பக்கம் எண் :


26 திருத்தொண்டர்புராணம் மூலமும் உரையும்

Periya Puranam

     நிரந்தர மிடைந்த விமான சோபான நீடு உயர் வழி - எங்கும் நெருங்கி
- விமானங்களுடன் கூடிய படிகளையுடைய நீண்டு உயர்ந்த வழி. படிஏறும்
வழியிலே நெருக்கமான மண்டபங்களும் அவற்றிலே விமானங்களும் உண்டு
என்க.

     புரந்தரன் முதலாம் கடவுளர், மலர், கைஏந்திச் சோபானவழியினால்
ஏறிப்போற்றத் திருமலைப் புறம்பு பொலிவது என்று முடிக்க.

     இந்திரன், மால், பிரமன் முதலிய பற்பல தேவர்களும் தங்களுக்கு
அசுரர்களாலே துன்பம் நேர்ந்தபோது, திருக்கயிலை சென்று வரங்கிடந்து
வேண்டியவற்றைப் பெற்ற வரலாறு கந்தபுராணம் முதலிய மாபுரணங்களிற்
காண்க.

     மேற்கூறிய மூன்று பாட்டுக்களாலும் பிரமன் முதலிய தேவர்கள்
இறைவனை வணங்கி வரம்பெறக் காத்துக் கொண்டிருந்தார்கள் என்றும்,
அவ்வாறு அவர்கள் காத்து நிற்பது திருமலையின் வெளிப்புறங்கள் என்றும்,
அவர்கள் தங்கள் பக்குவத்திற்கேற்பச் சோபானக் கிரமத்திலே
சிவபெருமானைப் பூசித்து வரம்பெற உள்ளவர்கள் என்றும், குறித்தவாறு.
“தடஞ்சிலா தலசோபா னத்தாலேறி, வாழ்ந்திமையோர் குழாம் நெருங்கு
மணிநீள் வாயில”்என்று தென்கயிலையாகிய திருக்காளத்திக் கோயில்
வாயிலைக் கூறுதல் காண்க. (திருஞான - புரா - 1022).

     கடவுளர் - தேவர்கள், முழுமுதற் கடவுள் அல்லர் என்பது வரம்பெறும்
என்றமையானறிக, உபசாரவழக்கில் இவர்களும் கடவுளர் எனப் பெறுவார்கள்.

“அரியய னிந்திரன் சந்திரா தித்த ரமரரெல்லாம்
உரியநின் கொற்றக் கடைத்தலை யாருணங் காக்கிடந்தார்;
புரிதரு புன்சடைப் போக முனிவர் புலம்புகின்றார்;
எரிதரு செஞ்சடை யேகம்ப! வென்னோ திருக்குறிப்பே”
“உந்திநின் றாருன்ற னோலக்கச் சூளைகள் வாய்தல்பற்றித்
துன்றிநின் றார்தொல்லை வானவரீட்டம் பணியறிவான்
வந்துநின் றாரய னுந்திரு மாலும்; மதிற்கச்சியாய்!
இந்தநின் றோ;மினி யெங்ஙன மோவந் திறைஞ்சுவதே”

என்பனவாதி திருவிருத்தங்களையும் காண்க.

இக்கருத்தை மேல்வரும் பாட்டு விளக்குதலும் காண்க.     9

20. வேதநான் முகன்மால் புரந்தரன் முதலாம்
     விண்ணவ ரெண்ணிலார் மற்றும்
 
  காதலான் மிடைந்த முதற்பெருந் தடையாங்
     கதிர்மணிக் கோபுரத் துள்ளான்
பூதவே தாளப் பெருங்கண நாதர்
     போற்றிடப் பொதுவினின் றாடும்
நாதனா ராதி தேவனார் கோயி
     னாயக னந்தியெம் பெருமான்.
10

     (இ-ள்.) வேதநான்முகன் ... உள்ளார் - (மேலே கூறியபடி) பிரமன்
விட்டுணு இந்திரன் முதலிய தேவர்களும் மற்றும் எண்ணில்லாத முனிவர்
முதலியோர்களும் வரம்பெறும் ஆசையுடன் நெருங்கிக் கூடித் தடைபட்டு
வெளியே காத்திருக்கும் முதற் றிருவாயிலின் கோபுரத் துவாரத்திலே
வீற்றிருக்கின்றான்; பூதம் ... போற்றிட - சிவ பூதங்களும் வேதாளங்களும்
முதலிய கணநாதர்கள்