|
(வி-ரை.)
ஒருவரை அன்பினோடு கழல் வணங்க என்றும்
போதுவார் - ஒருநாள் - பாங்கியர் சூழப் - போந்தார் - என்று கூட்டுக.
277-வது பாட்டில் பரவையாரது திருவவதாரமும் 278
முதல் 283 வரை
வளர்ச்சியும், செயலும் கூறினார். அவதரித்து வளர்ந்ததின் பயன் பனிமலை
வல்லிபாதம் கூட இறைவனை வழிபடுதலே யாதலின் இந்த ஆறு
திருப்பாட்டுக்களும் தொடர்ந்த முடிபாய்க் கூறின அழகு காணத்தக்கது.
சூழ -
என்ற சொல் அழகுபெறச் சொற்பின் வருநிலையாய் அடுக்கி
அமைத்திருத்தல் அநுபவிக்கத்தக்கது. இது ஆசிரியரின் சிறப்பியல்புகளில்
ஒன்றாம் என்பது முன்னர்க் கூறப்பெற்றது. தோழிகள் தம்மைச் சூழவும், தம்
குழல்வாசம் திசை எல்லாம் சூழவுமாகத் தாம் தெருவு சூழப் போந்தார் என்க.
படர் ஒனி
- திருநகரச் சிறப்பிலே “படர்ந்த பேரொளிப் பன்மணி
வீதி“ என்றமை காண்க. படர்தற் குரித்தாய் ஒளியுடைய மறுகு என்க. மறுகு
சூழ்தல் - திரு வீதியை வலம்வந்து செல்லுதல்.
குழலின் வாசம்
- முதற்சாதிப் பெண்டிர்க்குக் குழலின் இயற்கையாய்
அமைந்த வாசம். தருமிக்குப் பொற்கிழி அளித்த திருவிளையாடலாலும்,
“கொங்குதேர் வாழ்க்கை“ என்ற திருப்பாசுரத்தாலும் அறிக. பரவையார்
உமையம்மையாரது சேடியாராதலின் இவ்வியல்பு இவர்க்கும் அடுத்த
தொன்றென்று உணர்க. பூக்கள் சூட்டிய செயற்கையாற் கூடிய வாசம்
என்றுரைப்பாருமுண்டு. எல்லார்க்கும் ஒத்தலின் இங்கு இப்புராணத்திற்கு
உரிய தலைவியர்களில் முதல்விக்கு அவ்வுரை சிறப்பின்மை காண்க. குழலின்
தேங்கமழ் வாசம் என்று கூட்டுக.
ஓங்கு பூங்கோயில்
- அருட்செயலால் ஒங்கியி (மிகுந்த) பூங்கோயில்,
உள்ளார் - அங்கே என்றும் நிலைத்து உள்ளவர்.
ஒருவர்
- தனக்குவமை இல்லாதவர் ஆதலின் ஒருவர் என்க. பதி
ஒருவரே என்பது வேதாகமங்களின் முடிபு.
போதுவார் - போதுவாராகிய பரவையார். வினையாலணையும் பெயர்.
ஒருநாள்
- வணங்கிச் சென்ற பலநாளில் ஒருநாளாய்க் காண; ஒரு -
ஒப்பற்ற என்றலுமாம். பரவையார் அவதாரப் பயன் பெறுநாளாதலின் இது
ஒப்பற்ற நாளாகுமென்பது வரும் நிகழ்ச்சியில் காண்க. 137
| 284.
|
அணிசிலம்
படிகள் “பார்வென் றடிப்படுத்
தன“மென்
றார்ப்ப,
|
|
| |
மணிகிளர்
காஞ்சி யல்குல் வரியர வுலகை வென்ற
துணிவுகொண் டார்ப்ப, மஞ்சு சுரிகுழற் கழிய
“விண்ணும்
பணியு“மென் றினவண் டார்ப்பப் பரவையார்
போதும்
போதில்,
|
138 |
| 285.
|
புற்றிடம்
விரும்பி னாரைப் போற்றினர் தொழுது
செல்வார்
|
|
| |
சுற்றிய
பரிசனங்கள் சூழவா ளுடைய நம்பி
நற்பெரும் பான்மை கூட்ட நகைபொதிந் திலங்கு
செவ்வாய்
விற்புரை நுதலின் வேற்கண் விளங்கிழை யவரைக்
கண்டார்.
|
139 |
284.
(இ-ள்.) அணிசிலம்பு
.... ஆர்ப்ப - (பாதங்களிலே) அணிந்த
சிலம்புகள் “இந்தப் பாதங்கள் இம்மண்ணுலகத்தை வெற்றி கொண்டு
அடிப்படுத்தன“ என்று சொல்வது போன்று சத்திக்கவும்; மணி கிளர் ...
ஆர்ப்ப - மணிகளுடன் விளங்கும் காஞ்சி எனும் அணியானது அரவு
உலகாகிய கீழுலகத்தை நிதம்பம் வெற்றி கொண்ட துணிவுடன் கிளர்ச்சி
செய்யவும்; மஞ்சு ... ஆர்ப்ப - சுருண்ட கூந்தலுக்கு மேகம்
தோற்றுவிட்டமையால் விண்ணுலகமும் பணியும் என்று கூட்டமாகிய
வண்டுகள் முழங்கவும்; பரவையார் போதும் போதில் - பரவையம்மையார்
மேற்சொல்லியபடி மறுகில் போகும்போது. 138
|