| தில்லைவாழந்தணர்சருக்கம் | 195 |
Periya Puranam
(வி-ரை.)
குலமுதல் அறிவு - குலத்திற் கின்றியமையாத
அறிவு. குலம்
முதலியவற்றின் அறிவு என்றுமாம்.
கோத்திரமுறை - கோத்திரம்
- குலத்தின் உட்பிரிவு. அதன் முறை
- மணஞ்செய் கோத்திரமும் கிளைக்கோத்திரமும் பிரவரமும் அவை
அல்லாதவாறும். கோத்திரமும் பிறமுறைகளையும் என்றும் கூறுவர்.
நலமிகுமுதியோர் - இருதிறத்தார்க்கும்
நன்மை மிகும்படிச்
செய்வோர். மிகும் - மிகுவிக்கும் எனப் பிறவினைப்
பொருளில் வந்தது.
மிக்கோரும் தேர்ந்தோரும் ஆகிய முதியோர் என்க. இந்நாளிலே
கைக்கூலிக்காக ஒருபுடை பேசும் கலியாணத்தரகர் அந்நாளில் இலர்.
நன்மை ஏற்றல் - மனத்தின் செய்கை.
மலர்தருமுகம் -
அதுகாரணமாகப் புறத்தில் நிகழும் மெய்ப்பாடு. ஏற்று
- (சொல்லின்
நன்மையை) யங்கீகரித்து.
மணம்புரி செயலின் வாய்மை பல பெயர் - கணம் - நூல்
முதலியவாக
விதித்த மணப் பொருத்தங்களும் நிமித்தம் முதலிய பிறவுமாம்.
ஒத்த பண்பு -
அவை வாய்மை விதிக்கு மாறுபடாது இணங்கி
யிருத்தல்.
அன்புநேர்ந்தான்
- அன்புநிகழும்மணச்செயலுக்கு இசைந்தான்
என்றலுமாம்.
அறிவின்மிக்க - அறிவுமிக்க
- என்பனவும் பாடம். 8
| 155.
|
மற்றவ
னிசைந்த வார்த்தை கேட்டவர் வள்ள
றன்னைப் |
|
| |
பெற்றவர்
தம்பாற் சென்று சொன்னபின் பெருகு
சிந்தை
யுற்றதோர் மகிழ்ச்சி யெய்தி மணவினை யுவந்து
சாற்றிக்
கொற்றவர் திருவுக் கேற்பத் குறித்தநா ளோலை
விட்டார்.
|
9 |
(இ-ள்.)
வெளிப்படை. இசைந்ததனை அவ்வாறு கேட்ட முதியோர்
ஆரூரரைப் பெற்றோரிடம் சென்று அறிவித்தனர். அவர் மனமிக மகிழ்ந்து,
ஆரூரர் காதற் றந்தையாகிய அரசர் சிறப்புக் கேற்றபடி திருமணத்தை
அறிவிக்குமாறு குறித்து எழுதிய நாளோலையைப் பெண் வீட்டாருக்கு
அனுப்பினார்கள்.
(வி-ரை.)
கேட்டவர் - மணத்திறம் செப்பிப் பெண்கேட்க
வந்தவர்.
இந்த வார்த்தையை நேரே கேட்டவர் என்றலுமாம்.
வள்ளல்
- நம்பிஆரூரர். தென்றிசை வாழ்ந்திடவும்
தீதகன்றுலகமுய்யுவும் தேவார அருண்மொழிகளை வரையாது கொடுப்பவர்.
உலகமுய்யும் வழிகளை அருள்பவர்.
கொற்றவர் திருவுக்கேற்பக்
குறித்த - நாளோலையிற் குறித்த
பொருள்கள் நம்பியாரூரரைப் பெற்ற சடையனாரது மரபுக் கேற்பனவோ?
அன்றிக் காதற்றந்தையாகிய நரசிங்கமுனையரையர் தகுதிக் கேற்பனவோ
என்று ஐயம் நிகழ்த்துவோரை நோக்கி இவ்வாறு கூறினார்.
நாளோலை
- ஒரு சொல் நீர்மைத்தாய் மணநாளும் ஓரையும்
குறித்தெழுதிய ஓலையைக் குறித்தது. இது மணமகன் வீட்டார் மணமகள்
வீட்டார்க்கும் எழுதுவது. இவற்றின் விரிவைத் திருஞானசம்பந்த நாயனார்
புராணத்துட் காண்க.
குறித்த
- நாள் குறித்து. நாள் ஓலை என்று பிரித்து, ஓலை குறித்து
என்றும் அரசர் திருவுக்கேற்ப நாள் என்றும் கூட்டி உரை கூறுவாருமுளர்.
குறித்துநாள்
- என்பதும் பாடம். 9
| 156.
|
மங்கலம்
பொலியச் செய்த மணவினை யோலை
யேந்தி |
|
| |
அங்கயற்
கண்ணி னாரு மாடவர் பலரு மீண்டிக்
கொங்கலர்ச் சோலை மூதூர் குறுகினா ரெதிரே
வந்து
பங்கய வதனி மாரு மைந்தரும் பணிந்து
கொண்டார். |
10 |
|
|
|
|