Periya Puranam
“நில்லாத
நீர்சடைமேல் நிற்பித்தானை நிலமருவி நீரோடக் கண்டான்
றன்னை” (வாகீசர்) என்பனவாதி திருவாக்குக்கள் காண்க. நிலவு -
ஞானாச்சந்திரகலை; வேணி - அனைத்தையு மோரியல்பா லொருங்கறியுஞ்
சர்வஞ்ஞத்துவ மெனப்படுமொருபெருஞ் சுடர்முடி. உலாவிய என்பதனை
உலவும்பொருட்டு என்ற பொருளில் வரும் செய்யிய என்னும் வாய்பாட்டு
வினை யெச்சமாகக் கொண்டு, நிலா உலாவுந் தன்மை பெறும் பொருட்டுக்
கங்கைநீர் மலிந்த வேணி என்று உரைத்தலுமாம்; உலாவிய என்ற
வினையெச்சம் மலி என்ற வினை கொண்டது.
அலகில்
சோதியன் - “சோதி” - ஈண்டு ஞானவொளி. “இவ்வொளி,
விளக்க விளங்கும் இல்லக விளக்காகிய சுடர் விளங்கும், பல்லக விளக்காகப்
பலருங் காணும் ஞாயிறு முதலிய சுடர் விளக்கும், இந்திரிய அந்தக்கரண ஆன்மபோதமாகிய
ஆன்ம விளங்கும் அல்லதாய், இவை எல்லாவற்றையுங்
கடந்து, தற்பிரகாசமாயும் பரப்பிரகாசமாயும் நிற்றலான் அளவில் சோதியாய்,
எவற்றிற்கு மேலாக நிற்றலாற் பரஞ்சோதியாய்த், தானே விளங்குதலாற்
சுயஞ்சோதியாய், உள்ள பரஞானமான சிவஞானச் சோதி என்றறிக.” -
கயப்பாக்கம் - சதாசிவ செட்டியார், B. A. அவர்கள் குறிப்பு. இஃது இறைவனது
அருவுருவத் திருமேனியாம். “திகழ் ஒளியை” என்ற வாகீசர்
திருவாக்கும் காண்க. அலகில் - அளவில்லாத; அளவிட முடியாத. பின்னர்த்
தடுத்தாட்கொண்ட புராணம் 193 -வது பாட்டில் “சோதியா யெழும் சோதியுட்
சோதிய” என்ற இடத்து உரைக் குறிப்புப் பார்க்க. மேலே கூறிய அருவம் -
உருவம் - அருவுருவம் என்ற திருமேனிகளையும் தாங்கிய இறைவனே
அம்பலத்திலே ஆடுகின்றவன் என்பதாம். அம்பலத்தாடுவான்
என்றது
உருவத் திருமேனி. அம் பலமும் ஆடும் இயல்பும்
பயனும்பற்றித் “தோற்றந்
துடியதனில்”’ “சேர்க்குந் துடிசிகரம்” “மாயை தனையுதறி”
(உண்மை
விளக்கம்) முதலிய ஞான நூல்களையும்; மூவகைத் திருமேனிகளி னியல்பு
பற்றி,
“உருமேனி
தரித்துக் கொண்ட தென்றலு முருவி றந்த அருமேனி
யதுவுங் கண்டோம்; அருவுரு வான போது
திருமேனி யுபயம் பெற்றோம்; செப்பிய மூன்று நந்தங்
கருமேனி கழிக்க வந்த கருணையின் விளைவு காணே”
-
சிவஞானசித்தியார்
|
“மன்றி
லானவெம் மியல்புனக் குரைக்கின் மாசி லாவுரு மூன்ற
வற்றருவம்
ஒன்று பேரொளி யொன்றரு வுருவ மொன்று தானரு ளுருவமென்
றுணர்வாய்”
-
திருவாதவூரர் புராணம்
|
முதலிய ஆதாரங்களையும்
காண்க; இருதய கமல சிற்சபா நடன தசரவித்தை
வரலாறும் இதனை உபாசிக்கு முறையும் பற்றிச் சாந்தோக்கியங் கைவல்ய
முதலிய உபநிடதங்களினும், சிவாகமங்களினும் கண்டு கொள்க.
“‘உலகெலா
முணர்ந் தோதற் கரியவன்’ என்பதனாற், சொரூப சிவ
வியல்பும், ‘அலகில் சோதியன்’ என்பதனாற் றடத்த விலய சிவவியல்பும்,
‘அம்பலத்தாடுவான்’ என்பதனான் தடத்த அதிகார சிவவியல்பும்’ ‘நிலவு
லாவிய நீர்மலிவேணியன’ என்பதனான் தடத்த போக சிவலியல்பும்
கூறப்பட்டமை யறிந்து கொள்க.” - கயப்பாக்கம் சதாசிவள செட்டியார், B. A.
அவர்கள் குறிப்பு.
இனி,
இவ்வாறன்றி, அரியவனாகிச் சோதியன் என்றும், வேணியனாகி
ஆடுவான் என்றும் இரண்டாகப் பகுத்து நிரனிறையே கூட்டிப் பொருள்
உரைத்தலும் ஆம். இங்ஙனம் கொள்ளும்போது அவனே தானாகிய வந்தெறி
ஏகனாகி நின்று கருவி கரணங் கடந்து அறியப்பெறும் நிலை ஒன்றும்
அவற்றுடன் கூடி அறியப்படும் நிலை ஒன்றும் குறித்தவாறு.
“உணர்வி னேர்பெற வருஞ்சிவ போகத்தை யொழிவின்றி யுருவின்கண்,
அணையு மைம்பொறி யளவினு மெளிவர அருளினை” (திருஞான - புரா
- 161).
|
|
|
|