|
நந்திதேவர்
நெற்றிக்கண், நான்கு தோள், நீலகண்டம் முதலியவற்றுடன்
சிவரூபம் பெற்றவராய்க் கையிலே உடைவாளும் பிரம்பும் தாங்கியவராய்த்
திருக்கோயில் அதிகாரத்துடன் நிற்கும் முதல் அடியார், இடபதேவராவார்
தருமதேவதை. திரிபுர சங்காரத்திலே திருமாலும் இடப வடிவங்கொண்டு
சிவபெருமானைத் தாங்கினார். இடபமே அடியார்களுக்கு அருள்புரிய
இறைவன் எழுந்தருளும்போதெல்லாம் உகந்த ஊர்தியாகும்.
நந்தி
- துவிதியசம்பு; சம்புவுக்கு ஒப்பானவன் என்றும் கூறுப. நந்தி
-
நந்தம் நிறைதல்; எல்லா ஞானத்தாலும் நிறைந்தவர் நந்தி. 10
| 21.
|
நெற்றியிற்
கண்ணர் நாற்பெருந் தோளர்
நீறணி மேனிய ரனேகர்,
|
|
| |
பெற்றமேல்
கொண்ட தம்பிரா னடியார்,
பிஞ்ஞகன் றன்னருள் பெறுவார்,
மற்றவர்க் கெல்லாம் தலைமையாம் பணியும்
மலர்க்கையிற் சுரிகையும் பிரம்பும்
கற்றைவார் சடையா னருளினாற் பெற்றான்
காப்பதக் கயிலைமால் வரைதான். |
11 |
(இ-ள்.)
நெற்றிக்கண்ணர் ... அருள் பெறுவார் -
நெற்றிக் கண்ணும்
நான்கு தோள்களும் திருநீறு பூசிய மேனியும் உடையவர்களாயும்,
இடபவாகனத்தில் எழுந்தருளும் சிவபெருமானது அடியவர்களாயும்,
பெருமானது திருவருளைப் பெறுபவர்களாயும் அனேகர்களாகிய;
அவர்களுக்கெல்லாம் தலைமைஆம் பணியும் - அவ்வடியார்களுக்கெல்லாம்
தலைவராகிய திருப்பணிவிடையும்; மலர்க்கையில் சுரிகையும் பிரம்பும்
-
மலர்போன்ற கையிலே உடைவாள் பிரம்பு ஆகிய இவைகளையும்;
கற்றைவார்சடையான் ... வரைதான் - கற்றையாகக் கட்டிய நீண்ட
சடையையுடைய சிவபெருமானது திரு அருளினாலே பெற்றவராகிய நந்தி
யெம்பெருமானாற் காக்கப்படுகின்றது இந்தக் கயிலைப் பெருமலையேயாம்.
(வி-ரை.)
நெற்றியிற் கண்ணர் ... மேனியர் - சரியை,
கிரியை,
யோகம், என்னும் மூன்று பாதங்களுக்கும் முறையே சாலோகம், சாமீபம்,
சாரூபம் என்னும் மூன்று பதமுத்திகளை வகுத்தது சைவ சாத்திரம். இங்குக்
கூறியவர்கள் சிவபெருமானது திருவுருவத்தைப் பெற்ற அடியார்கள்;
யோகத்தாற் சாரூபம் பெற்றோர் என்க. தம்பிரான் அடியார் என்றும், அருள்
பெறுவார் என்றும் கூறும் இருவகையினரும் முறையே கிரியை சரியைகளாற்
பேறுபெற்றவர்கள்.
யோக நிலையை உலகத்தில் விளக்கிக் காட்டும்
ஆசாரியராய்
அவதரித்தவர் நம்பிகள். ஆதலின் அவர் எழுந்தருளும் சோதியானது
அதுபோலவே யோகநிலையில் பயனைப்பெற்றுச் சாரூபம் கொண்டவர்களாகிய
அடியார்களிடையே யோக ஒளியாய்ப் புகுகின்ற நிலை இங்குக்
குறிப்பிட்டவாறு; யோக நிலையினர் சாரூபம் பெறுதல் சாத்திரத்துக் காண்க.
|
சினமலி
அறுபகை மிகுபொறி சிதைதரு வகைவளி நிறுவிய
மனனுணர் வொடுமலர் மிசையெழு தருபொருள் நியதமும்
உணர்பவர்
தனதெழில் உகுவது கொடுஅடை தகுபரன்
-
திருச்சிவபுரம் - நட்டபாடை - 5
|
என்ற திருஞானசம்பந்த
சுவாமிகள் தேவாரத்துள், மனன் உணர்வொடு
நியதமும் உணர்பவர் என்ற குறிப்பையும் பின்னர் உபமன்னியமுனிவர் “சிவன்
தன்னையே உணர்ந்து ஆர்வம் தழைக்கின்றான்” என்பதனையும் நோக்குக.
“நறைமலி” என்ற மேற்படி பதிகம்
4-வது பாட்டுச் சரியையினையும்
கிரியையினையும் கூறுதல் காண்க.
|