காதற் பிள்ளையாய்ப் பின்னுந்
தங்கள் |
|
| |
வருமுறை
மரபின் வைகி வளர்ந்துமங் கலஞ்செய்
கோலத்
தருமறை முந்நூல் சாத்தி யளவிறொல் கலைக
ளாய்ந்து
திருமலி சிறப்பி னோங்கிச் சீர்மணப் பருவஞ்
சேர்ந்தார். |
6 |
(இ-ள்.)
பெருமை............வளர்ந்து - பெருமை சான்ற அரசரது
அன்புக்குரிய மகனான பின்னரும் தமது சைவ அந்தணர் மரபுக்குரிய
ஒழுக்கத்திலே நின்று வளர்ந்து; மங்கலம்........ஆய்ந்து - அவ்வொழுக்
கத்திற்குரியபடி உரிய வயதளவிலே பூணூல் சாத்தும் சடங்கும் பள்ளியில்
வைக்கும் சடங்கும் செய்யப் பெற்றாராய் அளவற்ற கலைகளை எல்லாம்
ஆராய்ந்து; திருமலி சிறப்பின் ஓங்கி - அந்தக் கலைஞானங்களாகிய கல்விச்
செல்வமும், அன்பினாற் கொண்ட அரசகுமாரனுக்குரிய பொருட் செல்வமும்
கூடி மிகுந்த சிறப்பினால் உயர்ந்து; சீர்......... சேர்ந்தார் - சீருடைய
மணஞ்செய் பருவத்தை அடைந்தார்.
(வி-ரை.)
பெருமை சால் - பெருமை பொருந்திய - பெருமை மிகுந்த.
பிள்ளையாய்ப் பின்னும்
- அரசரது காதலுக்குரிய பிள்ளையாயின
பின்னரும். உம்மை சிறப்பும்மை. அரசர் பிள்ளையாயின பின்னரும் தமது
குலத்துக்கு உரிய ஒழுக்கத்தைக் கைவிடாது கொண்டனர். செல்வம்
- பதவி
முதலிய, உடம்போடு போய்விடத்தக்க, உலகப் பெருமைகள் வந்தபோது,
உயிரோடு செல்லும் குல ஒழுக்கத்தை வழுவவிட்டுவிடுவார் அனேகர்.
அதுபோலல்லாமல் - என்று குறிக்கப்பின்னரும் என்று சிறப்பும்மை தந்து
கூறி உலகுக்கு அறிவுறுத்தினார் ஆசிரியர்.
மங்கலஞ் செய் கோலத்து முந்நூல் சாத்தி - உபநயனமாகிய
சடங்கு
முடித்துப் பூணூல் சாத்தக் கொண்டு. இதன் விரிவுகள் திருஞானசம்பந்த
சுவாமிகள் புராணத்திலே,
| “தோலொடு
நூல் தாங்கினார்..........“ |
(263) |
“உபநயன
முறைமையாகும் இருபிறப்பினிலைமையினைச் சடங்கு காட்டி
......“ (264) என்று வரும் பாட்டுக்களிற் காண்க. இங்குக் குறித்த
(வித்தியாரம்பம் என்ற) கலை பயிற்றுவித்தல் ஐந்தாவது வயதிலும், உபநயனம்
என்ற பூணூல் சாத்துதல் ஏழாவது வயதிலும் செய்யப் பெறுவன.
| “ஐந்து
வருடம் அவர்க்கணைய ...... செவ்வியுணர்வு சிறந்ததால்“ -
சண்டீ - புரா - 13 |
|
|
|
|