பக்கம் எண் :


திருமலைச்சிறப்பு25

Periya Puranam
கூறுவர். இதன் கருத்தும் பொருளும் மேற்பாட்டையே அனுவதித்துக்
கூறியதாக வெள்ளையாகவே காணப்படுகின்றது. மேற்பாட்டிலே பிரமனுக்குச்
சொன்ன கருத்தும் பொருளுமே இப்பாட்டில் விட்டுணுவுக்கும்
சொல்லப்பட்டது. மேற்பாட்டில் ஊர்தியை யுடையவன், ஊர்தியைக் காணாது
மயங்குகின்றான். இப்பாட்டில் ஊர்தி, உடையவனைக் காணாது
மயங்குகின்றது.

     வெண் குழையோன் - சிவபெருமான் - நெடியோன் - விட்டுணு -
முழை - மலையிற் பொந்து - பெருந் துவாரம்.

     துதிக்கையோன் ஊர்தி - பெருச்சாளி. இது உருவத்தால் பன்றிபோல்
தோற்றப்பட்டு விட்டுணுவினது ஆதிப் பன்றி நிலையைக் கருடனுக்கு
நினைப்பூட்டிற்று. பெருச்சாளியும் மலையின் ஒளியால் வெள்ளையாய்த்
தோன்றியபடியால் இது மாலாகிய வெள்ளைப்பன்றியோ என்று கருடன்
எண்ணியது.

     கருடன் தனது தலைவனாகிய திருமாலைக்காணாது தேடிற்று;
திருமலையடியில் ஒரு வெள்ளிய பெருச்சாளியைக் கண்டு அது
வெள்ளைப்பன்றியோ என்று நினைத்தது; முன்னோர்கால் செங்சுடராகிய
அண்ணாமலையைப் போலவே இது ஒரு வெண்சுடர் மலை என்று நினைத்துத்
தனது முன் வடிவில் வெள்ளைப் பன்றியாக மண்ணைத் தோண்டி
அடிதேடுகின்றானோ தன் தலைவன்? என நினைத்து அதனைச் சார்ந்தது;
என்பது இப்பாட்டின் கருத்தாம்.1      8

19. அரம்பைய ராடல் முழவுடன் மருங்கி
     லருவிக ளெதிரெதிர் முழங்க
 
  வரம்பெறு காதன் மனத்துடன் தெய்வ
     மதுமலரிருகையு மேந்தி
நிரந்தர மிடைந்த விமான சோபான
     நீடுயர் வழியினா லேறிப்
புரந்தரன் முதலாங் கடவுளர் போற்றப்
     பொலிவதத் திருமலைப் புறம்பு.
9

     (இ-ள்.) அரம்பையர் ... முழங்க - அரம்பை முதலிய தெய்வப்
பெண்கள் ஆடலுக்கேற்ப முழக்கும் முழவுகளோடு, பக்கத்தே ஓடும்
மலையருவிகள் எதிர் எதிர் இசைப்பனபோலச் சத்திக்க; வரம்பெறும் ... ஏந்தி
- இறைவனிடத்தே தாங்கள் குறித்த வரங்களைப்பெறவேண்டும் என்னும்
ஆசையுடைய மனத்தோடு தேன்நிறைந்த கற்பகப் புதுப்பூக்களை இரண்டு
கையிலும் ஏந்திக்கொண்டு; நிரந்தரம் ... ஏறி - நெருங்கிய விமானங்களுடன்
கூடிய படிவழியேறி வந்து; புரந்தரன் ... புறம்பு - இந்திரன் முதலிய
தேவர்கள் துதிக்க விளங்குவது அத்திருமலையின் வெளிச் சாரல்.

     (வி-ரை.) ஆடல் முழவு - ஆடலுக்கிசைய முழக்கப்படும் முழவு.
“வலம் வந்த மடவார்கள் நடமாட முழவதிர” (திருஞானசம்பந்தசுவாமிகள்
தேவாரம் - திருவையாறு
)

     வரம்பெறு காதல் மனம் - போகபதங்களின் நாயகர்களாதலின் தங்கள்
தங்கள் பதவிகளுக்கு உரிய இன்பங்களைத் தரப்பெறவும் அவற்றிற்கு வரும்
துன்பங்களைப் போக்கவும் வேண்டும் வரம்பெறும் மனம்.

     தெய்வ மதுமலர் - கற்பக முதலிய தேவ வுலகத்து மலர்கள். மதுமலர்
- தேன்நிறைந்த புதுப் பூ.


     1. இவ்வாறு வரும் வெள்ளிப் பாடல்கள் பல மேலும் பல இடங்களிற்
காணலாம். அவற்றைப்பற்றிச் “சேக்கிழார்”என்ற லில்“இடைச்செருகல்கள
(201 - 224) என்ற தலைப்பில் விரித்தெழுதியுள்ளேன்; ஆண்டுக் காண்க.